Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவரை காட்டணும்! திமுக அடுக்கிய 4 கண்டிஷன்ஸ்.. "அவரையே" சந்தித்த ஸ்டாலின்.. பாய்ந்து வரும் பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய அளவில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த தமிழ்நாடு பாஜக தீவிரமாக முயன்று வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. சரியாக தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. கடந்த முறை பாஜக கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார்.

இவருக்கு ஆதரவாக 65.65 சதவிகித வாக்குகள் விழுந்தன. இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் களமிறக்கிய மீரா குமாருக்கு ஆதரவாக 34.35% வாக்குகள் விழுந்தன.

எப்படி?

எப்படி?

எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என்று மொத்தம் 2,930 வாக்குகள் ராம்நாத் கோவிந்த்திற்கு ஆதரவாக விழுந்தது. மீரா குமாருக்கு 1,844 வாக்குகள் விழுந்தன. இந்த முறை பாஜக கூட்டணிக்கு வெறும் 48.8 சதவிகித வாக்குகள் மட்டுமே உள்ளன. பாஜக இப்போது சிவசேனா, அகாலி தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணியில் இல்லை. இதனால் பாஜகவிற்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெறுவது குதிரை கொம்பாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் அழுத்தங்களை சமாளிக்க பாஜக தங்கள் வேட்பாளரே குடியரசுத் தலைவர் ஆக வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது.

பொது வேட்பாளர்

பொது வேட்பாளர்

இதற்காக பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க பாஜக முயன்று வருவதாக ஏற்கனவே செய்திகளில் தெரிவித்து இருந்தோம். அதாவது சில மாநில கட்சிகளும் ஏற்க கூடிய வகையில் பொது வேட்பாளரை நிறுத்த பாஜக முயன்று வருகிறதாம். தலித் வேட்பாளர் அல்லது தென்னிந்தியரை நிறுத்தினால், தென்னிந்தியாவில் இருந்து ஆதரவை பெற முடியும் என்பதால் பாஜக இந்த திட்டத்தில் இருக்கிறதாம். தெலுங்கு தேசம், திமுக, திரிணாமுல், தெலுங்கானா ரஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகளில் ஏதாவது ஒன்றின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக உள்ளது.

தமிழிசை, இளையராஜா வாய்ப்பு இல்லை

தமிழிசை, இளையராஜா வாய்ப்பு இல்லை

முன்னதாக தமிழிசை, இளையராஜா ஆகியோரின் பெயர்கள் இந்த லிஸ்டில் அடிபட்டது. ஆனால் மத்திய பாஜகவிற்கு அப்படி எந்த திட்டமும் இல்லை என்று கூறப்படுகிறது. தமிழிசை வேண்டுமானால் வேறு மாநிலத்திற்கு ஆளுநராக்கப்படலாம் அல்லது ஆக்டிவ் அரசியலுக்கு வரலாம். இளையராஜா வேண்டுமானால் எம்பி ஆகும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் குடியரசுத் தலைவராக இருவரும் முன்னிறுத்தப்பட வாய்ப்பே இல்லை என்றுதான் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு


இப்போது துணை குடியரசுத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடுவை குடியரசுத் தலைவராக்க திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கையா நாயுடு அரசியல் ரீதியாக மற்ற கட்சிகளுடன் நட்பானவர். காங்கிரஸ் , திரிணாமுல் எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தததால் அக்கட்சி உறுப்பினர்களிடம் மட்டுமே இவருக்கு கசப்பு உள்ளது. மற்றபடி ராஜ்ய சபாவில் திமுக எம்பிக்களை மிகவும் அன்போடு நடத்தியவர் வெங்கையா நாயுடு. இது போக திமுகவிடமும் நெருக்கமாக இருப்பவர்.

 பொது வேட்பாளர்

பொது வேட்பாளர்

ஆந்திரா, தெலுங்கானா ஆளும் கட்சிகளிடமும் வெங்கையா நாயுடு நெருக்கமாக இருக்க கூடியவர்தான். இதனால் வெங்கையா நாயுடுவை பொது வேட்பாளராக அறிவித்தால் அவரை தென் மாநில ஆளும் கட்சிகள் ஏற்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அரசியல் உலகில் இந்த விவகாரம் தீயாக பரவிக்கொண்டு இருக்கும் நிலையில்தான் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை வெங்கையா நாயுடு நேரில் சந்தித்தார்.

ஸ்டாலின் சந்திப்பு

ஸ்டாலின் சந்திப்பு

இந்த சந்திப்பில் பல விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்பட்டாலும், பெரும்பாலும் இதில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஆதரவு பற்றி பேசப்பட்டதாகவே தெரிகிறது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.. உங்களுடைய கோரிக்கைகளை நாங்கள் பரிசீலிப்போம்.. ஏற்றுக்கொள்வோம் என்று டெல்லி மேலிடம் திமுகவிற்கு தூது விட்டுள்ளதாக தெரிகிறது. இதில் இன்னும் திமுக முடிவு எடுக்கவில்லையாம்.

திமுக கண்டிஷன்கள் 4

திமுக கண்டிஷன்கள் 4

அதே சமயம் ஒருவேளை திமுக பொது வேட்பாளரை ஆதரித்தாலும் 4 முக்கியமான கண்டிஷன்களை போடும் என்று கூறப்படுகிறது. இந்த குடியரசுத் தேர்தலை வைத்து பவரை காட்டலாம் என்று திமுக நினைக்கிறதாம்.

1.நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட ஆளும் திமுக அரசின் மசோதா அனைத்திற்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர வேண்டும்.

2. ஆளுனரை மாற்ற வேண்டும்.

3. ஆளுநர் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை கொண்டு வர வேண்டும்.

4. 7 பேர் விடுதலையில் ஆளுநர் உடனே கையெழுத்து போட வேண்டும் என்ற கண்டிஷன்களை திமுக வைக்கும் என்கிறார்கள்.

வாய்ப்பு குறைவு

வாய்ப்பு குறைவு

ஆனால் என்னதான் கண்டிஷன்களை வைத்தாலும்.. பேச்சுவார்த்தைகள் நடந்தாலும்.. திமுக பெரும்பாலும் பொது வேட்பாளரை ஆதரிக்காது என்றே கூறப்படுகிறது. அது காங்கிரஸ் மத்தியில் திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தும். மம்தா, கேசிஆர் ஆகியோர் மத்தியிலும் திமுக அதிருப்தியை சம்பாதிக்க காரணமாக அமைந்துவிடும். இதனால் ஆளும் திமுக அரசு எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்கவே அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+