சர்ரென உயர்ந்த சூரிய வெப்பம்! நிலவில் சந்திராயன் 3 விக்ரம், பிரக்யான் கண் விழிக்குமா? இஸ்ரோ தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

அக்டோபர் 6ம் தேதி வரை தொடர்பு கொள்ள இந்தியா தொடர் முயற்சி செய்யும். இப்போதே அங்கு சூரியன் உள்ளது. கடந்த வியாழக்கிழமை அங்கே சூரியன் உதித்தது. அக்டோபர் 6ம் தேதி வரைநிலவில் பகல் இருக்கும் என்பதால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Will Chandrayaan 3 Vikram lander and Pragyan Rover wake up in Moon: ISRO tries over and over again

கடுமையான குளிர் காரணமாக இவை இரண்டும் இயங்காமல் போய் இருக்கலாம். அதனால் இதை எழுப்ப முடியாமல் போய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது . இந்த நிலையில்தான் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் நிலவில் மீண்டும் விழித்துக்கொண்ட பின் என்ன நடக்கும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளட்டன.

நிலவில் மீண்டும் சூரியன் உதித்து உள்ளது. நிலவில் கடந்த 14 நாட்களாக மைனஸ் 253 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் விழித்தெழ வாய்ப்புகள் உள்ளன. இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன.

சந்திரயான் 3 நிலவில் ஆராய்ச்சிகளை செய்து முடித்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் முடிந்து தூக்க நிலைக்கு சென்றுவிட்டது. செப்டம்பர் 2 ரோவரும், செப்டம்பர் 4 லேண்டரும் தூக்க நிலைக்கு சென்றுவிட்டது.

14 நாட்களுக்கு பிறகு மீண்டும் தென் துருவத்தில் நேற்று சூரியன் வந்ததும் அது இயங்குமா என்ற கேள்வி உள்ளது. பிரக்யான் ரோவரில் தற்போது முழு சார்ஜ் உள்ளது. விக்ரம் லேண்டரில் சூரியன் உதித்ததும் சார்ஜ் எற வேண்டும். அதன் ரிசீவர் ஆனில் உள்ளது. இன்று அது சார்ஜ் ஏறியதும் ரிசீவர் உதவியுடன் அதை இயங்க வைக்கும் பணிகள் நடக்கும்.

வியாழக்கிழமை சூரியன் வந்தாலும் அது இன்னும் இயங்காமல் இருக்க காரணம்.. அங்கே இன்னும் முழு வெப்பம் வரவில்லை. அதில் உள்ள கருவிகள் வேலை செய்வதற்கு உகந்த சூரிய வெளிச்சம் இருக்க வேண்டும், இதற்கு சூரிய கோணம் 6° முதல் 9° வரை இருக்க வேண்டும். வெப்பநிலையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் உயர வேண்டும். இதனால் அதெல்லாம் நடக்க இன்று மாலை அல்லது இரவு வரை காத்திருக்க வேண்டும். அதன்பின்பே விக்ரம் சார்ஜ் ஏறி ஆன் ஆக வேண்டும். அதன்பின் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையுடன் தொடபு கொள்ள முடியும்.

சந்திரயான்-3 இன் லேண்டர், விக்ரம், அல்லது அதன் ரோவர், பிரக்யான் இரண்டுமே நிலவு பயணங்களுக்கான பொதுவான ஹீட்டர்கள் கொண்டு இருக்கவில்லை. அதாவது நடுங்கும் இந்த குளிரை தாக்கு பிடிக்க எந்த வசதியும் இரண்டிலும் செய்யப்படவில்லை. பொதுவாக ரேடியோஐசோடோப் ஹீட்டர் யூனிட்கள் (RHUs) எனப்படும் ஹீட்டர்கள், லேண்டர், ரோவர்களை சரியான வெப்பநிலையில் வைத்திருக்க, இது போன்ற கருவிகள் அவசியம்.

ஆனால் அத்தகைய சக்தி அமைப்புகள் இல்லாமல், சந்திரயான் -3 இன் வாழ்க்கை என்பது சந்தேகம்தான். அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமேதான் நிலவில் சந்திரயான் 3 தாக்கு பிடிக்கும். இதனால் தற்போது நிலவில் நிமிடங்கள் திக் திக் என்று நகர்ந்து கொண்டு இருக்கின்றன.

பல்வேறு கண்டுபிடிப்புகள்: இவை மீண்டும் விழித்த பின் என்ன நடக்கும் என்ற கேள்வி உள்ளது. மீண்டும் விழித்த பின் பிரக்யான் ரோவர் நகர்ந்தபடி மீண்டும் சோதனைகளை செய்யும். விக்ரம் லேண்டரில் கருவிகள் கீழே இறக்கப்பட்டு ஆய்வுகள் தொடங்கும். உதாரணமாக விக்ரமின் சாஸ்ட் எனப்படும் Thermo physical experiment (ChaSTE) கருவி உள்ளது. அதில் இதேபோல் 7 கருவிகள் உள்ளன. இவை எல்லாம் மீண்டும் நிலவில் இரக்கப்பட்டு மீண்டும் சோதனை செய்யப்படும். லேண்டரில் இருக்கும் நிலநடுக்கத்தை சோதனை செய்யும் sessimic கருவி, கனிமங்களை ஆய்வு செய்யும் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி ஆகியவையும் நிலவில் இரக்கப்பட்டு சோதனை செய்யப்படும்.

ஒருவேளை இவை மீண்டும் வெற்றிகரமாக விழித்தால்.. 15 நாட்களுக்கு பின் மீண்டும் உறக்க நிலைக்கு சென்று அதன்பின் மேலும் 15 நாட்கள் கழித்து மீண்டும் விழிக்க வைத்து அப்படியே தொடர்ந்து செய்யப்படும். அதோடு நிலவில் இரவை கடந்து தூக்க நிலைக்கு சென்று மீண்டும் எழுந்த ஒரே கருவி என்ற சாதனையை விக்ரம், பிரக்யான் மீண்டும் பெறும். இல்லையென்றால் நிலவில் இந்தியாவின் நிரந்தர தூதரக விக்ரம், பிரக்யான் மாற்றம் அடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+