என்னாது.. மறுபடியும் லாக்டவுனா.. சுதாரித்த சுகாதார துறை.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்..!
தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது
சென்னை: தமிழ்நாட்டில் மறுபடியும் லாக்டவுன் போட்டுவிடப்படுமோ என்ற கலக்கம் சூழ்ந்து வரும் நிலையில், அரசு தரப்பிலும் அப்படி ஒரு டாக் ஓடியிருக்கிறதாம்.. பிறகுதான் முதல்வர் அந்த முடிவை கைவிட்டதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
Recommended Video
கடந்த 4 மாத காலமாக, மத்திய, மாநில அரசுகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக தொற்று குறைந்து வருகிறது..
இப்போதைக்கு உலக அளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.. என்றாலும், 3வது அலை குறித்த தகவல்கள் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியா
நேற்றைய தினம், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,673 பேராக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3,15,71,295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நாடு முழுவதும் 3,07,36,241 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 549 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் மொத்தம் 4,23,244 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கவலை
அதிலும், தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.. ஒரே நாளில் 1,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது... அதிலும் 19 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.. இதில் சென்னைதான் பிரதானமாக உள்ளது.. இப்படி தொற்று பரவல் காரணமாக, ஆகஸ்டு 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது... ஆனால் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படவில்லை.

முதல்வர்
சென்னையில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் முதல்வரின் உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் ஆகஸ்டு 9-ம் தேதி வரை வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கேரளா
ஆனால், இப்படி ஒரு முடிவை அரசு அறிவிப்பதற்கு முன்பே தமிழகத்தில் லாக்டவுன் போடலாமா என்ற ஆலோசனையும் அரசு தரப்பில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கு காரணம், பக்கத்து மாநிலம் கேரளாவில் தொற்று அளவுக்கு அதிகமாக உள்ளது.. அடுத்த 3 வாரத்துக்கு அந்த மாநிலத்தில் இந்த பாதிப்பு கூடும் என்று மத்திய சுகாதாரத்துறையே எச்சரித்துள்ளது.. 3வது அலை பரவலின் தாக்கமும் தென்பட்டுள்ளது..

பாசிட்டிவ் கேஸ்கள்
பக்கத்து மாநிலத்தில் இப்படி ஒரு பிரச்சனை என்றால், தமிழ்நாட்டிற்கும் பரவ அதிக காலம் பிடிக்காது.. அந்த மாநிலத்தில் பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமாகிக்கொண்டே போவதால், அந்த அளவு பாதிப்பு இங்கே வருவதற்குள் லாக்டவுனை போட்டுவிடலாம் என்று அதிகாரி ஒருவர், சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஆலோசனை சொன்னாராம்..

முதல்வர்
இந்த ஆலோசனையை அமைச்சரும் முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.. இது சம்பந்தமாக மற்ற துறை அதிகாரிகளிடமும் ஆஃப் தி ரெக்கார்ட் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது... அப்போதுதான், இப்போதைக்கு லாக்டவுன் வேண்டாம் என்றும், ஒரு மாதம் கழித்து இதை பற்றி முடிவெடுக்கலாம் என்றும் முதல்வர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது..

வருமானம்
ஆனால் தமிழக மக்களுக்கும் இதே கவலைதான் சூழ்ந்துள்ளது.. இப்போதுதான் ஒருவழியாக மீண்டு, வருமானத்துக்கு வழி தேட முற்படும் நிலையில், மறுபடியும் லாக்டவுன் என்றால், இயல்பு வாழ்க்கை முடங்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.. அரசும் பொருளாதார ரீதியாக பலவீனமாகவே உள்ள நிலையில், லாக்டவுன் குறித்த கவலையும் தொற்றி கொண்டுள்ளது..!
-
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்












Click it and Unblock the Notifications