மீண்டும் கோவையை குறிவைக்கும் கமல்.? வந்து விழுந்த கேள்வி.. ஒரே வரியில் நறுக் பதில்.. என்ன சொன்னார்
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான கமல் தனது மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் கோவையில் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன்.. திரைத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்த இவர், கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

கட்சியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே நடைபெற்ற 2019 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களமிறங்கியது. எந்தவொரு இடத்திலும் வெல்லவில்லை என்றாலும் 3.6% வாக்குகளைப் பெற்றது. நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யத்திற்குக் கணிசமான வாக்குகள் வந்தது.
மக்கள் நீதி மய்யம்: அதைத் தொடர்ந்து நடந்த 2021 சட்டசபைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களமிறங்கியது. தனித்துப் போட்டியிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்டார் கமல். இதில் எந்தவொரு தொகுதியிலும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதேநேரம் 180 தொகுதிகளில் போட்டியிட்டு 2.62% வாக்குகளைப் பெற்றிருந்தார்கள்.
இந்தச் சட்டசபைத் தேர்தலில் நடிகர் கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கினார். அங்கே பாஜகவின் வானதி சீனிவாசனுக்கும் இவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையில் இருவரும் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர். கடைசியில் வெறும் 1700 வாக்குகள் வித்தியாசத்தில் கோவை தெற்கு தொகுதியில் கமல் தோல்வியடைந்தார். அதன்பிறகு நடிப்பில் படு பிஸியான கமல் "விக்ரம்" என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தார். இப்போதும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

கமல்: இந்தச் சூழலில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கான வேலையைத் தொடங்கியுள்ளது. அதன்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் ஆலோசனை நடத்தினார். கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கோவை, சேலம் மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 500 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல், "இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். அதை இப்போது சொல்ல முடியாது. இறையாண்மைக்கு ஆபத்து என யார் அழைத்தாலும் செல்வேன். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு ராகுல் காந்தி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்" என்றார்.
மீண்டும் போட்டி? சட்டசபையில் விட்ட இடத்தை பிடிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, "நல்ல எண்ணம் தானே" என்று பதிலளித்தார்.. வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் மக்களவை தேர்தலில் நல்ல முடிவு ஏற்பட இப்போது முதலே வேலை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்,
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications