"பெரிய மீன்".. முக்கிய அமைச்சரை கட்டம் கட்டிய ஸ்டாலின்.. அடுத்தடுத்த பிரஷர்.. தூக்குவதற்கு பிளான்?
சென்னை: திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் நேற்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நெல்லையில் பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளதாம்.
இது தொடர்பாக நேற்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரண பணிகளை மேற்கொள்ளவும, வருவாய் மாவட்ட வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை அம்மாவட்டத்திற்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது., என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
இந்த மாற்றத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளதாம். ராஜகண்ணப்பன் ஏற்கனவே பலமுறை சர்ச்சையில் சிக்கியவர்தான். ஜாதி ரீதியிலான புகாரில் சிக்கி இருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். முதுகுளத்தூரில் ஒன்றிய நிர்வாகியாக இருந்தவர் ராஜேந்திரன். இவரை "எஸ்சி" என்று கூறி ஜாதி ரீதியாக திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் வைக்கப்பட்டது.
இதையடுத்து ராஜகண்ணப்பன் அமைச்சரவை இலாக்கா மாற்றப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் ராஜகண்ணப்பன் தரப்போ.. அந்த ராஜேந்திரன் அதிமுக விற்கு நெருக்கமானவர். வேண்டும் என்றே எனக்கு எதிராக சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள் என்று கூறினார். நான் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதாக தவறான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. நான் அமைதியாக இருந்தால் கூட என்னை வைத்து சர்ச்சையை உருவாக்குகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.
பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மட்டும் இருந்த ராஜகண்ணப்பன் கடந்த சில நாட்களாக மிகவும் அமைதியாக இருந்தார். மூத்த அமைச்சராக இருந்தும் இவருக்கு ஒரு துறை மட்டும், அதிலும் பெரிதும் அதிகாரம் இல்லாத துறை மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது கொஞ்சம் ஹை பட்ஜெட் துறை ஆகும். ராணிப்பேட்டை காந்தி அமைச்சரிடம் இருந்து அந்த துறை வாங்கப்பட்டு இவருக்கு கொடுக்கப்பட்டது.
இதனால் கொஞ்சம் நிம்மதி அடைந்த ராஜகண்ணப்பனுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தற்போது திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் நேற்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நெல்லையில் பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டார். பொறுப்பு அமைச்சர்கள் பொதுவாக அமைச்சரவை பணிகளை தங்கள் பொறுப்பு மாவட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால் ராஜகண்ணப்பன் உள்ளூர் அரசியலில் ஈடுபடுகிறார், மாவட்ட செயலாளர்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறார், திமுக மாவட்ட செயலாளர்களை முடக்குகிறார் என்று மேலிடத்திற்கு புகார்கள் சென்றுள்ளதாம். இந்த புகார்களை தொடர்ந்தே அவரின் பொறுப்பு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் வரை இவரின் அமைச்சரவை பதவி நீடிக்குமா என்பதே பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications