தப்பிப்பது கஷ்டங்க.. ஆளுநர் இனி என்ன செய்வார்னு தெரியலை.. எடப்பாடி சொன்ன வார்த்தை.. எகிறும் அதிமுக
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக மாஜி அமைச்சர்கள் இடையே சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்று அக்கட்சி வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த வாரம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 13 தீர்மானங்களில் ஆளும் திமுகவிற்கு எதிராக கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இது போக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் நாடாளுமன்றப் பொது தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடிடும் வகையில், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் களப்பணி ஆற்றிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜகவை எந்த இடத்திலும் இந்த தீர்மானங்கள் விமர்சனம் செய்யவில்லை. அதேபோல் கூட்டணி குறித்தும் அறிவிக்கவில்லை.
வாழ்த்து; இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக மாஜி அமைச்சர்கள் இடையே சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்று அக்கட்சி வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.
அதன்படி எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லியிருக்கிறார்கள் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் அதிமுக மா.செ.க்கள். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. வாழ்த்துகளை பரஸ்பரம் பகிர்ந்து கொண்ட நிலையில் நடப்பு அரசியல் குறித்து பேசிக்கொண்டனர்.
இதனையறிந்து முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் நாம் பேசிய போது, " நான் வாய் திறந்தால் எடப்பாடி திகார் ஜெயிலுக்கு போவார் என ஓபிஎஸ் சொன்னது பற்றி மா.செ.க்கள் கேட்டனர். அதற்குதான், ரகசியம் இருந்தால் வெளியே சொல்ல வேண்டும் என நாம் பதிலடி கொடுத்து விட்டோமே. இன்னும் என்ன சந்தேகம் ? நாம் சில ரகசியங்களைச் சொன்னால் அவர் தான் ( ஓபிஎஸ் ) ஜெயிலுக்கு போவார்.
நம் வழக்கறிஞர்கள் கூட, ஹவுஸிங் டிபார்ட்மெண்ட்டில் ஓபிஎஸ் எதிராக நாமளே ஊழல் வழக்கு போடலாமே என கேட்டார்கள். நான் தான், இப்படி மலிவான அரசியல் வேண்டாம்னு தடுத்து விட்டேன். ஓபிஎஸ் பேசியதை அவரது வாய்சாக நினைக்கவில்லை. தினகரன் சொல்லி அவர் பேசுகிறார். ஏன்னா, நமக்கு எதிரா அவர் பேசினா, அவருக்கு எதிரான ஊழல்களை நாம் சொல்லமாட்டோமோ ! இது அவருக்கும் தெரியும்.
ஓபிஎஸ் பின்னாடி யார்: அதனால, அவர் பேசியது தினகரனின் வாய்ஸ் தான். அதப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க என சொன்னார் எடப்பாடி. ஆமாண்ணா... அவராக பேசியிருக்க மாட்டார்னு மா.செ.க்களும் சொன்னார்கள். அதற்கு பிறகு, கவர்னர்-முதல்வர் சந்திப்பில் நடந்ததை பத்தி தங்கமணி சில விசயங்களைச் சொல்ல, திமுக அரசு வலியுறுத்தலை ஏற்றுக்கொண்டு வீரமணிக்கும் விஜயபாஸ்கருக்கும் எதிரான கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் தந்தால்... அது, சிக்கல் தான்.
நமக்கும் நெருக்கடியைத் தரும். டெல்லி சப்போர்ட் இருந்த வரை கவர்னரும் நமக்கு சப்போர்ட்டாக இருந்தார். இனி என்ன செய்வார்னு தெரியலை. என்ன நடக்குதுன்னு பார்க்கணும். நிச்சயம் டெல்லியிடம் கலந்து பேசாமல் இதற்கு அனுமதி தரமாட்டார்னு நினைக்கிறேன். வெயிட் பண்ணித்தான் பார்க்கணும். அனுமதி தராமல் இருக்க வழி ஏதேனும் இருக்கான்னு யோசிக்கணும் என சொன்னார் எடப்பாடி. அவரே அப்படி சொன்னதால், கவர்னர் அனுமதித்தால் வீரமணியும் விஜயபாஸ்கரும் தப்பிப்பது கஷ்டம் தான் என எல்லோருமே பேசிக்கொண்டனர் " என்றார் நம்மிடம் அந்த மாஜி அமைச்சர்.












Click it and Unblock the Notifications