Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க இது? சட்டென கேட்ட கனிமொழி.. அந்த 2 பேரும் வருவாங்களா? நேரடியாக களமிறங்கிய ஸ்டாலின்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்சாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், சிபிஎம் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற அமர்வில் 3 நீதிபதிகள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், ஒரு நீதிபதி இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

3:2 என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை அடிப்படையில் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு உள்ளது. ஜாதி ரீதியிலான இடஒதுக்கீடு தொடர்பாக மறுஆய்வு செய்ய வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடம் ஆகிவிட்டது. ஜாதி ரீதியிலான இடைஒதுக்கீட்டிற்கு ஒரு கால அளவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

திமுக எதிர்ப்பு

திமுக எதிர்ப்பு

இதை திமுக கடுமையாக எதிர்த்து உள்ளது. ராஜ்யசபாவில் உயர் ஜாதியில் உள்ள பொருளாதார ரீதியான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 10% இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெற்ற போதே அதை திமுக கடுமையாக எதிர்த்தது. பெரும்பாலான கட்சிகள் சொல்லி வைத்தார் போல மசோதாவை ஆதரித்தது. அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. திமுக கூட்டணியில் இருக்கும் முக்கியமான கட்சிகளான சிபிஎம், காங்கிரஸ் ஆகியவை இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்தது.

வாக்கெடுப்பு

வாக்கெடுப்பு

தமிழகத்தில் இருந்து தேர்வான, சிபிஎம் எம்பி டிகே ரங்கராஜன் கூட மசோதாவை ஆதரித்து பேசினார். அப்போதுதான் ஒரு குரல் அதை எதிர்த்தது. என்ன அநியாயம் இது என்று ரங்கராஜனை பார்த்து பொங்கி எழுந்தது ஒரு குரல்.. அவையில் நிலவிய ஆதரவு குரல்களுக்கு இடையே சீறி வந்து எதிர்ப்பு தெரிவித்த அந்த குரல் திமுக எம்.பி கனிமொழியுடையது. அம்பேத்காரின் பொன்மொழியில் தொடங்கி நான் பெரியார் மண்ணின் புதல்வி என்று கூறியது வரை.. அவரது பேச்சு அவையை அதிர வைத்த ஒன்று. அங்கு மிகவும் கோபமாக காணப்பட்டார்.

சிபிஎம்

சிபிஎம்

அவையில் மட்டுமல்ல வெளியிலும் சட்ட ரீதியாக திமுக இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக கடுமையாக போராடியது. முக்கியமாக இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் திமுக எம்பி வில்சன் ஆஜராகி கடுமையான வாதங்கள் வைத்தார். கடைசி வரை அவர் வாதங்கள்தான் இந்த வழக்கில் முக்கிய பங்கு வகித்தன. ஆனாலும் வழக்கில் தற்போது எதிராக தீர்ப்பு வந்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.

 காங்கிரஸ் நிலைப்பாடு

காங்கிரஸ் நிலைப்பாடு

எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும். சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டு உள்ளார்.

திமுக நிலைப்பாடு

திமுக நிலைப்பாடு

ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய தலைவர்கள் பலர் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளனர். இந்த நிலையில் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்று உள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்று கருத்து தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் எம்பி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக அளித்த பேட்டியில், இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிக சிறப்பானது. அரசியலமைப்பு சட்டத்தின் 103வது பிரிவை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. அதில் உள்ள உரிமைகளை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது, என்று கூறியுள்ளார்.

கூட்டம்

கூட்டம்

சிபிஎம் தலைவர்களும் தேசிய அளவில் இதை வரவேற்று உள்ளனர். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.நவம்பர் 12ம் தேதி இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நேரடியாக முதல்வர் ஸ்டாலின் களமிறங்கி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்படி இருக்கும் போது இதில் காங்கிரஸ், சிபிஎம் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவுடன் தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டணி காரணமாக இதில் இவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?


ஆனால் தேசிய அளவில் இவர்களின் கட்சி எடுத்துள்ள நிலைப்பாடு காரணமாக கலந்து கொள்வதில் சிக்கலும் ஏற்படலாம். இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி ஆகியோர் காங்கிரசின் நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து உள்ளனர். அதனால் காங்கிரஸ் சார்பாக பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. அதேபோல் சிபிஎம்மும் பிரதிநிதிகள் யாரையாவது இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனுப்பும் வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+