Gpay-ல ரூ.2,000க்கு மேல பணம் அனுப்பினா.. எக்ஸ்ட்ரா காசு புடிப்பாங்களா? உண்மையை தெரிஞ்சுக்கோங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணம் அனுப்புறதை சிம்பிளாக்க வேண்டும் என்றுதான் UPI எனும் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இனி ரூ.2,000க்கு மேல் பணம் அனுப்பினால் அதற்கு கட்டணம் பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால், நாடு முழுவதும் UPI பயனாளர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ஆனால், எல்லோருக்கும் கட்டணம் பிடிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இது குறித்து முழுமையாக பார்ப்போம்.

அக்.15 முதல் என்கிற செய்தியை பார்த்ததும், நம் எல்லோருக்கும் 'பக்' என்றுதான் இருக்கும். இனி ரூ.2,000க்கு அதிகமாக பணம் அனுப்பினால் கட்டணம் பிடிக்கப்படும் என்று பரவலாக பேசப்படுகிறது.

Google Pay UPI RBI

ஆனால், உண்மை என்னவெனில்.. கஸ்டமாராக கடையில் பொருட்களை வாங்கும்போது நாம் செலுத்தும் பணத்துக்கு எந்த கட்டணமும் கிடையாது. இந்த புது அறிவிப்பு MDR. அதாவது UPI மூலம் பணம் அனுப்பும்போது அந்த பண பரிவர்த்தனையை பாதுகாப்பாக செய்து முடிக்க வங்கிகளும், Gpay, Paytm போன்ற நிறுவனங்களும் கட்டணத்தை வசூலிக்கும். இதுக்கு பெயர்தான் MDR. அதுவும் கூட.. எல்லா பண பரிவர்த்தனைக்கும் இந்த கட்டணம் கிடையாது. உதாரணத்திற்கு நீங்கள் SBI வங்கி அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்கள். கடைக்காரர் ICICI அக்கவுண்ட் வைத்திருக்கிறார். புதுசா மொபைல் வாங்க.. பணத்தை ஜிபே செய்கிறீர்கள். இது வங்கி டூ வங்கி பண பரிவர்த்தனை. எனவே இதுக்கு MDR கட்டணம் பிடிக்க மாட்டார்கள்.

நண்பர்களுக்கு அனுப்புகிறீர்கள், மனைவிக்கு அனுப்புகிறீர்கள், கடன் கொடுப்பது.. கடன் வாங்குவது, உங்களுடைய இன்னொரு அக்கவுண்ட்டுக்கு ரூ.50,000 பணம் அனுப்புவது.. இதற்கெல்லாம் எந்த கட்டணமும் கிடையாது. எக்ஸ்ட்ரா பணம் பிடிக்க மாட்டார்கள். இதற்கு பெயர் P2P. அதாவது Person to Person.. அமவுண்ட் எவ்வளவாக இருந்தாலும். ஒரு நாளைக்கு ரூ.1 லட்சத்திற்குள் UPI மூலம் பணம் அனுப்புவது Free.

சரி அப்படின்னா யாருக்குதான் இந்த கட்டணம்? வியாபாரிகளுக்குதான் இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் கூட ரொம்பவும் கம்மிதான்.

  • ரூ. 3,000 எனில் MDR கட்டணம் ரூ. 12
  • ரூ. 50,000 எனில் MDR கட்டணம் ரூ. 200
  • ரூ. 75,000 மற்றும் அதற்கும் மேல் எனில்.. கட்டணம் ரூ.300
  • ரூ. 1 லட்சம் பேமண்ட் பண்ணாலும் ரூ.300தான் கட்டணம். அதை தாண்டாது.

Paytm Wallet, PhonePe Wallet, Amazon Pay அல்லது கிரெடிட் கார்டு போன்றவற்றை UPI உடன் இணைத்து.. அதன் மூலம் பணம் அனுப்பும்போதுதான் MDR கட்டணம் பிடிக்கப்படும். அதுவும் கூட.. டீ கடை, பொட்டிக்கடை, சிறிய மளிகை கடைகள் என.. மாதம் ரூ.20 லட்சம் வரை பிசினஸ் நடக்கும் கடைகளுக்கு இந்த MDR கட்டணம் கிடையாது. பெரிய கடைகள்தான் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை காரணம் காட்டி.. உங்களிடம் கூடுதல் தொகை கேட்டால் அது சட்டப்படி தவறு. எனவே அதை நீங்கள் மறுக்கலாம்.

இது குறித்து பொருளாதார நிபுணர் ராஜேஷ் தனது x பக்கத்தில் சிம்பிளாக புரியும்படி பதிவிட்டிருக்கிறார்.

"சின்ன கடைக்காரர்களுக்கு என்ன ஆகும்?

இதுவும் முக்கியம். P2PM category ல் இருக்கும் small merchants, பொதுவாக மாதத்திற்கு ₹1 லட்சம் வரை UPI QR மூலம் பெறுபவர்கள், Zero MDR protection ல் தொடர்கிறார்கள். அதனால், ₹2,001 Payment வந்தாலே எல்லா கடைக்காரர்களுக்கும் Charge ன்னு புரிஞ்சிக்காதீங்க. அப்படி கிடையாது.

Mutual Fund / Shares வாங்க UPI பயன்படுத்தினால்?

இதுக்கு தனி rate. Mutual Funds, Securities, Stockbrokers போன்ற Capital Market transactions க்கு:

MDR = 0.02%
Maximum: ₹300 per transaction.

இதுவும் investor க்கு போடப்படும் charge அல்ல; applicable merchant/entity க்கான MDR - இந்த சார்ஜ் எல்லாம் Mutual fund ஓட expense ratio ல include ஆயிடும். Shares வாங்க நீங்க UPI பயன்படுத்தினா, இத கண்டிப்பா நீங்க தான் குடுத்தாவனும்.

அப்போ SIP AutoPay க்கெல்லாம்?

இங்க ஒரு நல்ல செய்தி. UPI AutoPay / Mandate மூலம் செய்யப்படும் recurring payments - SIP எல்லாம் prescribed MDR charge க்கு கீழ வராது.

அதாவது உங்கள் monthly SIP AutoPay ல இந்த சார்ஜ் வரவே வராது.

Insurance, Fuel போன்ற Payments?

Railways, Telecom, Insurance, Fuel உள்ளிட்ட குறிப்பிட்ட categories க்கு ₹2,000க்கு மேல் payment பண்ணினா percentage கணக்குல MDR வராது. இதுக்கு Flat ஆ ₹5 MDR க்கு சார்ஜ் பண்ணுவாங்க.

Public utilities போன்ற designated categories க்கும் இந்த concessional ₹5 structure பொருந்தும். இதையும் Merchant தான் bear பண்ண வேண்டும். Customer அல்ல" என்று விவரித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+