“எனக்கு சீட் கொடுத்திருவாங்களோ என பயந்தவர்களுக்காக பிரச்சாரம் செய்யப்போறேன்’’ மேடையிலேயே சொன்ன கமல்!
சென்னை: “எந்தெந்த ஏரியா எனக்கு கொடுக்கப்படுமோ என்று யாரெல்லாம் பயந்து கொண்டிருந்தார்களோ அவர்களுக்காக எல்லாம் நான் பிரச்சாரத்துக்குச் செல்லப்போகிறேன்.” என மநீம தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். தேர்தல் களம் உக்கிரமடைந்துள்ளது. இதற்கிடையே, திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா சீட் மட்டும் ஒதுக்கப்பட்டது. கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரச்சாரத்தை வரும் 29ஆம் தேதி ஈரோட்டில் தொடங்குகிறார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் பேச்சு: மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் சென்னை தி.நகரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன், “சந்தர்ப்பவாதம் என்பது ஒரு வாதமே இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. சந்தர்ப்பம் என ஒன்று இருக்கலாம். வாதம் என்பது தனியாக இருக்க வேண்டும். நமது வாதத்தை சந்தர்ப்பத்துக்கு ஏற்றது போல் எல்லாம் மாற்ற முடியாது.
அப்படி என்றால், ரிமோட்டை எடுத்து டிவியில் அடித்தீர்களே? நீங்கள்தானே இப்போது அங்கு செல்கிறீர்கள் என்று கூறுகின்றனர். ரிமோட் இன்னும் என் கையில்தான் உள்ளது. டிவியும் இன்னும் அங்கேதான் இருக்கிறது. ஏனெனில், நம்ம வீட்டு டிவி, நம்ம வீட்டு ரிமோட். ஆனால், அந்த டி.விக்கான கரண்டையும், ரிமோட்டுக்கான பேட்டரியையும் உருவப்போகும் ஒரு சக்தி உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே, ரிமோட்டை இனிமேல் நான் எறிந்தால் என்ன? வைத்திருந்தால் என்ன? அதுபோன்ற செய்கைகளுக்கு இனிமேல் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
தியாகம் அல்ல வியூகம்.. 30 தொகுதிகளில் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம்.. அறிவித்தார் மநீம கமல்ஹாசன்!
மோடி மரியாதைக்குரிய பிரதமர்: நான் ஒரு தனிப்பட்ட மனிதரை என்றுமே தாக்கியது இல்லை. மோடி என்பவர் மரியாதைக்குரிய பாரத பிரதமர். அவர் இன்று இந்த அரங்கத்துக்குள் வந்தால், அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதைகளை எல்லாம் நான் கொடுப்பேன். அதுக்காக என்ன இவர், இப்படி அவருக்கு எதிராக பேசிவிட்டு அவர் வரும்போது மரியாதை செலுத்துகிறாரா? என்றால், மக்களுக்காக அவருக்கு தலைவணங்குவேனே தவற, எனது தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன்.
சாதியம் பேசாதே என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்தான் இன்று வெள்ளை தாடியுடன் இங்கே அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு மறுபடியும் சாதியை கற்றுக்கொடுக்கும் ஒரு மாபெரும் திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சியோ, ஒரு திட்டமோ எத்தனை பெரியதாக இருந்தாலும், அதை தகர்க்க வேண்டியது என் கடமை. அரசியல் களத்தில், எதிரி யார் என்பதை முடிவு செய்த பிறகுதான் வெற்றி நிச்சயம். நீங்கள் அப்படி எதுவும் இல்லாமல் மய்யம் என்று கூறுகிறீர்களே, இது எப்படி சரியாக வரும் என்று என்னிடம் கேட்கின்றனர்.
டிவியை உடைச்சேனா? ரிமோட் இன்னும் என் கையில் தான் இருக்கு.. விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் 'நறுக்’ பதில்!
எனது அரசியல் எதிரி சாதியம்: நான் எனது எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். என் நினைவு தெரிந்ததில் இருந்து நினைவு போகும் வரை எனது அரசியல் எதிரி சாதியம்தான். இந்த தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது. தமிழகத்துக்கான களம் 2026-ல் அமையப் போகிறது. நாம் செய்துள்ளதை தியாகம் என்று சொல்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை தியாகம் என்பதைவிட வியூகம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

எனக்கு பயந்தவர்களுக்காக பிரச்சாரம் செய்யப்போகிறேன்: காரணம், எந்தெந்த ஏரியா எனக்கு கொடுக்கப்படுமோ என்று பயந்து கொண்டிருந்தார்களோ அவர்களுக்காக எல்லாம் நான் பிரச்சாரத்துக்குச் செல்லப்போகிறேன். அது கண்டிப்பாக எனக்குத்தான் வரும் என அவர்களுக்குத் தெரிந்த பிறகும் என்ன ஆகப்போகிறதோ என கையை உதறிக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் நான் பிரச்சாரத்திற்கு போகப்போகிறேன். எப்படிப்பட்ட மரியாதை கிடைக்கப்போகிறது என்பதை பாருங்கள். அது எனக்குக் கிடைக்கும் மரியாதை அல்ல, நமக்குக் கிடைக்கும் மரியாதை” என கமல்ஹாசன் பேசினார்.
திமுக கூட்டணிக்கு ஆதரவாக வரும் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரத்தை தொடங்கும் கமல்ஹாசன், சேலம், திருச்சி, சிதம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். கோவை, தென் சென்னை தொகுதிகள் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்படலாம் என முன்னர் பேச்சு நிலவியது. ஆனால், கமல் கட்சிக்கு ராஜ்யசபா சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன்.
-
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications