உருவாகிறது புதிய மாவட்டம்? பட்ஜெட்டில் அறிவிப்பாரா பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.. அந்த நகரமா?
சுற்றுலா துறையை மையமாக வைத்து பல முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று புதிய மாவட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு தமது முதலாவது இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது.திமுக அரசு தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்
இந்த நிலையில் பட்ஜெட்டில் புதிய மாவட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக பட்ஜெட் சமயங்களில் இது போல் புதிய மாவட்ட அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். கடந்த ஆட்சியில் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல புதிய மாவட்டங்கள் உருவாகின. ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திலிருந்து நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நிலையில் அதே போல புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

மாற்றம்
அந்த வகையில் கும்பகோணம் மாவட்டம் இன்று உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டம், கும்பகோணம் மாநகராட்சி மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்து உள்ளன. இந்த கும்பகோணத்தை தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தனி மாவட்டம் வேண்டும், நாங்கள் மிகப்பெரியநகரம். மற்ற பல மாவட்டங்களை விட நல்ல வருவாய் ஈட்டுகிறோம்.

வருவாய்
மற்ற மாவட்டங்களை விட அதிக வருமானம் ஈட்டி வருகிறோம். அப்படி இருக்கும் போது எங்களுக்கு மட்டும் மாவட்ட அந்தஸ்து கொடுக்காமல் இருப்பது ஏன் என்று கும்பகோணம் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதோடு கும்பகோணம் மக்கள் பொதுவாக ஆட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூட தஞ்சாவூர் செல்ல வேண்டி உள்ளது. இதற்கு கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை ஆகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கும்பகோணத்தை உடனே மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று அது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பட்ஜெட்
இன்று பட்ஜெட்டில், சுற்றுலா துறையை மையமாக வைத்து பல முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக பிரபல சுற்றுலா தலங்களுக்கு புதிய முகம் கொடுப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம்.மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கூடுதல் ஐடி பார்க்குகளை உருவாக்குவது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. அரசு ஊழியர்களை கவரும் விதமாக, அவர்களுக்கு என்று சில முக்கிய அறிவிப்புகள் வரலாம். அரசு ஊழியர்கள் பலர் அப்செட்டில் உள்ள நிலையில் அவர்களை சமாதானம் செய்யும் விதமாக அறிவிப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் திட்டம் தொடர்பான அறிவிப்பு இன்று வர உள்ளது. இந்த திட்டம் இன்று தொடங்கப்பட வாய்ப்பு இல்லை. பெரும்பாலும் ஜூன் மாதமே தொடங்கப்படும். ஆனால் ஜூன் மாதம் எந்த தேதியில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications