திமுக கைநழுவிப் போகும் காங்கிரஸ்! இந்தியா கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என டவுட்! எடப்பாடி ஆரூடம்
சேலம்: திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா? நிலைக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், தமிழகம் போராட்டம், போராட்டம் என போராட்ட களமாக மாறி வருகிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட எம்.காளிப்பட்டி பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். முன்னதாக இந்த விழாவிற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பொங்கல் விழா திடலில் 108 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வை எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பானையில் பச்சரிசி இட்டு தொடங்கி வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி
இதைத்தொடர்ந்து விழாவில் வள்ளி கும்மி ஆட்டம், உரிமியாட்டம், தெருக்கூத்து, குதிரை நடனம் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்த அவர், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசுகள் வழங்கினா. தொடர்ந்து விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி," தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழர் திருநாளை தமிழக மக்கள் அத்தனை பேரும் உலகமெங்கும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கிராமங்களில் தான் பொங்கல் கொண்டாடுவோம். ஆனால் தற்போது நகரங்களிலும் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக கூட்டணி
தமிழகத்தில் 65 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அதிமுக-வை பொருத்தவரை எம்ஜிஆர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். திமுகவை எப்பொழுது ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுக பலம் பொருந்திய கூட்டணி. வெற்றி கூட்டணி நிச்சயமாக வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் நமது கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்.
திமுக காங்கிரஸ் கூட்டணி
ஒரு வலிமையான ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. உலகம் முழுவதும் சிறந்த பிரதமர் என போற்றும் வகையில் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். விரைவில் வெற்றிக்கொடி நாட்டுவோம். எப்பொழுது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் போராட்டம், போராட்டம் என போராட்ட களமாக மாறி வருகிறது.
அதிமுக ஆட்சி
ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கும் நிலை வந்துவிட்டது. அடுத்து வரும் பொங்கலை, ஆளும் கட்சியாக இருந்து கொண்டாடுவோம். அரசியல் கால்புணர்ச்சி காரணமாக அதிமுக கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக திமுக மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஏரிகள் இன்னும் தண்ணீர் நிரப்பப்படாமல் இருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து ஏரிகளும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கிரஸ்
மேலும் தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. இன்னும் சட்ட ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படவில்லை. திமுகவில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கை நழுவி வெளியே போகப் போகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா? நிலைக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது" என்றார்.
-
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம்












Click it and Unblock the Notifications