காஞ்சிபுரம் அசையுது.. அரண்ட எடப்பாடி பழனிசாமி.. சட்டென மெசேஜ் பாஸ் பண்ண ஓபிஎஸ்.. "கோட்டையில் ஓட்டை?"
சென்னை: மதுரையில் வெற்றிகரமாக எடப்பாடி பழனிசாமி மாநாட்டை முடித்துள்ள நிலையில், ஓபிஎஸ் பயங்கர குஷியில் இருக்கிறாராம்.. என்ன காரணம்?
மதுரையில் மாநாடு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுமே, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் மட்டுமல்லாமல், எதிர்ப்புகளும் சேர்ந்தே கிளம்பின.. இந்த மாநாட்டை தடுத்து நிறுத்த பல வழிகளில் முட்டுக்கட்டைகள் கிளம்பின என்றாலும், அனைத்தையும் முறியடித்து, மாநாட்டை நடத்தி விட்டார் எடப்பாடி பழனிசாமி,

புளிச்சோறு: உண்மையை சொல்லப்போனால், மாநாடு நடத்தப்பட்டதற்கு முன்பைவிட, மாநாட்டுக்கு பிறகுதான் நிறைய சர்ச்சைகள் கிளம்பின.. டன் கணக்கில் அண்டா, அண்டாவாக புளிசோறு சாப்பாடு கொட்டப்பட்டுள்ளது. அதேபோல, மாநாட்டிற்கு சென்ற வாகனங்கள் சுங்க கட்டணத்தை செலுத்தவில்லையாம்.. இதனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, 20 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.
இந்த ஒருநாள் மாநாடு காரணமாக, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், தினசரி வருவாயில், 5 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரம் கூறியுள்ள நிலையில், அதிமுக மாநாடு மிகப்பெரிய விமர்சனத்துக்கு உள்ளாது.. இந்த விமர்சனங்களுக்கு அதிமுக தலைவர்கள் மாறி மாறி பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் பார்த்துதான், ஓபிஎஸ் தரப்பு குஷியாகி உள்ளதாம்.
ஆபரேஷன் சக்ஸஸ்: காரணம், மாநாட்டுக்கு முந்தின நாள் சாயங்காலம் கூட, டிஜிபி ஆபிசுக்கு புகாருடன் ஓடினார் மூத்த தலைவர் புகழேந்தி.. ஆனால், "ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டை" என்பதுபோல, மாநாடு மீதான விமர்சனங்களை ஓபிஎஸ், தினகரன் தரப்பு புன்முறுவலுடன் ரசித்து கொண்டிருக்கிறது. இந்த உற்சாகத்துடன் அடுத்த அதிரடியையும் ஓபிஎஸ் கையில் எடுத்துவிட்டார்..
சில மாதங்களுக்கு முன்பு, திருச்சியில் மாநாடு நடத்தியிருந்தார் ஓபிஎஸ்.. நீதிமன்ற உத்தரவுகளின் தொடர் சறுக்கலில் விழுந்து கிடந்த ஓபிஎஸ்ஸுக்கு, இப்படி ஒரு மாநாட்டை நடத்தும் எண்ணமே அந்த சமயத்தில் இல்லையாம்.. மூத்த தலைவர் பண்ருட்டியார்தான், இதற்கெல்லாம் ஆணிவேராக நின்று வழிநடத்தினாராம்.
பாஜக பக்கமே விழுந்துகிடப்பதால், நம் மீதான மதிப்பு குறைந்துவிடும், அதனால், நமக்கான பலத்தை நாமே உருவாக்க வேண்டும் என்று ஓபிஎஸ்ஸிடம் எடுத்து சொன்னாராம்..
பண்ருட்டி: அதுமட்டுமல்ல, இதற்கெல்லாம் ஒரே வழி, மக்களையும், தொண்டர்களையும், தேடி நாமே நேரடியாக செல்ல வேண்டும் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்தே, ஓபிஎஸ்ஸின் ஃபோகஸ், பாஜகவிலிருந்து விலகி, மாநாடு, பொதுக்கூட்டம், நாளேடு என ஒவ்வொரு அதிரடிக்கும் திரும்பியிருக்கிறது.
இந்த வெற்றியின் அடுத்தக்கட்டமாக, மேற்கு மண்டலத்தில் தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் நோக்கில் அடுத்த மாநாட்டை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பான ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது.. மேற்கு மண்டலத்தை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம், தென்மண்டலத்தில் ஓரளவு பலம் ஏற்கனவே உள்ள நிலையில், திருச்சி மாநாடும் அதை நிரூபித்துவிட்டது.. போதாக்குறைக்கு அமமுகவின் ஆதரவும் பலமாகவே உள்ளது..
காஞ்சிபுரம்: ஆனால், சென்னை, காஞ்சிபுரம் போன்ற பகுதிகள் எல்லாம், எடப்பாடியின் கோட்டையாக கருதப்படுகிறது. கொங்குவில் எடப்பாடிக்கு செல்வாக்கு உள்ளதைபோல சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும் ஓரளவு பலம் இருக்கவே செய்கிறது. அப்படிப்பட்ட மேற்கு மண்டலத்தில், தங்களுக்கும் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான், அடுத்த மாநாட்டை மேற்கு மண்டலம் பக்கம் திருப்பியுள்ளதாக தெரிகிறது.
அந்தவகையில், செப்டம்பர் 3ம் தேதி காஞ்சிபுரத்தில் தன்னுடைய பலத்தை காட்ட தயாராகி வருகிறார்.. முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த மண்ணில் மாநாடு நடத்துவது கூடுதல் ஆதரவை பெற்றுத்தரும் என்றும் நம்புகிறாராம்.
அதுமட்டுமல்ல, மாநாட்டை வெற்றிகரமாக நடத்த, சில "தாராளங்களுக்கும்" அனுமதி தந்துள்ளதாக தெரிகிறது. அந்தவகையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இப்போதே களப்பணியில் தீவிரமாகி கொண்டிருக்கிறார்களாம். இந்த மாநாட்டின் வெற்றியை வைத்தே, எம்பி தேர்தலுக்கான சீட் வரை கணக்கும் போடப்பட்டுள்ளதாம்.
சபாஷ் போட்டி: திருச்சியில் நடந்த மாநாட்டு வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது ஓபிஎஸ்ஸின் 2 மகன்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.. இவர்கள் 2 பேரின் அசாத்திய பிளான்களை பாஜக மேலிடமும் உற்று கவனித்து கொண்டுதான் இருந்தது. அந்தவகையில், காஞ்சிபுரம் மாநாட்டிலும், வாரிசுகளின் அடையாளம் பதியப்போகிறதா? என்று தெரியவில்லை. ஆனால், பண்ருட்டியார் துணையுடன், எடப்பாடிக்கு அடுத்த செக் வைத்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications