பெரிய சிக்கலாக போகுது.. ஆளுநர் ரவியால் "மாட்டிக்கொண்ட" அதிமுக.. தர்மசங்கடம் ஆகிடும்.. என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியின் செயலால் அதிமுகவிற்கு தற்போது தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக எடுக்க போகும் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி தமிழ்நாடு அரசியலில் எழுந்துள்ளது.

தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன.

இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார்.

விதி மீறல்

விதி மீறல்

ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி இந்த விதியை மீறி உள்ளார். ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். இதையடுத்தே ஆளுநரின் உரையை நீக்கிவிட்டு உண்மையான உரையை பதிவு செய்யும்படி முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த தீர்மானம் சட்டசபையில் வெற்றிபெற்ற நிலையில், ஆளுநர் ரவியின் பேச்சு நீக்கப்பட்டு, உண்மையான அரசு தயாரித்த உரை சட்டசபை பதிவில் ஏற்றப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அனுப்பி இருக்கும் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்று இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கல்

பொங்கல்

12ம் தேதி மாலை இந்த பொங்கல் விழா நடக்கிறது. இந்த பொங்கல் விழாவிற்கு ஆளுநர் சார்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சட்டசபையில் உள்ள கட்சிகள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு சென்றுள்ளது. இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்று உள்ளது. தமிழ்நாடு- தமிழக வார்த்தை பிரயோகம் சர்ச்சை ஆன நிலையில், ஆளுநர் தற்போது அனுப்பி இருக்கும் இந்த கடிதமும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் இலட்சினையையும் ஆளுநர் ஆர். என் ரவி நீக்கி இருக்கிறார். இதுதான் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

திமுக விமர்சனம்

திமுக விமர்சனம்

திமுகவினர், திமுக நிர்வாகிகள் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி இதை தொடர்பாக செய்துள்ள ட்விட்டில், ஆளுநர் மாளிகை tea-க்கு தமிழ்நாடு அரசின் காசு வேனும் ஆனால் அழைப்பிதழில் தமிழ்நாடு எனும் வார்த்தையும்,தமிழ்நாடு அரசின் சின்னமும் இருக்காதா ஆளுநர் ரவி? ஆளுநர் மாளிகையே தமிழ்நாடு அரசின் சொத்து தான் .. ரோசப்பட்டு வெளியேறுங்கள் mr ravi.... பார்ப்போம்!! என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திமுக ஐடி விங் சார்பாக செய்யப்பட்டுள்ள ட்விட்டில், சமத்துவத்திற்காக போராடி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர், நவீன தமிழகத்தை கட்டமைத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பெயரை சொல்ல மறுத்து, சனாதன கொள்கைகளை ஆளுநர் அவைக்குள் கொண்டு வர முயல்வது ஏற்புடையது அல்ல. , என்று குறிப்பிட்டு உள்ளனர்.

சனாதனம்

சனாதனம்

மேலும், சனாதன கொள்கைகளை புகுத்த முயன்ற ஆளுநரின் முயற்சிகளை நேருக்கு நேர் கண்டித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். முதலமைச்சரின் இந்த எதிர்வினையை எதிர்கொள்ள முடியாமல், பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநரின் செயல், மக்களிடம் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது., என்று குறிப்பிட்டு உள்ளனர். இந்த நிலையில் ஆளுநரின் பொங்கல் விழாவிற்கு நாளை திமுக செல்லாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அதேபோல் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளும் இந்த நிகழ்வை புறக்கணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்த நிலையில் அதிமுக இந்த நிகழ்வை புறக்கணிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அதிமுகவிற்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்வை புறக்கணிக்கவில்லை என்றால், அவர் ஆளுநரின் "தமிழகம்" என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். அதாவது ஆளுநரின் நிலைப்பாட்டிற்கு எடப்பாடி ஆதரவு தெரிவிப்பது போல ஆகிவிடும். தமிழகம் என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவாக எடப்பாடி இருப்பது போல ஆகிவிடும். அதே சமயம் இதை புறக்கணித்தாலும் அவர் ஆளுநரை எதிர்ப்பது போல

ஆளுநர் எதிர்ப்பு

ஆளுநர் எதிர்ப்பு

பாஜக இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் பட்சத்தில் எடப்பாடி கலந்துகொள்ளவில்லை, அது பாஜகவை எதிர்ப்பது போல ஆகிவிடும். பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடப்பாடி எதிர்ப்பது போல நிலை மாறிவிடும். இதனால் அதிமுக தர்மசங்கடமான நிலையை அடைந்துள்ளது. அதிமுக இந்த பக்கம் செல்லுமா.. அந்த பக்கம் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் இந்த நிகழ்வை புறக்கணிக்கப்பாரா அல்லது ஆதரிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் பாமக இந்த நிகழ்வை புறக்கணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரின் செயல்பாடுகளை பாமக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதனால் பாமக இந்த நிகழ்வை கண்டிப்பாக எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+