ஞாபகம் இருக்கா சஞ்சய் பாபா?.. எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணையா.. கொடநாடு கேஸில் திடீர் திருப்பம்
கொடநாடு வழக்கை விசாரித்த நீதிபதி டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமியிடம் கொடநாடு குறித்த விசாரணை நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வரும் நிலையில், புது திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
சசிகலாவிடம் இரண்டு நாள் விசாரணையை தனிப்படை போலீஸார் முடித்துக் கொண்ட நிலையில், ஒரு சில தகவல்கள் மட்டும் வெளியே கசிந்தது.
எடப்பாடி பழனிசாமி குறித்து, முக்கிய தகவல்கள் சிலவற்றை அதிகாரிகளிடம் சொன்னாராம் சசிகலா.. அதுதான் அதிமுக மேலிடத்துக்கு புளியை கரைத்து கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
அதேபோல, இந்த விசாரணையில் தன்னைப் பற்றி என்ன சொன்னார் என்பதை அறிய முயற்சித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக, அதிமுக ஆட்சியில் மாநில உளவுத்துறையில் உயரதிகாரியாக இருந்தவரின் உதவியை அவர் நாடியிருக்கிறார்.. அதேபோல, தனது ஆட்சியின் போது முக்கிய பொறுப்புகளில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் அணுகியிருக்கிறார். இரண்டு தரப்பிலுமிருந்து அவருக்கு கிடைத்த தகவல் ஒரே மாதிரி இருந்தது.

கொடநாடு
அதாவது, கொடநாடு சம்பவத்தின் போது ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் உதவியில்லாமல் அந்த பங்களாவில் நுழைய யாருக்கும் துணிச்சல் வந்திருக்காது.. இந்த விசாரணையின் இறுதிக் கட்டத்தில் நீங்களும் விசாரிக்கப்படுவீர்கள், அதற்கான திட்டமிடலும் போலீசாரிடம் இருக்கிறது" என்று சொல்லி உள்ளதாக செய்திகள் கிசுகிசுத்தன.

எதிர்பார்ப்பு
ஆகவே, சசிகலாவிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், எந்நேரமும் எடப்பாடியிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாகவே ஏற்பட்டு வருகிறது.. அதற்கேற்றபடி, ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்களிடமும், அதிமுகவை சேர்ந்தவர்களிடமும் விசாரணை வேகம் எடுத்து வருகிறது.. நேற்று அதிமுகவை சேர்ந்த சஜீவனிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.. சஜீவன் அதிமுக மாநில வர்த்தக அணி பொறுப்பாளராக இருந்து வரும் நிலையில், இவரிடம் நடத்தப்பட்ட விசாரணை முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.

எடப்பாடியிடம் விசாரணை?
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, நீதிபதி இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.. இந்த வழக்கு, ஊட்டி கோர்ட்டில், நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில்தான் இத்தனை காலமுமாக நடந்து வருகிறது... தமிழகத்தில் 58 நீதிபதிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட நிலையில், கொடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய்பாபாவும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.. இவர்தான் இந்த வழக்கை அப்போதிருந்தே விசாரித்து கொண்டிருக்கிறார்.. இவர்தான் சில முக்கிய உத்தரவுகளையும் இந்த வழக்கில் பிறப்பித்தவர்..

முருகன்
வழக்கு கடந்த 10 நாட்களாக சூடுபிடித்து வரும் நிலையில், இவரை ஏன் மாற்றம் செய்தார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. இவரை தேனி முதன்மை மாவட்ட நீதிபதியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக முருகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்... இவர்தான் இனிமேல் கொடநாடு கேஸை விசாரிக்க போகிறவர்.. எனினும் சஞ்சய் பாபா மாற்றம் ஏன் நடந்தது என்பதுதான் பரவலான சந்தேகமாக உள்ளதாம்..!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications