இரவோடு இரவாக மாறிய களம்.. மொத்தமா குறி பார்த்த எடப்பாடி பழனிசாமி.. திமுக ஓட்டு சிதறுதா? மிரளும் பாஜக
சென்னை: திமுகவின் சிறுபான்மை ஓட்டுக்களை உடைக்க, ஏகப்பட்ட முயற்சிகளை அதிமுக மேற்கொண்டு வருவதாக சொல்கிறார்கள்..!!
சிறுபான்மையினர் ஓட்டுக்களை அதிமுக பக்கம் கொண்டு வரும் முனைப்புடன், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டது.
ஆனால், அசாதுத்தீன் ஓவைசி, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி என ஒருசிலரே எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை தந்துள்ளார்களே தவிர, பெரிய கட்சி யாருமே இதுவரை அதிமுகவுடன் கூட்டணியை அறிவிக்கவில்லை.

அதிமுக: அதுமட்டுமல்ல, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை விலக்கினால் திமுக கூட்டணி உடையும், அந்த கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என்றெல்லாம் கணக்கு போட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையிலும், திமுகவில் இருந்து யாருமே கூட்டணிக்கு வரவில்லை.
ஆக, சிறுபான்மையினர் தரப்பு + திமுக கூட்டணி தரப்பு என யாருமே அதிமுக கூட்டணிக்கு இதுவரை வராமல் உள்ள நிலையில், இந்த விவகாரம், அதிமுகவுக்குள்ளேயே புயலை கிளப்பியிருக்கிறது.
ஆதரவாளர்கள்: அதிமுகவிலேயே இருக்கும், பாஜக ஆதரவாளர்களான 2 அதிமுக விஐபிகள், "பாஜகவை வெளியேற்றினால், காங்கிரஸ் நம்மிடம் வரும் என்றும், திமுக கூட்டணி கலகலத்துவிடும் என்றும் சொன்னீங்க. அதற்கான அறிகுறிகளே இப்போது வரைக்கும் எங்குமே காணலை.. அதிமுக கூட்டணிக்கு போய் விடுவோம்னு நம்மைக் காட்டி திமுகவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. இப்படி பேரம் பேசத்தான் அதிமுக-பாஜக கூட்டணி முறிவு உதவியிருக்கிறது" என்று கடுப்பாகி சொன்னார்களாம்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "ஏப்பா... அரசியல்னா அப்படித்தான் இருக்கும். 5 மாநில தேர்தல்ல பிசியாக இருக்காங்க. சீட் ஷேரிங் எதுவும் திமுக கூட்டணியில் முடிவாகலை. பொறுங்கப்பா' என்றாராம். முக்கிய தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சமாதானம் செய்த நிலையில், இப்போது 2 முக்கிய திட்டங்களை கையில் எடுக்க போகிறாராம்.
அசைன்மென்ட்: அந்தவகையில் நிர்வாகிகளுக்கு சில அசைன்மென்ட்களை தந்திருக்கிறாராம்.. 'சிறுபான்மையினா் பிரச்சனைகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சிறுபான்மையினா் பங்களிப்பையும் கட்சியில் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.. பாஜகவுடன் அதிமுக இல்லை என்பதை மக்களிடம் தெளிவாக எடுத்து சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறாராம்.
இதுபோக, வரும் ஜனவரியில், தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளார். இந்த சுற்றுப்பயணம் எதற்காகவென்றால், 6 வருடங்களுக்கு முன்பு இழந்துவிட்ட சிறுபான்மையினர் வாக்குகளை, மறுபடியும் பெற்றாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தானாம்..
பாஜக கூட்டணி: பாஜகவுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்துக்காக, சிறுபான்மையினர் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் ஆதரவை இழந்துவிட்டு நிற்பதை அதிமுகவால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். இதன் முதல் கட்டமாகவே, முஸ்லிம் அமைப்புகளுக்கு அதிமுக அழைப்பு அழைப்பு விடுத்தது.. இதற்கு பிறகுதான், இஸ்லாமிய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அதிமுகவுக்கு ஆதரவையும் தந்தார்கள்.
இதன் அடுத்த கட்டமாக, இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மிக பிரமாண்டமான மாநாடு நடத்த போகிறார்களாம். இந்த மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமியை பங்கேற்க அழைக்க போகிறார்களாம்.. அப்போது இஸ்லாமியர்களுக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொழியும் பாசம்: அதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் இருவர் மீதும், இஸ்லாமியர்கள் எந்த அளவுக்கு பாசத்துடன் இருந்தாங்களோ அதே பாசத்தை மறுபடியும் பெறப்போகும் வகையில், எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகள் இருக்குமாம்.
இதன் அடுத்த கட்டமாக, கிறிஸ்தவ அமைப்புகளும், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார்கள். இதன் பின்னணியில் கொங்கு மண்டல மாஜி தீவிரமாக செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள். தமிழ்நாடு ஐக்கிய கிறிஸ்தவ கழகத்தின் சார்பிலும், கிறிஸ்தவர்கள் திரண்டு சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
பிளான்கள்: வருகிற 28-ந் தேதி கருமத்தம்பட்டியில் நடைபெற உள்ள கிறிஸ்தவர்கள் உரிமை மீட்டெடுப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியும் மாநாட்டிற்கு வரப்போவதாக சொல்லி உள்ளாராம்.
அந்தவகையில், கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகளும் அதிமுகவுடன் நெருங்கி வருவதாக சொல்கிறார்கள். இதையெல்லாம் திமுக கவனிக்காமல் இல்லை. என்னதான் நடக்க போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications