கமல்.. மயிலாப்பூரில் போட்டியிட்டால்.. ராஜசேகர் சொன்னது உண்மைன்னு ஆயிடாதா
மயிலாப்பூரில் கமல் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தொகுதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.. அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், குறிப்பிட்ட அந்த தொகுதி குறித்து இப்போதே பரபரப்பும், சலலசலப்பும் கிளம்ப தொடங்கிவிட்டது.
ரொம்ப வருஷமாக எதிர்பார்த்திருந்த ரஜினி இன்னமும் வராத நிலையில், திடுதிப்பென்று கட்சியை துவங்கிவிட்டார் கமல்.. அத்துடன் ஒரு தேர்தலையும் சந்தித்துவிட்டு, அடுத்த தேர்தலுக்கு ரெடியாகி வருகிறார்.
மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இந்த முறையாவது யாருடனாவது கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. முக்கியமாக திமுகவுடன் இணையலாம் என்றும் கருதப்பட்டது. ஆனால், மக்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக கமல் அறிவித்துவிட்டார்.

கமல்
சில மாதங்களுக்கு முன்பு, ரஜினி நேரடியாகவே கமல் அழைத்திருந்தார்.. ஆனால், இப்போது ரஜினியும் வர தயங்கியுள்ள நிலையில், தனித்து களம் என்று தெரிவித்துள்ளார்.. அதேசமயம், மயிலாப்பூர் தொகுதியில் கமல் போட்டியிட போவதாகவும் கூறப்படுகிறது.. இதற்கு காரணம் ஒரு சர்வேயில் அந்த கட்சிக்கு மயிலாப்பூரில் செல்வாக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஹாட் டாபிக்
இதுதான் ஹாட் டாபிக் ஆகி வருகிறது.. காரணம், இதே மயிலாப்பூரை வைத்துதான் கடந்த முயும் ஒரு விவகாரம் கிளம்பியது.. கடந்த முறை தேர்தலில், முதல்கட்ட வேட்பாளர் லிஸ்ட்டை மய்யம் அறிவித்த நிலையில், சில பிரச்சனைகள், சர்ச்சைகள் வெளிவந்தது.. அப்போது கடந்த வருடம் 22ம் தேதி, முரசொலியில் ஒரு கட்டுரை வெளியானது.. அதில், "டேக் ஆப் ஆவதற்கு முன்பே டயர்கள் எல்லாம் கழன்றோட தொடங்கிவிட்டன.... இருக்கும் சிலரை தக்க வைத்து கொள்ள அக்கட்சியின் தலைவர் அறைகுறை அறிவிப்பு ஒன்றை அவசரமாக வெளியிட்டுள்ளார்.

ராஜசேகர்
அந்த கட்சியிலிருந்து விலகிய வழக்கறிஞர் ராஜசேகர், அது மக்கள் நீதி மய்யமல்ல, மயிலாப்பூர் நீதி மய்யம் ஆகிவிட்டது" என்று கூறினார். மயிலாப்பூர் நீதி மய்யத்தின் ஆலோசகர்களின் பட்டியலிட்டாரே பார்க்கவில்லையா? மயிலாப்பூர் நீதிமய்யம் பாஜகவுக்கு எதிராக செயல்படுமா? அல்லது பி டீமாக விளங்குமா என முடிவெடுத்து கொள்ளுங்கள்" என விமர்சித்தது.

பரபரப்பு
எதற்காக இந்த பிரச்சனை அப்போது வெடித்தது என்று விலாவரியாக தெரியாவிட்டாலும், மீண்டும் மயிலாப்பூர் என்பதுதான் பரபரப்பாக பேசப்படுகிறது.. இது உண்மையா என்று உறுதியாக தெரியாத பட்சத்தில், கமல் ஏன் மறுபடியும் குறிப்பிட்ட அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்னதாவது:

சமுதாய வாக்குகள்
"இதுல 2 விஷயம் இருக்கலாம். ஒன்னு, கமலுக்கான சமுதாய வாக்குகள் அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. இன்னொன்று, கடந்த தேர்தலில் கிராமப்புறங்களைவிட, நகர்ப்புறங்களில்தான் வாக்குபதிவு அதிகமாக விழுந்தது.. அதனால், நகர்ப்புற தொகுதியில்தான் இந்த முறை கமலை களமிறக்கவேண்டும் என்று அக்கட்சி சார்பில் முடிவெடுத்திருக்கலாம்.

கணக்கு
சென்னையில் களமிறங்கினால் கமல், எளிதாக மக்களை சென்றடையலாம்.. இதையெல்லாம் கணக்கு செய்துதான் மயிலாப்பூர் என்ற பேச்சு அடிபடுகிறது.. மற்றபடி போட்டியிடும் தொகுதி எது என்று கமல்தான் அறிவிக்க வேண்டும்" என்று முடித்து கொண்டனர்.

பரமக்குடி
கமலுக்கு நெருக்கமான ஊர் பரமக்குடி.. அதுவும் இல்லாமல் தனது கட்சி பயணத்தை ராமநாதபுரத்தில்தான் இருந்துதான் தொடங்கினார்.. எனவே மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் இந்த தொகுதியில் கடந்த முறை போட்டியிடவே அவர் விருப்பம் காட்டி வருவதாக கூறப்பட்டது.. சென்ற முறை போலவே இந்த முறையும் அப்படித்தான் கருதப்பட்டு வருகிறது.. ஒருவேளை கமல் ராமநாதபுரத்தை தேர்ந்தெடுத்தால், நிச்சயம் வெறி தான் என்பது அரசியல் நோக்கர்கள் சொல்லும் பொதுவான கருத்து.

பாஜக
ஆனால், இதுவரை மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது.. காங்கிரஸ் கட்சி முறை வெற்றி பெற்றுவிட்டது.. இதுவரை பாஜக ஒரு முறைதான் வென்றுள்ளது.. சமுதாய வாக்குகள் கமலுக்கு இருக்கலாம் என்று கருதப்பட்டாலும் வாக்குகளை அள்ளுவாரா? மக்கள் நீதி மய்யம் மயிலாப்பூர் நீதி மய்யமாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications