Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரிசி அட்டைதாரர்களுக்கு விரைவில் குட்நியூஸ்? ரேஷனில் கார்டுதாரர்களுக்கு ஜவ்வரிசி? அரசுக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசை பொறுத்தவரை, பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் செய்து வருகிறது.. இதன்மூலம் அரிசி அட்டைதாரர்களின் சுமையையும் குறைத்து வருகிறது. இந்நிலையில், ரேஷனில் வழங்கப்படும் பொருட்களுடன் சேர்த்து ஜவ்வரிசியையும் விற்பனை செய்யலாமா? என்ற யோசனையையும் முன்னெடுத்துள்ளது.. ஜவ்வரிசியை ரேஷனில் கொண்டு வந்து விற்க என்ன காரணம்? இதுகுறித்து தமிழக அரசு எடுக்க போகும் முடிவு என்ன?

தமிழகத்தை பொறுத்தவரை, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

Ration shops Ration Card Holders Javvarisi

ரேஷனில் ஜவ்வரிசி

இந்நிலையில் ரேஷன் கடைகளின் மூலம் ஜவ்வரிசியையும் விற்பனை செய்ய வேண்டும் என்று பல வருடங்களாகவே விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்..

இதற்கு காரணம், தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 85,000 ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது. இந்தியாவில், மரவள்ளிக்கிழங்கில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 90 சதவீத ஜவ்வரிசி தமிழகத்தில் உள்ள ஜவ்வரிசி தொழிற்சாலைகளில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகம் முன்னிலை

மரவள்ளிக்கிழங்கு பயிரிடுதல் மற்றும் உற்பத்தி செய்யும் அளவில் கேரளா முன்னிலையில் இருந்தாலும், மரவள்ளிக்கிழங்கிலிருந்ழத ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தயாரிப்பில் இந்தியாவின் தேவையில் 80 சதவீதத்தை தமிழ்நாடுதான் நிறைவு செய்து முதலிடத்தையும் பெற்றுள்ளது..

கடந்த 2019ம் ஆண்டிலேயே, ஜவ்வரிசியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய விவசாயிகள், ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.. அதேபோல, சேலம் ஸ்டார்ச் மற்றும் சேகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழிற் கூட்டுறவு சங்கமும் (சேகோ சர்வ்) கோரிக்கை வைத்திருந்தது..

விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டும், இன்னும் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி விற்பனை செய்யப்படவில்லை. தற்போது மீண்டும் இதே கோரிக்கையை விவசாயிகள் வற்புறுத்தி உள்ளனர்..

மரவள்ளிக்கிழங்கு நஷ்டம்

நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு அதிகளவில் பயிரிடப்பட்டாலும், ஜவ்வரிசியின் விலை குறைவதால், இதன் மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கின் விலையும் குறைந்து விடுகிறது. இதனால் மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலையின்றி விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.. அதனால்தான், ரேஷன் கடைகளின் மூலம் ஜவ்வரிசியை வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சேலம் சேகோ சர்வ் செயலாட்சியரான கீர்த்தி பிரியதர்ஷினி, தொழில் துறை வணிக இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்..

ஆவின் பாலகங்கள்

அந்த கடிதத்தில், "பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியால் செய்யப்பட்ட உணவுகளைக் கொடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதோடு ரேஷன் கடைகள் மற்றும் ஆவின் பாலகங்களில் ஜவ்வரிசியை விற்கவும் விரைவில் அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்படும். இதுதவிர ஆவின் பாலகங்கள் வாயிலாகவும் ஜவ்வரிசியை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று எழுதியிருந்தார்.

விரைவில் ஒப்புதல்?

இதுகுறித்து, ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவரான சங்கரய்யா செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "சேலம் மாவட்டத்தில் கடந்த வருடம் புத்தகத் திருவிழா நடந்தபோது, ஜவ்வரிசியால் செய்யப்பட்ட 60க்கும் மேற்பட்ட உணவுகள் வழங்கப்பட்டன.

இந்த உணவுகள் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி விற்பனையைத் தொடங்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் ரேஷன் பொருட்களில் ஜவ்வரிசியும் இணையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

பலன்கள் என்னென்ன?

ரேஷன் கடையில் ஜவ்வரிசியை தமிழக அரசு வழங்கினால், விவசாயிகளுக்கும் லாபம் கிடைப்பதுடன், தமிழக அரசுக்கும் லாபம் கிடைக்கும்... ஜவ்வரிசி விற்பனையும் அதிகரித்து, கூடுதல் விலையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அத்துடன், மரவள்ளிக் கிழங்கு விவசாயத்தின் பரப்பளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதால், விரைவில் அரசு தரப்பிலிருந்து குட்நியூஸ் வெளியாகும் என்றே தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+