உயில் எழுத போறீங்களா? ஆன்லைனில் எழுதலாமா? தந்தை உயில் எழுதாவிட்டால் மகளுக்கு சொத்துரிமை உண்டா?
சென்னை: உயில்களை வாரிசுகளுக்கு எழுதிவைக்கும் சூழலில், வாரிசு இல்லாத சொத்துக்கள் யாருக்கு சென்றடையும்? விவாகரத்தாகி, மறுமணம் செய்து கொள்ளாத பெண்ணின் மகனுக்கு, கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு இருக்கிறதா? ஆன்லைனிலும் உயில் தயாரிக்க வசதிகள் உள்ளதா? ஆன்லைனில் உயில் தயாரிப்பதால் கிடைக்கக்கூடிய வசதிகள், நன்மைகள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
18 வயது முழுமை பெற்றவர்கள் யாராக இருந்தாலும் சொத்துகளை உயிலாக எழுத முடியும். எனினும், ஒருசில காரணங்களுக்காக 21 வயது நிரம்பியவர்தான் உயில் எழுத முடியும்.. சொத்து சம்பந்தமாக வாரிசுகளுக்கு பிற்காலத்தில் எந்தவிதமான சிக்கல்களும் வந்துவிடாமல் இந்த உயில்கள் உதவுகின்றன.

நேரடி வாரிசுகள்
சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மட்டும் உயிலாக எழுதமுடியும். உயில் எழுதும்போதோ அல்லது எழுதி முடித்த பிறகோ, தங்களுக்கு நம்பிக்கைக்குரிய 2 பேரிடம், உயில் பற்றி தகவல் சொல்லி வைக்க வேண்டும். இதனால் உரிய சமயத்தில், உரியவர்களுக்கு உயில் கைக்கு வந்தடையும்.
அப்பா தான் சம்பாதித்த சொத்தை, உயில் எழுதாதபோதும், அவரது நேரடி வாரிசுகளுக்கு, சொத்தில் சமஉரிமை உள்ளது. ஆனால், திருமணமான பெண்ணின் அப்பா, தான் சுயமாக சம்பாதித்த சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால் அதில் பங்கு கோர முடியாது.
விவாகரத்தான பெண் - வாரிசு
விவாகரத்தான பெண், மறுமணம் செய்யாத பட்சத்தில், அந்த பெண்ணின் வாரிசுக்கு, கணவரின் பூர்வீக சொத்தில் உரிமை உள்ளதா? என்ற சந்தேகம் வரலாம்.. வாரிசுரிமை சட்டத்தின்படி அனைத்து நேரடி வாரிசுகளுக்குமே பங்கு உள்ளது. எனவே, பெண்ணுக்கு விவாகரத்தாகி இருந்தாலும்சரி, முன்னாள் கணவர் மறுமணம் புரிந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலும் சரி, இந்த பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை நிச்சயம் உள்ளது.
வாரிசு இல்லாதவர்களுக்கு தத்துப்பிள்ளைகளும் இல்லாவிட்டால், உயில் எழுதிய நபரையே மொத்த சொத்துக்களும் சேரும்... கணவன் மனைவி இறந்தபிறகு வாரிசு இல்லாதவர்களின் சொத்துக்கள், அவர்களின் 2ம் நிலை வாரிசுதாரர்களுக்கு சேரும். அதாவது, கணவருடன் பிறந்த சகோதரர், மற்றும் சகோதரிகள், மற்றும் மனைவியுடன் பிறந்த சகோதரர், சகோதரிகளுக்கு சொந்தமாகும்.
ஆன்லைன் உயில் நல்லதா
பாரம்பரிய முறைகள் மூலம் மட்டுமே உயில் எழுதிவரும் நிலையில், தற்போது ஆன்லைனிலும் உயில் தயாரிக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.. இஸ்லாமிய சமூகத்திற்கு ஷரியத் சட்டங்களில் நிபுணத்துவம் தேவைப்படுவதால், இவர்கள் மட்டும் தனிப்பட்ட மற்றும் சிறப்பு சேவைகளை அணுக வேண்டியிருக்கும். மற்றபடி, அனைவருமே ஆன்லைனில் இந்த வசதியை பெறலாம்.
ஆன்லைனில் உயில் தயாரிப்பதால், யாருக்குமே பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.. வக்கீல்களையும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.. சேவை வழங்குநர் மற்றும் உயிலின் சிக்கலான தன்மையை பொறுத்து ஆன்லைன் உயிலின் விலை மாறுபடும். ஆன்லைனில் உயில் தயாரிக்கவும் 2 சாட்சிகள் கையெழுத்துகள் கட்டாயம் தேவைப்படும்.
ஆன்லைனில் உயில் தயார் செய்வதால், தவறுகளின் பெரும்பாலும் குறையும்.. ஆன்லைனில் எழுதுவதால், பிழைகள் இருந்தாலும் திருத்தி கொள்ள முடியும்.. இதுவே பாரம்பரியமான முறையில் உயில் தயாரித்தால், பணம் விரயமாகும், நேரமும் விரயமாகும்.
ஆன்லைன் உயில் தயாரிப்பதில் சிக்கல்
அதேசமயம், ஆன்லைனில் உயில் தயாரிக்கும்போது சில சிக்கல்களும் எழலாம்.. வக்கீல்களை தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்காது என்றாலும், அவர்களின் ஆலோசனை மிகவும் முக்கியம். பெரிய அளவிலான சொத்துக்களை ஆன்லைன் உயில் தயாரிப்பில் கொண்டுவர வருது சற்று சிரமம்.. அதேபோல, சிக்கலான குடும்ப சூழ்நிலைகள் இருந்தாலும, ஆன்லைனில் உயில் செய்வது பொருத்தமற்றதாக போய்விடும்.. எனவே, உயிலை தயாரிப்பதற்கு முன்னர், தனிநபர்கள் தங்கள் சூழ்நிலைகளையும் தேவைகளையும் கருத்தில் கொள்வது அவசியம்..
நம்பகமான வெப்சைட்
அதுமட்டுமல்ல, நம்பகமான ஆன்லைன் சேவையை கண்டறிந்து, அவை பாதுகாப்பானதா? HTTPS குறியீடு கொண்ட URL பயன்படுத்தப்பட்டுள்ளதா? என அறிந்தே செயல்பட வேண்டும். மேலும், login டீடெயில்களை உருவாக்கி வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.. ஏனென்றால், உயிலில் திருத்தங்கள் செய்வதாக இருந்தால், இது உதவும்.
முழுப்பெயர், முகவரி, சொத்து விவரம், முதலீடுகள், வங்கி கணக்குகள், சொத்துகள் விவரம் உட்பட அனைத்தையும் தவறில்லாமல் பதிவிட வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications