"மாட்டிக்கிச்சே".. பாஜகவுடன் இணைய ரெடியாகும் கட்சி.. தயாராகிறார் "வாரிசு".. அப்ப எடப்பாடி பழனிசாமி?
பாஜகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக தயாராகி வருவதாக கூறப்படுகிறது
சென்னை: இரண்டு கட்சிகள் குறித்து 2 விதமான செய்திகள் தமிழக அரசியல் களத்தில் வெடித்து கிளம்பி உள்ளன.. இதனால் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அக்கட்சியை சரிவில் இருந்து யாராலும் மீட்க முடியவில்லை.
எனவே, அதளபாதாளத்தில் தொங்கி கிடக்கும் அந்த கட்சியை தூக்கி நிறுத்தி, புது ரத்தம் பாய்ச்ச முடிவாகி உள்ளதாக தெரிகிறது.. அதன்படி, 2 விதமான மாற்றங்கள் கட்சிக்குள் வட்டமடித்து வருகின்றன..

அதிமுக - தேமுதிக
இப்போதைக்கு பொருளாளர் பிரேமலதாதான் கட்சியையும் சேர்த்து கவனித்து கொண்டு வருகிறார்.. அவர்தான் கழி நடத்துகிறார்.. கட்சி தொடர்பான முடிவுகளையும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து பிரேமலதாவே எடுக்கிறார்.. ஆனாலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதை அந்த கட்சியினர் பலரும் விரும்பவில்லை..

எடப்பாடி பழனிசாமி
காரணம், கூட்டணியில் இடம் பெற்றிருந்தால் நிச்சயம் சில எம்எல்ஏக்களாவது சட்டமன்றத்துக்குள் சென்றிருப்பார்கள் என்பதே தேமுதிகவினரின் கணக்காக உள்ளது. தேமுதிவுக்கு தற்போது என்ன வாக்கு வங்கி உள்ளது என்பதை முடிவு செய்துதான், எடப்பாடி பழனிசாமி சீட் ஒதுக்கீடு செய்தார்.. ஆனால், அதை ஏற்க தேமுதிக மேலிடம் தயாராக இல்லை.. தொடர் பிடிவாதம் காட்டவும், பேச்சுவார்த்தைக்கு கூப்பிடாமலேயே இழுத்தடிக்கப்பட்டு, பிறகு கூட்டணியே இல்லை என்ற அளவுக்கு போய்விட்டது.. இருந்தாலும் கூட்டணிக்காக பிரேமலதா காத்து கிடந்ததையும், கதறியதையும், புலம்பியதையும் தமிழகமே கண்டது..

பிரேமலதா
அதனால், இனி எப்போது தேர்தல் நடந்தாலும், கூட்டணி மற்றும் அரசியல் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது பலமுறை ஆலோசிக்க அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாம். அடுத்ததாக, கட்சி தலைவராக பிரேமலதா பொறுப்பேற்பதாக தகவல்கள் ஒருபக்கம் பரபரத்து வந்தாலும், விஜய பிரபாகரனை இளைஞர் அணிசெலயாளராக நியமிக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி வருகிறதாம்.. சமீபகாலமாகவே, விஜயபிரபாகரன்தான், நிர்வாகிகள் நடத்தும் கட்சி கூட்டங்களுக்கும், அவர்களது இல்ல விழாக்களிலும் பங்கேற்று வருகிறார்...

அடையாளம்
இத்தனைக்கும் கட்சியில் அவருக்கென்று எந்த பொறுப்பும் இல்லை.. அப்படி இருந்தும், பம்பரமாக சுற்றி வந்து, தனக்கான அடையாளத்தை நிலைநிறுத்தி வருகிறார். அதனால்தான் அவருக்கு இளைஞர் அணி செயலாளராக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளதாக சொல்கிறார்கள்.. இதைவிட முக்கியமாக, பாமகவை போலவே, தேமுதிகவும் எம்பி தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.. எப்படியும் இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்து விட வேண்டும் என்ற முனைப்புடனும் செயல்பட்டு வருகிறது..

பிரேமலதா
அதனால்தான், கட்சியை பலப்படுத்த பிரேமலதா நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.. இளைஞர்களையும் அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறாராம்.. தேமுதிகவை இப்படியெல்லாம் பிளான் செய்து வந்தாலும், பாஜக என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை.. விஜயகாந்த் என்றாலே மோடிக்கும் சரி, அமித்ஷாவுக்கும் சரி, ஒருவித தனி பாசம்.. தனி மரியாதை உண்டு.

கன்னத்தை பிடித்து கிள்ளி..
அதனால்தான், அன்னைக்கு முதன்முதலில் கூட்டணி வைத்தபோது, விஜயகாந்த்தின் கன்னத்தை பிடித்து கிள்ளி பிரதமர் மோடி பாராட்டி தள்ளினார்.. அப்போது யார் இவர் என்று, வடமாநில மக்களே விஜயகாந்தை உற்று பார்த்தனர்.. ஆனால், உடல்நலம் குன்றியதில் இருந்தே, விஜயகாந்த்துடன் பாஜக அந்த அளவுக்கு கரம் கோர்க்கவில்லை.. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது, அதிமுகவை விட்டு பாஜக வெளியேறும் பட்சத்தில் அதனுடன் கூட்டணி வைக்கலாம் என்று போடப்பட்ட கணக்கும் தவிடுபொடியாகிவிட்டது..

கொடி, சின்னம்
இப்போது மீண்டும் அந்த எண்ணம் தேமுதிவுக்கு வந்துள்ளது.. 2016-ல் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 2.39-ஆகவும், 2019 எம்பி தேர்தலில் 2.19%-ஆகவும் குறைந்து, இன்று அக்கட்சி தன்னுடைய கொடி, சின்னத்தையே இழக்கக்கூடிய அபாயத்தில் உள்ளது.. மிக குறைந்த அளவு வாக்கு வங்கியை வைத்து கொண்டுள்ள நிலையில், தன்னுடைய, கடந்த கால குறைகளையும், விமர்சனங்களையும் திருத்திக் கொண்டு, தேமுதிக, களம் காணுமா? பாஜகவுடன் கூட்டணி வைக்குமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications