இடைத்தேர்தல் வருது? இரவோடு இரவாக எடப்பாடி போட்ட போன்.. பதறிப்போன மாஜிக்கள்.. யாரு? கீதா ஜீவனா?
சென்னை: அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிரான வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் நிலையில் அதிமுக இந்த வழக்கை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
தமிழ்நாடு அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. அவர் திமுக ஆட்சி காலத்தில் அதிக சொத்து குவித்ததாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.
1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்த போது கீதா ஜீவனின் அப்பா என்.பெரியசாமி சொத்து குவித்ததாக புகார் வைக்கப்பட்டது.
அவர் வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக ரூ2.31 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக புகார் வைக்கப்பட்டது. இந்த வருமானத்திற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டது. இதில் 6வது குற்றஞ்சாட்டப்பட்ட நபராக அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த அவரின் மகள் கீதா ஜீவன் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில்தான் தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. கீதா ஜீவன் சமூகநலத்துறை அமைச்சரும், தற்போதைய சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஆக உள்ளார். இவர் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ ஆவார்.

அதிமுக கவனம்
அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிரான வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அதிமுக தலைவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரிடமும் அவர்களது ஆதரவு சீனியர்கள் இது குறித்து விவாதித்திருக்கிறார்கள். குறிப்பாக,எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமாரிடம் நேற்று இரவு நீண்ட நேரம் பேசியிருக்கிறார். மொத்த அதிமுக டாப் தலைகளும் இதை பற்றித்தான் பேசி வந்துள்ளனர். மாஜி அமைச்சர்கள் பலர் மாறி மாறி போன் செய்து இது பற்றி தீவிரமாக பேசி வந்துள்ளனர்.

கீதா ஜீவன்
ஆனால் இந்த ஆலோசனைகளுக்கு பின் வேறு காரணம் இருக்கிறதாம். திமுக அமைச்சர் பதவி போகிறது, அதை வைத்து திமுகவை விமர்சனம் செய்யலாம் என்பதை தாண்டி அதிமுகவிடம் வேறு ஒரு பிளான் இருக்கிறதாம். அதில், கீதா ஜீவன் மீது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கின் முழு விபரங்களையும் கேட்டறிந்துள்ளார் எடப்பாடி. அப்போது, "ஆறாவது குற்றவாளியாக இருக்கும் கீதா ஜீவன் தண்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா?" என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி. இதனையடுத்து, கீதா ஜீவனுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவருடைய எம்.எல்.ஏ.பதவி காலியாகும். இதனால் சட்டப்படி அவரது தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்.

இடைத்தேர்தல்
அதை நாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். எதிர்கொள்வதில் சின்னம் ரீதியாக நமக்கு சிக்கல் உருவாகும் என்று விவாதம் நடந்து இருக்கிறது. ஏனென்றால் தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புதான் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. என்ன தேர்தல் வந்தாலும் அதிமுக சார்பாக போட்டியிட வேண்டும் என்றால் இரண்டு பேருமே கையெழுத்து போட வேண்டும். எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் கையெழுத்து போட வேண்டும். இதற்கு ஓ பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் எடப்படியோ தான்தான் இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறார். தான்தான் ஒற்றை தலைமை என்று கூறி வருகிறார்.

கையெழுத்து
இதனால் இடைத்தேர்தல் வந்தால் வேட்பாளர் மனுவில் எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் கையெழுத்து போடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி கையெழுத்து போட்டால், அவரே தான் இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை என்று ஒப்புக்கொண்டது போல ஆகிவிடும். இதனால் நேற்று இந்த விவகாரங்கள் பற்றி எல்லாம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து இருக்கிறாராம். இந்த விவாதம் நடந்த போது, "அப்படியே இடைத்தேர்தல் வந்தாலும் உடனடியாக வைக்கப்போவதில்லை. 6 மாத காலம் இருக்கு. அதற்குள், நீதிமன்ற வழக்கில் ஒரு முடிவு வந்துவிடும்.

வழக்கு முடியும்
ஒருவேளை, அடுத்த 2 மாதத்துக்குள் இடைத்தேர்தலை வைத்தாலும் நாம் எதிர்கொள்ளலாம். பார்க்கலாம் தீர்ப்பு எப்படி வருகிறதென்று " என ஜெயக்குமார் எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறாராம். ஓபிஎஸ் தரப்பிலும் இப்படிப்பட்ட விவாதங்கள் பேசப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் வந்தால், அதை வைத்து எடப்பாடிக்கு நாம் யார் என்று காட்டுவோம். அவருக்கு நமது பவரை காட்டுவோம். நம்மை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் வாக்குகள் எப்படி பிரியும் என்பதை அவருக்கு உணர்த்துவோம். இந்த தேர்தல் அதிமுக vs திமுக தேர்தலாக இருக்க கூடாது. இது எடப்பாடி vs ஓபிஎஸ் தேர்தலாக இருக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்களாம். ஆனால் இதற்கெல்லாம் கீதா ஜீவனுக்கு எதிராக தீர்ப்பு வர வேண்டும். அது முதலில் சாத்தியம் ஆகுமா என்பது சந்தேகமே.

தீர்ப்பு
இந்த நிலையில், கீதாஜீவனுக்கு எதிராக தீர்ப்பு வந்து,இடைத்தேர்தல் வந்தால் ஓபிஎஸ், இபிஎஸ் ஒற்றுமையாக இல்லாதபட்சத்தில் அதிமுக சின்னம் முடக்கப்படும். அப்போது இரு தரப்பும் தனித்தனியாகப் போட்டியிட்டால் இரண்டு தரப்புமே டெபாசிட் இழப்பார்கள். திமுகவின் வெற்றி முதலிடத்தில் இருக்கும். இரண்டாம் இடத்துக்கு பாஜகவிற்கும் நாம் தமிழர் கட்சிக்குமிடையே போட்டி அதிகமாக இருக்கும். ஒருவேளை பாஜக தனித்து போட்டியிட்டால் அந்த கட்சியின் உண்மையான பலம் என்ன என்பதும் இதில் தெரிந்துவிடும். ஆனால் நாம் தமிழர்தான் தற்போது தனியாக மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. இதனால் அந்த கட்சிக்கு இந்த தேர்தல் முக்கியமானதாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் திமுகவுக்கும் சீமானுக்கும் நேரடி போட்டியாக உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
"நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்..!" கண்ணீர் மல்க பேசிய நடிகை தீபாவின் அப்பா... நேரில் ஆறுதல் கூறிய கீதா ஜீவன் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications