தமிழ்நாட்டில்.. கோபி மஞ்சூரியனுக்கு தடை? ஆசையா சாப்பிடுவோமே? சுகாதாரதுறை செம.. "மா.சு எப்பவுமே மாஸ்"
சென்னை: கர்நாடகாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்படுகிறதா? என்ன சொல்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்?
எதையெல்லாம் குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடுகிறார்களோ, அதில் ஒருசில உணவுகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டு வருகிறது.. கடந்த மாதம், பஞ்சு மிட்டாய்கள் பற்றின பகீர் உண்மை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டது..

கர்நாடக அரசு: இந்த லிஸ்ட்டில் கோபி மஞ்சூரியனும் இணைந்துள்ளது.. இந்த உணவுகள் ஆரோக்கியமான முறையில் செய்யப்படுகின்றனவா? என்று கர்நாடக சுகாதாரத் துறை திடீரென ஆய்வுக்குள் இறங்கியது.
இதற்காகவே, பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் விற்கப்படும் தெருவோர கடைகளிலிருந்து மொத்தம் 171 உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியிருந்தது.
அந்த ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியிருந்தன.. ஆய்வு செய்யப்பட்ட 171 உணவுகளில், 107 உணவுகளில் பாதுகாப்பற்ற செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது..
பாதுகாப்பு: அதாவது 64 உணவு மாதிரிகள் மட்டுமே பாதுகாப்பானதாக இருந்தனவாம்.. 2 உணவுகளிலுமே கலர் கிடைப்பதற்காக, ரோடமைன்-B, டார்ட்ராசைன் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகிறதாம். இந்த 2 கெமிக்கல்களுமே புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அபாயம் நிறைந்தவையாம்.
அதனால்தான், இந்த உணவுகளைத் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவு போட்டுள்ளது.. ரோடமைன்-B என்ற நிறமிக்கும் முழுமையாகத் தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.யாராவது இந்த தடையை மீறினால் கைது செய்யவும் உத்தரவு போடப்பட்டிருக்கிறது.
அதிரடி உத்தரவு: கர்நாடகாவில் பஞ்சுமிட்டாய்க்கு தடை என்றதும், நம்முடைய தமிழ்நாட்டிலும் தடை விதிக்கப்பட்டது. இப்போது கோபி மஞ்சூரியனுக்கும் தடை என்பதால், தமிழகத்திலும் தடை விதிக்கப்படுமா? என்ற சந்தேகம் கிளம்பியது..
அதுமட்டுமல்ல, வடக்கு கோவாவில் சாலையோரக் கடைகளிலும், கோபி மஞ்சூரியன் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.. இதைத்தவிர, கோபி மஞ்சூரியன் மட்டுமல்லாமல், சிக்கன் வகைகளிலும், பிரியாணி, சிவப்பு மிளகாய் போன்றவற்றிலும், இந்த "ரோடமைன் பி" கலப்பது தமிழக உணவு பாதுகாப்பு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திலும் இப்படியான சந்தேகம் கிளம்பவும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் தந்துள்ளார்.
போதை பொருட்கள்: தமிழகத்தில் போதைப் பொருட்கள் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் எங்கேயும் கஞ்சா பயிரிடப்பட வில்லை.
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களுக்கு தடை இருக்கிறது.. ஆனால், கர்நாடகாவில் இவற்றுக்கெல்லாம் தடை கிடையாது.. அதனால் இங்கு பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டது. கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்துள்ளார்கள் என்பதற்காக, தமிழகத்தில் தடை செய்ய முடியாது.
நிம்மதி: கோபி மஞ்சூரியனுக்கு தடைவிதிப்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் பரிந்துரைப்படியே நடவடிக்கை எடுக்கப்படும். எந்த உணவு பொருளில் கெடுதல் இருக்கிறதோ அதை உணவுப்பொருள் பாதுகாப்பு துறை மூலம் ஆய்வு செய்து தடை செய்வோம்" என்றார்.. கோபி மஞ்சூரியனுக்கு தடை இல்லை என்ற தகவல் குழந்தைகளுக்கு பெருத்த மகிழ்ச்சியையும், பெரியவர்களுக்கு நிம்மதியையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications