அடிப்படை விதியை "கிராஸ்" பண்ணிட்டாரு.. கடுகடுத்த எடப்பாடி! விடிஞ்சதும் "கச்சேரி".. ஓபிஎஸ்ஸுக்கு செக்
சென்னை: அதிமுகவின் முக்கியமான விதி ஒன்றை ஓ பன்னீர்செல்வம் மீறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கருதுகிறதாம்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு நாளை காலை 9.15 மணிக்கு நடக்க உள்ளது. பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தொடுத்த வழக்கில் நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
பொதுக்குழுவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம், மனு தாக்கல் செய்து இருந்தார். நாளை ஒற்றை நீதிபதி அமர்வு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறது.

பொருளாளர்
இந்த நிலையில் நாளை பொதுக்குழு நடக்கும் பட்சத்தில் அதில் ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் என்ற முறையில் கணக்கு வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். பொருளாளர் என்பதால் பொதுக்குழுவில் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் ஓ பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதே சந்தேகம் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் போது இவர் கணக்கு வழக்குகளை தாக்கல் செய்யவும் வாய்ப்பு இல்லை.

நீக்கம்
இதை பயன்படுத்தி அவர் கட்சி விதிகளை மீறிவிட்டார் என்று கூறி நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாம். அதோடு நாளை பொதுக்குழு நடக்கும் நிலையில், ஓ பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கடுகடுப்புடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

கடுகடுப்பு
ஓ பன்னீர்செல்வம் கட்சி விதிகளை மீறிவிட்டார். எல்லா ரூல்ஸையும் அவர் மீறிவிட்டார். அவர் மீது வேறு விதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். அப்போது அங்கு பேசிய சீனியர் ஒருவர்,.. கட்சி விதிப்படி ஒருவர் கட்சிக்கு எதிராக வழக்கு தொடுக்க கூடாது. அப்படி செய்தால் அவரை கட்சியில் இருந்து நீக்கலாம்.

வேறு கட்சி
வேறு கட்சியில் இணைவதும், அதிமுகவிற்கு எதிராக வழக்கு தொடுப்பதும் ஒரே அளவிலான குற்றம்தான். எனவே இதை பயன்படுத்தி ஓ பன்னீர்செல்வத்தை நீக்கலாம் என்று கூறி இருக்கிறார். அப்போது இன்னொரு நிர்வாகி நாமும்தான் வழக்கு தொடுத்தோமே? என்று கேட்டதற்கு, அந்த மூத்த தலை.. நாம் பதில் மனு தொடுத்தோம், ஏற்கனவே உள்ள தீர்ப்பிற்கு எதிராகவே மேல்முறையீடு செய்தோம். நாமாக கட்சி முடிவிற்கு எதிராக வழக்கு தொடுக்கவில்லை.

நீக்கம்
அதனால் அந்த விதி நமக்கு பொருந்தாது என்று விளக்கி இருக்கிறாராம். இந்த நிலையில் இந்த கட்சி விதியை பயன்படுத்தி ஓ பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி முயல்வார் என்கிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் ஆன பின் ஓ பன்னீர்செல்வத்தை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க எடப்பாடி முயல்வார் என்கிறார்கள். இதன் மூலம் பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடுவதையும் எடப்பாடி தடுத்து போட்டியின்றி வெற்றிபெற முடியும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications