Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சைக்கிளி" கூண்டைவிட்டு பறக்குதா? சொல்லி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி.. அசராத தாமரை தலைவர்.. டமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள பாதயாத்திரையானது, அதிமுக - பாஜக கூட்டணிக்கு பலன்களை பெற்று தருமா? அல்லது இருக்கின்ற விரிசலை மேலும் அதிகப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்புகள் அரசியல் களத்தில் எழுந்துள்ளன.

ஆரம்பத்தில் இருந்தே, தன்னுடன் மோதல் போக்கை அண்ணாமலை கடைப்பிடித்து வருவதால்தான், எடப்பாடி பழனிசாமி, டெல்லி மேலிட தலைவர்களிடம், "மாநில தலைமையை மாற்றுங்கள்".. இல்லாவிட்டால் கூட்டணிக்குள் பிரச்சனை வந்துவிடும் என்று எடுத்துரைத்தாராம்..

பாஜகவுக்குள்ளேயே மேல்மட்ட தலைவர்களும் இதே பிரச்சனையை டெல்லிக்கு கொண்டு சென்றிருந்ததாகவும் சொல்லப்பட்டது.. ஈரோடு தேர்தலின்போது, ஓபிஎஸ்ஸூம்கூட, இதே விவகாரத்தை டெல்லிவரை கொண்டு போனதாக சொல்கிறார்கள்.
துணிச்சல் முடிவு: எனினும், டெல்லி மேலிடம் அண்ணாமலை விஷயத்தில் அமைதி காக்கவே செய்தது.. இப்போதுவரை அண்ணாமலை மீதான நன்மதிப்பு மேலிடத்துக்கு அபரிமிதமாகவே இருக்கிறது.. சமீபத்தில். ஈரோடு இடைத்தேர்தல் சமயத்திலிருந்தே, அதிமுக - பாஜக மோதல் வெடித்தபடியே உள்ளன.. இதில் 2 கட்சிகளுக்கிடையே, ஈகோவும் வெடித்து கிளம்பி உள்ளது..

Will Edapadi Palaniswami form alliance without BJP and What are the Annamalais Strategies

"அண்ணாமலை சொல்வது போல், தேர்தலில் அவர்கள் தயவில் நாங்கள் வெற்றி பெற போவதில்லை. எங்களுடன் பயணித்தால் மட்டுமே அவர்களால் கரைசேர முடியும். இல்லாவிட்டால் நட்டாற்றில் போக வேண்டிய பரிதாபம் அவர்களுக்கு ஏற்படும்" என்று செல்லூர் ராஜூ கொளுத்திப்போட, "கரை சேர முடியாமல் நட்டாற்றில் தத்தளித்த அதிமுகவை நங்கூரமிட்டு பாதுகாத்தது பாஜகதான் என்பதை மறந்துவிடக் கூடாது'' என்று பாஜகவின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி தரவும், மேலும் கருத்து மோதல் வலுவானது.

பெருச்சாளி: "இனியும் எங்க பேச்சுக்கு வந்தால், அண்ணாமலை வாங்கிக் கட்டிக்கொள்வார்.. கட்டுச்சோறுக்குள்ள பெருச்சாளி.. அண்ணாமலைக்கு வாய் நீளம்.. நாக்கு நீளம்,.. வாய் சவடால்.,.. கொஞ்சமும் நாவடக்கம் இல்லை.. மற்ற கட்சி வேண்டுமானால் சூடு சொரணை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாங்கள் அப்படி இருக்க முடியாது.. எங்கள் காலை மிதித்தால், நாங்கள் திரும்ப மிதிப்போம்" என்று ஜெயக்குமார் பேசவுடம், கூட்டணி முறிந்துவிடுமோ என்ற பேச்சும் அடிபட்டது.

அதற்கேற்றவாறு, தனித்து போட்டி என்று, எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மாறி மாறி சொல்லி கொண்டேயிருந்தனர்.. இப்போதுவரை எடப்பாடி பழனிசாமியும் சரி, அண்ணாமலையும் சரி, இரு தரப்பிலிருந்தும் இணக்கமான பேட்டிகளோ, பேச்சுக்களோ வெளியாகவில்லை.. இதுவரை கூட்டணி குறித்தும் அண்ணாமலை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.. எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலை தரப்பும் இதுவரை நேருக்கு நேர் வெளிப்படையாக சந்தித்து கொள்ளவுமில்லை..

அண்ணாமலை: இதற்கு நடுவில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடந்தது.. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்ததோ அல்லது எடப்பாடி குறித்தோ அண்ணாமலை ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அப்படி எதுவுமே பேசவில்லை. ஆக, அதிமுக - பாஜக கூட்டணி உறுதிப்படுத்தினாலும்கூட,, அகில இந்திய அளவில்தான் அது உறுதியாகி உள்ளதே தவிர, மாநில அளவில் இன்னும் இணக்கமான போக்கு ஏற்படவில்லை என்றே கருதப்படுகிறது.

அப்படி இணக்கமான போக்கு ஏற்படவேண்டுமானால், அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.. அப்படி அறிவித்தால்தான், 2 கட்சி தொண்டர்களும் இணைந்து களத்தில் பணியாற்ற முடியும் என்பது அடிப்படையான விஷயம்.. ஆனால், இதுவரை அப்படியான நிகழ்வு எதுவுமே நடக்கவில்லை.

பாதயாத்திரை: இந்நிலையில்தான், அண்ணாமலை தன்னுடைய நடைபயணத்தையும் அறிவித்துள்ளார்.. இந்த நடைபயணத்துக்கு வரும்படி அண்ணாலை போன் செய்து, அழைப்பு விடுத்தும், எடப்பாடி பழனிசாமி வர மறுத்துள்ளார். ஓபிஎஸ், தினகரனுக்கும் அழைப்பு போனதால், எடப்பாடி பங்கேற்கவில்லை என்கிறார்கள்.. உண்மையிலேயே இதுதான் காரணமா? அல்லது அண்ணாமலையின் அதிரடி அரசியல்தான், அதிமுகவை கடுப்பாக்கி உள்ளதா? என்று தெரியவில்லை.

சமீபகாலமாகவே, அதிமுகவுடனான கூட்டணியை அண்ணாமலை விரும்பவில்லை என்பதே அவரது ஒரே குறிக்கோளாக இருந்து வருகிறது.. அதனால்தான், தனித்து போட்டியிடுவோம், அப்போதுதான் நமது பலம் தெரியும், கிளி கூண்டைவிட்டு பறக்க தயாராகிவிட்டது என்ற துணிச்சல் முடிவையும் தன்னுடைய நிர்வாகிகளிடம் அண்ணாமலை முன்வைத்திருந்தார்.

தனித்து போட்டியிடுவோம், அப்போதுதான் நமது பலம் தெரியும் என்ற துணிச்சல் முடிவையும் அண்ணாமலை பாஜக மேலிடத்திலேயே முன்வைத்து வருகிறார்.. அண்ணாமலை சொல்வதை, பாஜக தலைவர்களும் தவிர்த்துவிடாமல், கவனத்தில் எடுத்து கொள்கிறார்கள்.

தனித்து போட்டி: அதுமட்டுமல்ல, மொத்தத்தில் தமிழக பாஜக தலைமையிலான, அதாவது தன்னுடைய தலைமையிலான கூட்டணி அமைவதையே அண்ணாமலை பெரிதும் விரும்பவுதாகவும், 3வது அணியாக அதிமுக களமிறங்கட்டுமே என்ற எண்ணமும் தமிழக பாஜக தலைமைக்கு இருப்பதாகவும் தெரிகிறது.. அதன் ஒருபகுதியாகவே இந்த நடைபயணத்தை அண்ணாமலை துவக்கியிருக்கிறாராம்.

இந்த பாதயாத்திரையானது, கிட்டத்தட்ட அதிமுகவுக்கு எரிச்சலுட்டுவதாகவே பார்க்கப்படுகிறதாம்.. காரணம், சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் எடப்பாடிக்கு மேலிட பாஜக தந்த முக்கியத்துவத்தை, தமிழக பாஜக அதிர்ந்து போய்விட்டதாம்.

நடைபயணம்: இப்போதுவரை, அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது.. வரும் தேர்தலை மையப்படுத்திதான், இந்த நடைபயணத்தையும் அண்ணாமலை மேற்கொள்ள போகிறார். அப்படி இருக்கும்போது, அவரது தலைமையில் நடைபெறும் நடைபயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் கலந்து கொண்டால், அது அதிமுகவுக்கு சறுக்கலாகிவிடுவதுடன், பாஜக தலைமையில்தான் அதிமுக கூட்டணி ஏற்படுத்தும் என்று பிம்பம் மக்களிடம் ஏற்பட்டுவிடும் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

ஜூலை 28-ம் தேதி, ராமநாதபுரத்தில் மதுரை மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் உள்ளதால், நடைப்பயண நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் சீனியர்கள் தமிழ்மகன் உசேன், கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், அதேபோல சிவகங்கையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் பங்கேற்க வாய்ப்பிருக்கிறது என்றும் அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால், பாதயாத்திரைக்காகவே பிரத்யேகமாக கலந்து கொள்வதற்காக பங்கேற்கவில்லையாம்.. மாநாடு நடப்பதால்தான், அதிமுக சீனியர்கள் பங்கேற்பதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று அழைக்காமல், போனிலேயே அழைப்பு விடுத்துவிட்டாராம் அண்ணாமலை.. இதையும் ஒரு காரணமாக சொல்கிறார்கள்.

பலமா? பலவீனமா?: எனினும், அண்ணாமலை ஆரம்பித்துள்ள இந்த யாத்திரை, அதிமுகவை மேலும் பலவீனப்படுத்துமா? அல்லது பாஜகவை மேலும் பலப்படுத்துமா? அல்லது பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவதை மையப்படுத்தியே இந்த பாதயாத்திரை நடக்கிறதா? இறுதியில், இந்த பாதயாத்திரை அதிமுக - பாஜக கூட்டணிக்கு அடித்தளமாக அமையுமா? அல்லது விரிசலில் கொண்டுபோய் விட்டுவிடுமா? ஓபிஎஸ், தினகரன் நிஜமாகவே கலந்து கொள்ள போகிறார்களா? என்றெல்லாம் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+