கப்சிப்பென இருக்கும் எச். ராஜா.. அமைதிக்கு என்ன காரணம்.. என்னவோ நடக்குது போலயே!

எச் ராஜா மத்திய அமைச்சர் பதவிக்கு முயன்று வருகிறாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்.ராஜா கொஞ்ச நாட்களாகவே அமைதியாக இருக்கிறாராம்.. சர்ச்சை கருத்துக்களையும் பேசுவதில்லையாம்.. அதற்கு என்ன காரணம் என்று விசாரிக்கும்போதுதான், யூகத்தின் அடிப்படையில் ஒரு தகவல் கசிந்துள்ளது!

எச்.ராஜா பாஜகவின் மூத்த தலைவர்.. அனுபவசாலி.. திறமைசாலி.. எதுவானாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்.. யாராக இருந்தாலும் நேருக்கு நேர் கேள்வியை தைரியமாக எழுப்புவார்.. டெல்லி வரை செல்வாக்கு உள்ளவர்.. பாஜக மேலிடத்திடம் நெருக்கமும், பாசமும் காட்டி வருபவர்!

Will H Raja go to RS as MP

சமீபத்தில் இவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், 12 தேசிய துணைத் தலைவர்கள், 8 தேசிய பொதுச் செயலாளர்கள் என மொத்தம் 70 பேர் தேசிய நிர்வாகிகளாக நியமனம் நடந்தும், அதில் எச்.ராஜா பெயர் இல்லாதது அதிர்ச்சியாக இருந்தது.

எனினும், புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும்கூட, கட்சி நிர்வாக பதவிகளில் சேர்க்கப்படாமல் இருக்கும் சிலரை அமைச்சரவை பொறுப்புகளுக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியானது.. அதுமட்டுமல்ல, விரைவில் அமைச்சரவை மாறுதல் பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் அல்லது ஏதாவது ஒரு மாநில ஆளுநர் பதவி கூட எச்.ராஜாவுக்கு வழங்கப்படலாம் என்ற தகவல் கசிந்தவாறே இருக்கிறது.

அதற்கேற்றார்போல் எச்.ராஜாவும் சமீபகாலமாகவே சைலண்ட்டாக இருக்கிறாராம்.. பெரிதாக எந்த விஷயத்துக்கும் சர்ச்சையான கருத்தும் சொல்வது இல்லையாம். இதற்கெல்லாம் காரணம் மத்திய அமைச்சராக முயற்சி செய்துகொண்டிருக்கிறாராம்.. அதனால்தான் இந்த ஆழ்ந்த மவுனம் என்கிறார்கள்.

அதாவது, உத்திரப்பிரதேசத்தில் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது.. அதில், 8 பாஜக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அதில் ஒருவராக போட்டியிட்டு.. அதற்கு பிறகு மத்திய அமைச்சர் பதவியை அடையலாம் என்று எச்.ராஜா ஒரு யோசனையில் இருக்கிறாராம். இதற்கு தமிழக பாஜகவில் உள்ள மற்ற மூத்த தலைவர்களின் எதிர்ப்பு குரலும் டெல்லி வரை சென்றுள்ளதாம்!

எனினும், வரப்போகும் தேர்தலில் திமுகவை வெற்றி பெறாமல் இருக்க வைக்க, எச்.ராஜா போன்றோர் தான் சரியாக இருக்கும் என்று பாஜக மேலிடம் ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கை வைத்துள்ளது என்பதால், அவ்வளவு சீக்கிரம் ராஜாவை விட்டுவிடாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+