Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் கோயம்பேடு? கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டையே சுற்றி சுற்றி வரும் "முருகன்"..டக்னு பார்த்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தை அவசர அவசரமாக மூடியதற்கான காரணத்தை திமுக அரசு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று பாஜக கேள்விகளை முன்வைக்க துவங்கி உள்ளது. இதையடுத்து, ஒருபக்கம் பாஜக, மறுபக்கம் அதிமுக என இரு தரப்பில் எழுப்பப்படும் கேள்விகளால், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு விவகாரம் திமுக அரசுக்கு தலைவலியாக மாறி உள்ளது.

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு விவகாரம் சட்டசபையிலும் வெடித்துவிட்டது.. இந்த 2 நாட்களாகவே, தமிழக சட்டசபையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரங்கள் அலசப்பட்டன.

Will Koyambedu Bus Stand again functional and what are the Major request Tamil Nadu BJPs about Kilambakkam Bus Terminus

"அவசரப்பட்டு பஸ் ஸ்டாண்டை ஏன் திறந்தீங்க" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்ப துவங்கியிருக்கிறார்.. அத்துடன், மிக முக்கியமான குற்றச்சாட்டையும் திமுக மீது வைத்துள்ளார்.

ஏன் திறந்தீங்க: செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "எங்களுக்கு கிடைக்கப்பட்ட ஒரு செய்தி என்னவென்றால், மறைந்த முதல்வர் கலைஞர் பெயரை வைக்க வேண்டும் என்பதற்காக, அவசர அவசரமாக இந்த பஸ் ஸ்டாண்டை திறந்திருப்பதாக தெரிகிறது. ஏனென்றால், சில பேர் இதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றுவிடுவார்கள் என்பதால், இப்படி அவசரமாக திறப்பதாக எங்களுக்கு செய்தி கிடைக்கிறது.

ஆனால், உண்மையிலேயே அது அற்புதமான பேருந்து நிலையம்.. மக்களுக்கு உபயோகப்படும் வகையில், அவ்வளவு அழகாக வடிவமைத்து, பல அற்புதமான திட்டத்தை நாங்கள் தந்தோம். அதை செய்ய தவறிவிட்டாங்க இந்த அரசு.. அந்த பேருந்து நிலையம் திறந்து ஒரு மாசம் ஆகுது இல்ல? அதுக்குள்ளவாவது பிரச்சனைகளை சரி செய்திருக்கணுமா? வேணாமா? சாக்கு போக்கு சொல்லி தப்பிக்கதான் பார்க்கிறார்களே, தவிர சீர் செய்ய ஒன்றும் செய்யவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கம்: ஆனால், திமுகவின் ஒவ்வொரு செயலையும் பூதாகரமாக்கி கொண்டிருக்கிறது தமிழக பாஜக.. அதை மக்களிடம் கேள்வியாக கேட்டு கொண்டு சென்று வருகிறது. இப்படித்தான், தற்சமயம் கிளாம்பாக்கத்தை கையில் எடுத்துள்ளது..

கிளாம்பாக்கத்துக்கு ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ ரயில் திட்டம் வரும்வரை, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை வைத்து வருகிறது. அத்துடன், "கிளாம்பாக்கத்தில் பொதுமக்களை தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், பெருமளவில் போராட்டம் வெடிக்கும்" என்று அண்ணாமலையும் எச்சரிக்கை விடுத்துள்ளார்..

பேருந்து நிலையம்: இதற்கு நடுவில், மத்திய அமைச்சர் எல்.முருகன் விடாமல் இந்த பிரச்சனையை பேசி வருகிறார்.. கோயம்பேடு பேருந்து நிலையத்தை அவசர அவசரமாக மூடியதற்கான காரணத்தை திமுக அரசு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறார்.

நேற்றுகூட இதுகுறித்து ஒரு தனியார் சேனலுக்கு டெல்லியிலிருந்து எல்.முருகன் பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில், "ஒரு பேருந்து நிலையத்தையே இவங்களால செயல்படுத்த முடியவில்லையானால், இந்த நாட்டை ஆள்வதற்கும் திமுக எந்த தகுதியும் இல்லை.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, மிகச்சிறந்த பஸ் ஸ்டாண்டு. ஆசியாவிலேயே சிறந்த பெரிய பேருந்து நிலையத்தை ஏன் மூடணும்? கோயம்பேட்டை எதுக்காக கார்ப்பரேட்டுக்கு தர்றீங்க? எதற்காக இந்த அவசரத்தை காட்டறீங்க?

கிளாம்பாக்கம்: சென்னை சிட்டியில், மையமாக இருக்கிற கோயம்பேட்டை மூடிவிட்டு, கிளாம்பாக்கதை எதுக்காக திறக்கறீங்க?
அப்படியே திறக்கறீங்க சரி, கோயம்பேட்டை ஏன் மூடறீங்க? கிளாம்பாக்கத்தை திறந்தீங்களே, அதை முறையாக பராமரித்தும் முறையாக செயல்படவில்லை. அதனால், தோல்வியற்ற அரசாங்கமாக ஸ்டாலின் அரசு இருந்து கொண்டிருக்கிறது" என்றார் முருகன்.

வரப்போகும் தேர்தலில், கிளாம்பாக்கத்தை ஆளுக்கு ஒருபக்கம் கையில் எடுத்துள்ளதால், தமிழகத்தில் பரபரபபு கூடிவருகிறது.. திமுகவுடன் சேர்த்து பாஜகவையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பு அதிமுகவுக்கு எழுந்துள்ளது என்றாலும், கிளாம்பாக்கம் விவகாரத்தை அரசியலாக்குவதில் இரு தரப்புக்குமே போட்டி எழுந்துள்ளது..

ஒரே பதில்: "கிளாம்பாக்கத்தில்சிறு பிரச்சினைகள் இல்லை, எல்லாமே பெரிய பிரச்சினைகளே இருந்தன. அத்தனையும் தீர்த்து வைத்துவிட்டுத்தான் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். இன்னும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நேரடியாக வாருங்கள் சொல்லுங்கள் தீர்த்து வைக்க காத்திருக்கிறோம்" என்று எதிர்க்கட்சிகளின் அத்தனை கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+