மாத்திடுங்க.. விசிக பற்ற வைத்த தீ.. ஆளுநர் மாளிகைக்கே குறியா? ஆளும் திமுக பிளான் என்ன? பரபர பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று விசிக தரப்பில் சொல்லப்பட்டதில் இருந்தே இது தொடர்பான விவாதம் அரசியல் வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது.

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த வாரம் துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமனம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு திமுக கூட்டணி கட்சியான விசிக ஆதரவு அளித்தது.

இந்த விவாதத்தின் போது பேசிய விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் சிந்தனை செல்வன் ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் ரவியை காலி செய்ய வேண்டும். அவருக்கு வேறு இடத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

திமுக கூட்டணியில் இருக்கும் பல்வேறு கட்சிகள் இதே கோரிக்கையை வைத்து வருகிறதாம். அதாவது ஆளுநர் மாளிகை மிகப்பெரிய இடத்தில் அமைந்துள்ளது. அது அரசுக்கு சொந்தமான பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்க கூடிய நிலம். இதை ஒரே ஒருவருக்காக பயன்படுத்துவது சரியாக இருக்காது. அதனால் ஆளுநருக்கு வேறு இடம் கொடுக்க வேண்டும். இந்த இடத்தை வேறு பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர் குரல் கொடுத்து வருகிறார்களாம்.

முதல்வருக்கு அறிவுரை

முதல்வருக்கு அறிவுரை

இது பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கும் சிலர் ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்படி ஆளுநர் மாளிகை இருக்கும் பரப்பளவு மிக பெரியது. இங்கே புதிய சட்டசபை கூட கட்டலாம். ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சட்டசபை மருத்துவமனை ஆகிவிட்டது. அங்கு மீண்டும் சென்றால் விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும். எனவே இங்கு புது கட்டிடம் கட்டலாம் என்றும் சிலர் ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

கிரீன் வேஸ்

கிரீன் வேஸ்

அதேபோல் கிரீன் வேஸ் சாலையில் இருக்கும் முதல்வர்களுக்கு உண்டான பங்களாவை ஆளுநருக்கு வழங்கலாம் என்றும் இதில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளதாம். இதை எல்லாம் கேட்டுக்கொண்ட ஆளும் தரப்பு.. இப்போதே அதெல்லாம் வேண்டாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. பல மாநிலங்களில் ஆளுநர் மாளிகை பிரம்மாண்டமாகவே இருக்கிறது. கர்நாடகாவிலும் ஆளுநர் மாளிகை பிரம்மாண்டமாகவே இருக்கிறது.

மோதல்

மோதல்

மோதல் இருக்கிறது என்பதற்காக இருப்பிடத்தை மாற்றுவது சரியாக இருக்காது. அது பர்சனல் விஷயமாக மாறிவிடும். அதோடு அவரை இடம் மாற்றி, புதிதாக இங்கே கட்டிடம் எல்லாம் கட்ட பல கோடி தேவையில்லாத செலவு ஆகும். ஆளுநரின் மூவ்களை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். அவர் மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பவில்லை என்றால் அதற்கு எதிராக சட்டப்படி போராடுவோம்.

 வழக்கு

வழக்கு

ஏன் வழக்கு கூட தொடுக்கலாம். மற்றபடி அவரின் பங்களாவை மாற்றுவது சரியாக இருக்காது என்று ஆளும் தரப்பு கருதுகிறதாம். முன்னதாக முதல்வரும் எனக்கும் ஆளுநருக்கும் தனிப்பட்ட உறவு நன்றாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். அதிகார ரீதியான மோதல் மட்டுமே தற்போது நிலவி வருகிறது. இதனால் இப்போதைக்கு ஆளுநர் மாளிகை இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+