"அய்யய்யோ கொல்றாங்களே"... மேட்டருக்கு வந்த பாஜக.. கைதாகிறாரா "அந்த" திமுக அமைச்சர்?.. என்ன நடக்கிறது
நாராயணன் திருப்பதி, திமுக அமைச்சர் அன்பரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை: "அய்யய்யோ கொல்றாங்களே, அய்யய்யோ கொல்றாங்களே" என்ற வீர வசனத்தை பேசியது யார் என திமுகவினர் மறந்து விட வேண்டாம் என்றும், தமிழக அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்து விட்ட அந்த நபரை முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக கொந்தளிப்பாக கூறியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்லாவரத்தில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

டாடி கிட்ட சொல்லுங்க
அப்போது பாஜகவையும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் சரமாரியாக விமர்சித்து பேசினார்.. அமைச்சர் பேசியபோது, "உங்க டாடி கிட்ட சொல்லி மேகதாது அணை கட்டும் பணியை நிறுத்துங்கள். அப்பறம் வந்து பேசுங்கள், வங்கிக் கணக்கு தொடங்கினால் சிலிண்டர் மானியம் ரூ.200 தருவதாக சொன்னாங்க.. ஆனால் வரவில்லை... வாக்குறுதிகளில், நாங்க இன்னும் ரூ.1,000 மட்டும்தான் கொடுக்கவில்லை. வேறு ஏதாவது சொல்ல முடியுமா? கண்ட கண்ட பொறுக்கிகள் எல்லாம், நம்ம ஆட்சியை பற்றி பேசுறாங்க.. அண்ணாமலை ஐபிஎஸ் ஆக இருந்து ரவுடிகளை பிடித்து ஜெயிலில் அடைக்காமல் பாஜகவில் சேர்த்துள்ளார்." என்று விமர்சித்திருந்தார்.

தடித்த வார்த்தைகள்
அமைச்சரின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை கிளப்பி விட்டது.. ஏற்கனவே திமுக அமைச்சர்கள் சிலர், எதையாவது உளறி கொட்டி சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், ஒரு மாநிலத்தின் அமைச்சர், தமிழக பாஜக தலைவரை நாகரீகம் இல்லாமல் விமர்சித்திருந்தது, நெருடலையே தந்தது.. கருத்து வேறுபாடுகள் இருப்பினும், விமர்சனங்கள் ஆயிரம் இருந்தாலும், அதை கண்ணியத்துடன் அணுகாமல், தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவது, திமுக போன்ற பாரம்பரிய கட்சிக்கு அழகா? என்றும் சிலர் கேட்காமல் இல்லை.

அன்பரசன்
இந்நிலையில் தமிழக பாஜக தன்னுடைய எதிர்ப்பை, அமைச்சர் அன்பரசனுக்கு தெரிவித்துள்ளது.. அநாகரீகமாக பேசி, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அமைச்சராக நீடிக்கும் தகுதியை அன்பரசு இழந்து விட்டார் என்று நாராயணன் திருப்பதி சற்று காட்டமாகவே கூறியுள்ளார். இதுதொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது:

அண்ணாமலை
தமிழக அமைச்சர் அன்பரசன் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களையும் ஒருமையில் பேசியுள்ளதோடு, 'வாடா போடா' என்றும், பொறுக்கி என்றும், அதிகம் பேசினால் அவரை 'ஒழித்து கட்டுவேன்' என்று கொலை மிரட்டல் விடுத்திருப்பதும், தன் கட்சி தொண்டர்களிடம் விட்டால் 'நாறி போய் விடும் ஜாக்கிரதை' என்றும் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பொறுக்கிகள்
ஒருமையில் பேசவும், 'வாடா போடா' என்றும், 'பொறுக்கி' என்றும் ரௌடிகளை போல் பாஜகவினருக்கும் பேச தெரியும். ஆனால் பேசமாட்டார்கள். ஆனால் அப்படி பேசும் பொறுக்கிகளை நொறுக்கி தள்ளிய போலீஸ் தான் அண்ணாமலை என்பதை அன்பரசன் 'மரியாதையாக' புரிந்து கொள்வது நல்லது. "ஒரு வாரம் தூக்கி உள்ளே வைத்தால் கட்சியும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று போய் விடுவான் என்றும் நாங்கள் எல்லாம் அப்படி இல்லை. ஜெயிலுக்கு பெட்டியை தூக்கி கொண்டு கிளம்பி விடுவோம்" என்றும் அன்பரசன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

அய்யய்யோ...!
சென்னை: "அய்யய்யோ கொல்றாங்களே, அய்யய்யோ கொல்றாங்களே" என்ற வீர வசனத்தை பேசியது யார் என திமுகவினர் மறந்து விட வேண்டாம் என்றும், தமிழக அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்ட அந்த நபரை முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக கொந்தளிப்பாக கூறியுள்ளது.

நாராயணன் திருப்பதி
தமிழக காவல் துறை இது போன்ற கொலை மிரட்டல்களை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கக்கூடாது. இதை வேண்டுகோளாக எடுத்துக்கொண்டாலும் அல்லது எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டாலும் உடனடி நடவடிக்கை தேவை என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.. நாராயணனின் இந்த அறிக்கைக்கும், அவரது கண்டன ட்வீட்டுக்கும் ஏராளமானோர் திரண்டு கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications