மகளிர் உரிமை தொகை! திமுகவுக்கு தோல்வியா? வாயை விட்ட கதர் தலைகள்! என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்துதான் தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி இருக்கையில், காங்கிரஸ் தலைவர்கள் இது குறித்து பெரியதாக கண்டுக்கொண்டதை போல தெரியவில்லை. மட்டுமல்லாது அதை விமர்சிக்கும் வகையிலும் பேசி வருகின்றனர்.
தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைப்பதாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் தேர்தலுக்கு முன் இலவசங்களை கொடுப்பதை தடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார்.

மகளிர் உரிமைத் தொகை
இந்த வழக்கு மார்ச் மாதம் விசாரணைக்கு வர இருந்தது. இதன் அடிப்படையில்தான், வழக்கின் மூலம் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த பாஜக முயற்சிப்பதாக திமுக குற்றம்சாட்டி பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான உரிமைத்தொகை ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 தொகையை 1.3 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது.
இதை சற்றும் எதிர்பார்க்காத எதிர்க்கட்சிகள், வாயடைத்து போய் உள்ளன. திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் முதலமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்திருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் தலைவர்களில் சிலர் இதனை பாராட்டவில்லை.
குறுக்கே வந்த மாணிக்கம் தாகூர்
குறிப்பாக மாணிக்கம் தாகூர், "பெண்கள் அதிகாரமடைதல் ஒரு கோஷமல்ல அது ஒரு பொறுப்பு. தமிழ்நாட்டில் அரசு செயல்படுத்தும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். இன்று மூன்று மாதத் தொகையை முன்கூட்டியே வழங்கி, கூடுதல் ரூபாய் 2,000 உதவி வழங்கியிருப்பது அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கினை உணர்த்துகிறது
காங்கிரஸ் ஆட்சி
அதேபோல், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தும் கிருஹ லக்ஷ்மி திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு மாதம் ₹2,000 வழங்கப்பட்டு, அவர்களின் பொருளாதார சுயநிலையை வலுப்படுத்துகிறது. இரு மாநிலங்களும் பெண்களை முன்னுரிமையாகக் கொண்டு குடும்பங்களுக்கு, பொருளாதாரம் வலுப்படும் என்பதை நிரூபித்துள்ளன.
ராகுல் காந்தியின் ஐடியா
ராகுல் காந்தி கடந்த 2019ல் முன்வைத்த "ந்யாய்" (Nyay மாதம் ரூ 6,000)என்ற கருத்து பெண்களுக்கு நேரடி வருமான ஆதரவு வழங்கும் பார்வை இந்தியா செல்ல வேண்டிய திசையை காட்டுகிறது: மரியாதை, பாதுகாப்பு, பொருளாதார நீதி. பெண்களை அதிகாரமளிப்பது இந்தியாவை அதிகாரமளிப்பதாகும். இந்த முயற்சிகள் தொடர்ந்து வலுப்பெறட்டும்" என்று கூறியிருந்தார். அதாவது மகளிர் உரிமைத் தொகை ஐடியாவை கொடுத்ததே நாங்கள்தான் என்கிற ரேஞ்சில் அவர் பதிவு இருந்தது.
இதற்கு உடன் பிறப்புக்கள் வரிசைக்கட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களே எங்களை பார்த்துதான் காப்பியடித்தது என்று பதிலடி கொடுத்து வருகின்றன.
பிரவீன் சக்கரவர்த்தி
இப்படி இருக்கையில் காங்கிரஸ் கட்சியின் தரவு தொடர்பு துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியும் இந்த திட்டம் குறித்து நெகட்டிவ் டோனில் ட்வீட் செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
"மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன, 5 தோல்வியடைந்தன" என பதிவிட்டிருக்கிறார். இது காங்கிரஸ் மீதான உடன் பிறப்புக்களின் விமர்சனங்களை கூர்மைப்படுத்தியிருக்கிறது.
போதாத குறைக்கு இன்று மதுரையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தலைமையில் நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்று பேசியிருப்பதும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல அமைந்திருக்கிறது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications