காங்கிரஸ் மீது கோபம்.. “மதிக்கவே இல்ல”.. கமல் பிரச்சாரம் செய்யும் தொகுதிகள் லிஸ்ட்டை பாருங்க! ஆஹா!
சென்னை: காங்கிரஸ் கட்சியினர் மீது கமல்ஹாசன் கடுப்பில் இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில், கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யும் இடங்களின் பட்டியல் வெளியாகி, கதர்கள் மீது கமல் கொண்டுள்ள கோபத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்துக் களம் கண்ட கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமக, ஐஜேகே உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதையடுத்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைவது தொடர்பான திரைமறைவு பேச்சுக்கள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

திமுக, காங்கிரஸ் உடன் கமல் நெருக்கம்: திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கமல்ஹாசன் நெருக்கமாக பயணித்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்திருந்தார் கமல்ஹாசன்.
அதோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்றிருந்தார். மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியேற்பு விழாவின்போதும் அழைக்கப்பட்டிருந்தார் கமல்ஹாசன். இதனால், காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா’ கூட்டணியில் கமல்ஹாசன் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யத்திற்கு சீட்: கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் ஆதரவு தெரிவிக்கும் என்றும் அவர்களுக்கு 4 சீட்கள் வரை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் பேச்சுவார்த்தைக்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது மய்யத் தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 சீட்கள் வழங்கப்பட்டு ஒப்பந்தம் போடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. திமுக நேரடியாக சீட் ஒதுக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டது.
மநீம ஷாக்: கோவை, தென் சென்னை தொகுதிகள் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், கடைசியில், ஒரு லோக்சபா சீட் கூட மநீம கட்சிக்கு கொடுக்கப்படவில்லை. ஒரே ஒரு ராஜ்யசபா சீட் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் ஷாக் ஆகினர்.
“இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. நாங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம். நான் எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்திருக்கிறேன். மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஏமாற்றிய காங்கிரஸ்: கமல் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பலர் அதிருப்தி தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டுள்ள 9 இடங்களில் ஒன்று எங்களுக்கு வந்திருக்க வேண்டும். இது அவர்களாகவே எங்களுக்கு குறைந்தபட்சம் செய்திருக்க வேண்டும் என மநீம நிர்வாகி வினோதினி வைத்தியநாதன் சமூக வலைதளத்தில் பெளிப்படையாகவே எழுதி இருந்தார்.

கமல்ஹாசன் தனது 'தக் லைஃப்’ படத்திற்காக வெளிநாட்டில் நடைபெற இருந்த ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு இந்த தேர்தலுக்காக கடந்த 3 வாரங்களாக சென்னையில் இருக்கிறார். ஆனால், இதுவரை அரசியல் சம்பந்தமாக முக்கிய நிகழ்ச்சி எதிலும் பங்கேற்கவில்லை. அண்மையில் மும்பையில் ராகுல் காந்தி பங்கேற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் கமல்ஹாசன் அழைக்கப்படவில்லை.
கமல் பிரச்சார பிளான்: காங்கிரஸ் கட்சி, கமல்ஹாசனை கண்டுகொள்ளாமல் இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தாலும், மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் கமல்ஹாசனுக்காக அமைதியாக இருந்து வருன்றனர். இந்நிலையில் தான் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் இடங்களின் பட்டியலை அறிவித்துள்ளார் கமல்ஹாசன்.
திமுக கூட்டணிக்கு ஆதரவாக வரும் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் கமல்ஹாசன், சேலம், திருச்சி, சிதம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யும் தொகுதிகளின் பட்டியலை பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது.
மார்ச் 29 - ஈரோடு - திமுக
மார்ச் 30 - சேலம் - திமுக
ஏப்ரல் 2 - திருச்சி - மதிமுக
ஏப்ரல் 3 - சிதம்பரம் - விசிக
ஏப்ரல் 6 - ஸ்ரீபெரும்புதூர், சென்னை - திமுக
ஏப்ரல் 7 - சென்னை - திமுக
ஏப்ரல் 10 - மதுரை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
ஏப்ரல் 11 - தூத்துக்குடி - திமுக
ஏப்ரல் 14- திருப்பூர் - இந்திய கம்யூனிஸ்ட்
ஏப்ரல் 15 - கோவை - திமுக
ஏப்ரல் 16 - பொள்ளாச்சி - திமுக
“எனக்கு சீட் கொடுத்திருவாங்களோ என பயந்தவர்களுக்காக பிரச்சாரம் செய்யப்போறேன்’’ மேடையிலேயே சொன்ன கமல்!
காங்கிரஸ் மீது கமல் கட்சி கோபம்: கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் செல்லும் இடங்கள் ஒன்றில் கூட காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு சீட் ஒதுக்கவில்லை என்பதோடு, ராகுல் காந்தி கூட்டத்திற்கு கூட அழைக்காமல் அவமதித்து விட்டதாக மநீம தரப்பு கருதுவதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே, காங்கிரஸ் கட்சி போட்டியிடும் இடங்களுக்கு கமல் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு சீட் ஒதுக்காததில் கட்சியினர் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியாவது தங்களுக்கு சீட் கொடுத்திருக்க வேண்டும் என கமலிடமே சில நிர்வாகிகள் புலம்பியுள்ளனர். காங்கிரஸ் மீது மநீம கட்சியினர் இடையே கோபம் உள்ள நிலையில் தன் கமல்ஹாசன், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்குச் செல்லாமல் தவிர்ப்பதாக கூறப்படுகிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications