Solar Eclipse: இன்று சூரிய கிரகணமா? 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கும் பூமி? நாசா சொல்வதை கேளுங்க!
சென்னை: இன்று சூரிய கிரகணம் என்பதால் பூமி முழுவதும் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கும் என சில நாட்களாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து நாசா தற்போது விளக்கம் அளித்துள்ளது. உண்மையிலேயே இன்று பூமி 6 நிமிடம் இருண்டு போகுமா, என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்பது மாறி மாறி வரும். இது ரொட்டேஷன் எனப்படும் ஒரு நிலையால் வருகிறது. அந்த வகையில் சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது நிகழும்.
இந்த நிகழ்வின் போது சந்திரனானது சூரியனின் ஒளியை பூமி மீது படவிடாமல் தடுத்துவிடுகிறது. இதனால் சில மணித்துளிகளுக்கு சூரியன் வெளிச்சம் இல்லாமல் இருக்கும்.
இந்த நிலையில் பூமி முழுவதும் இன்று சூரிய கிரகணத்தையொட்டி 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கும் என சமூகவலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு நாசா மறுப்பு தெரிவித்து, இதற்கான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
அதிலும் 100 ஆண்டுகளில் ஒரு முறை நிகழும் இந்த அரிய கிரகணம் என்றும் சிலர் கூறிவருவதை நாசா மறுத்துள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டுக்கு பிறகு இன்றைய தினம் 2027 ஆம் ஆண்டு நிகழ் இருக்கும் சூரிய கிரகணம்தான் நூற்றாண்டில் நிகழும் நீண்ட கிரகணமாக இருக்கும்.
வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி சூரிய கிரகணம் நடைபெறுகிறது. இது சிறிய அளவில்தான் இருக்கும். மிக நீண்ட சூரிய கிரகணம் என்பது 2027, ஆகஸ்ட் 2 ஆம் தேதிதான் இன்றைய தினம் இல்லை. வரும் 2027 ஆம் ஆண்டு கூட பூமி முழுவதுமாக இருளில் மூழ்காது. இந்த சூரிய கிரகணம் "நூற்றாண்டின் கிரகணம்" என அழைக்கப்படுகிறது.
இந்த நூற்றாண்டு கிரகணம் 6 நிமிடம் 22 வினாடிகள் இருக்கும். ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன், சோமாலியா உள்ளிட்ட 11 நாடுகளில் மட்டுமே இந்த கிரகணத்தின் தாக்கம் இருக்குமே தவிர, பூமி முழுவதும் இருளாக்காது. அதற்காக அந்த 11 நாடுகளும் கூட முழுமையாக இருட்டாகாது, மாலை நேரம் போல் சூரிய வெளிச்சம் குறைவாக இருக்கும். எனவே இந்த கிரகணம் குறித்து சமூகவலைதளங்களில் வரும் கருத்துகளை நம்பி பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என நாசா தெரிவித்துள்ளது.
இந்த கிரகணம் சுமார் 160 மைல் (258 கி.மீ.) அகலமான பாதையில் தெரியும். இது பூமியின் மேற்பரப்பில் 9,462 மைல் (15,227 கி.மீ.) தூரம் வரை இருக்கும். ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தெற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் இந்த கிரகணம் தெரியும். வட அமெரிக்கா, உலகின் பிற பகுதிகளில் கிரகணம் தெரியாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications