ஸ்டாலினை பார்த்தீங்களா.. "அவரும்" இப்படி வரபோறாராமே.. ஆனந்தராஜ் யாரை சொன்னார்?.. அமைச்சரின் ஸ்கெட்ச்

மாஜி சபாநாயகர் தனபால் திமுக பக்கம் வர உள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று ஆனந்தராஜ் ஏன் அந்த வார்த்தையை சொன்னார்? அவர் யாரை சொல்கிறார்? என்ற சந்தேகம் அரசியல் களத்தில் எழுந்து கொண்டே இருக்கிறது.

Recommended Video

    NEET 2021 திமுக -வில் இணைய நான் Ready | Anand Raj latest pressmeet

    நடிகர் ஆனந்தராஜை பொறுத்தவரை அதிமுகவின் தீவிர விசுவாசி.. ஜெயலலிதாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர்.. அவர் மறைவுக்கு பிறகு கட்சி இவரை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.. குறைந்தபட்சம் பிரச்சாரங்களுக்குகூட இவரை பயன்படுத்தி கொள்ளவில்லை.

    இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தார்.. அப்போது அவரது மொத்த அதிருப்தியும் வெளிப்பட்டது.

    திமுக

    திமுக

    "அதிமுக தலைமையில் உள்ளவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் தங்களுக்கு யார் பிடிக்கின்றதோ, அவர்களை தன் அருகே வைத்துக்கொண்டு மற்றவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்... அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் தற்போது திமுகவில் சேர்ந்து நல்ல அந்தஸ்த்தில் இருக்கிறார்கள்... இன்னும் பலர் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சேர தயாராக இருக்கிறார்கள்.. இதுக்கெல்லாம் அதிமுகவின் தலைமை தான் காரணம் " என்று அவர் தெரிவித்தார்.

    மனக்குறை

    மனக்குறை

    ஆனந்தராஜின் சொந்த விருப்பு - வெறுப்பான முடிவு இது என்றாலும், அதிமுகவில் பலரது புலம்பல்களும், மனக்குமுறல்களும் கிட்டத்தட்ட ஆனந்தராஜ் போலவேதான் இருந்து வருகிறது.. அதனால், அதிமுக தலைமைதான் இதையெல்லாம் பரிசீலித்து, குறைகளை களைய முன்வர வேண்டும்.. அதேசமயம் திமுகவில் இன்னும் சிலர் சேர போகிறார்கள் என்று ஒரு பஞ்ச் வைத்துள்ளார் ஆனந்தராஜ்.

     கொங்குநாடு

    கொங்குநாடு

    அதற்கேற்றபடி, "கொங்குநாடு" பற்றின தன் கருத்தையும் முன்வைத்தார்.. "கொங்கு மக்களைப் பற்றி அரசியல்வாதிகளைவிட எனக்கு நன்றாகத் தெரியும். கொங்குநாடு என்பது மக்களின் உணர்வு அல்ல. நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரிவினை கோஷத்தை எழுப்பலாம். பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அரசியல்வாதிகள், வாயைக் கட்டிக்கொள்ள வேண்டும்" என்றும் கூறியிருந்தார்.

    ஆனந்தராஜ்

    ஆனந்தராஜ்

    இந்த இரு விஷயங்களைதான் இங்கு பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது.. சில புள்ளிகள் திமுகவில் இணைவார்கள் என்று ஆனந்தராஜ் சொன்னது யாராக இருக்கும்? என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், ஒரு தகவல் கசிந்து வருகிறது.. அந்த நபர் மாஜி சபாநாயகர் தனபால் என்கிறார்கள்.,. தனபாலை திமுகவுக்கு கொண்டுவரும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக மற்றொரு தகவல் கூறுகிறது..

    லிஸ்ட்

    லிஸ்ட்

    கொங்கு மண்டலத்தில் தனது கொடியை நாட்டவேண்டும் என திமுக பலமாக முயற்சித்து வருகிறது. அதற்காக பிற கட்சியில் இருப்பவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிது.. ஏற்கனவே, அமமுக பழனியப்பன், அதிமுக தோப்பு வெங்கடாசலம், மநீம மகேந்திரன் திமுக பக்கம் வந்துவிட்டனர்.. இந்த லிஸ்ட்டில் தனபாலும் வர போவதாக கூறப்படுகிறது.

     அருந்ததியர்

    அருந்ததியர்

    இதற்கு காரணம், கொங்கு மண்டலத்தில், எப்போது தேர்தல் வந்தாலும், அதன் வெற்றியை தீர்மானிப்பதில் அருந்ததியர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.. அதனால், அந்த சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களைதான், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் குறி வைத்து வருவதாக தெரிகிறது.. அதனாலேயே தனபால் பெயர் அடிபடுகிறது.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    தனபாலை பொறுத்தவரை ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்.. இந்த முறை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு, பலத்த போட்டி எழுந்தபோது, ஓபிஎஸ்ஸுக்குதான் அந்த பதவியை தர வேண்டும் என்று சப்போர்ட் செய்தது தனபால்தான்.. ஆனாலும் இவர் பேச்சு அங்கு எடுபடவில்லை.. அதாவது கொங்குவில் இருந்தாலும் எடப்பாடியின் ஆதரவை முழுமையாக பெறாதவர்தான் தனபால்.

    கொங்கு

    கொங்கு

    இதை பயன்படுத்திதான் இவரிடம் பேச்சு நடக்க ஆரம்பித்துள்ளனராம்.. தனபாலும் கிட்டத்தட்ட ஓகே தான் என்கிறார்கள்.. ஒருவேளை தனபால் திமுக பக்கம் வந்துவிட்டால், இனி அதிமுகவை கொங்குவில் மீட்டு கொண்டு வருவது கஷ்டம்தான் போலும்.. அதேசமயம், ஸ்டாலினின் செயல்பாடுகள் மாற்று கட்சியினரை இப்படி ஈர்த்து வருவதுடன், கொங்குவில் பலம் பெருக்க, அவர் போட்ட அரசியல் ஸ்கெட்ச் அபாரமாக நடந்து வருகிறது.. கொங்குவில் திமுக கொடி விரைவில் பறக்க போகிறது.. பார்ப்போம்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+