Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கதம் கதம்.. அடித்து ஆடும் மம்தா.. மிரள விழிக்கும் கதர் கட்சி.. 3வது அணியா.. ஜெர்க் ஆகும் பாஜக..!

மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக மாற வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து வரும் சூழலில், அவை 2 அணியாக பிரிந்துவிடுமா? காங்கிரஸ் என்ன செய்ய போகிறது? மம்தா பானர்ஜி தலைமையில் மூன்றாவது அணி உருவாகுமா? என்பன போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

வரப்போகும் எம்பி தேர்தலை எதிர்கொள்ள, இப்போதே தேசிய மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்த வகையில் தேசிய அரசியல் சூடு பிடித்து வருகிறது..

ஒருபக்கம் காங்கிரஸ், மறுபக்கம் பாஜக உள்ள நிலையில், 3-ம் அணி உருவாகுமோ என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே எழுந்து வருகிறது.. இப்படி பேச்சை அன்று ஆரம்பித்து வைத்ததே தெலுங்கானாவின் சந்திர சேகர ராவ் தான்.

மாற்றம்

மாற்றம்

"தேசிய அரசியலில் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது... இந்த 70 ஆண்டுகளில் 64 வருடங்கள் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியில் இருந்துள்ளது.. 70 வருடம் ஆகியும் மக்கள் பிரச்சனை தீரவில்லை.. அதனால், பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி செய்ய வேண்டும்.. அது மூன்றாவது முன்னணியாக இருக்கலாம்" என்ற கருத்தை முன்வைத்திருந்தார். இதை முதல் நபராக வரவேற்றவர் மம்தா பானர்ஜிதான்.. அத்துடன், அதற்கான முன்னெடுப்பிலும் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.. ஒருகட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கூட போன் போட்டு இதை பற்றி ஆலோசித்ததாகவும் செய்திகள் வந்தன.

மம்தா

மம்தா

எனினும் அன்று காங்கிரஸ் கட்சியை மம்தா அளவுக்கு அதிகமாகவே நம்பினார்.. பாஜகவுக்கு எதிரான வலுவான அணியை காங்கிரஸ் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடும் என்றும் எதிர்பார்த்தார்.. ஆனால், பாஜகவுக்கு எதிராக அமைக்கப்படும் கூட்டணிக்கு தாங்கள்தான் தலைமை என்று காங்கிரஸ் சொல்லி வருகிறது. காங்கிரசுக்கு தலைமை இல்லாத சூழலில், அக்கட்சி மேலும் மேலும் வலுவிழந்து காணப்படும் நிலையில், கூட்டணிக்கு தலைமை என்பதும், ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்றும் இப்போதே பேச்சுக்களும் எழுந்து வருகின்றன.

 3வது அணியா?

3வது அணியா?

ஆனால், காங்கிரஸ் தலைமையையும் சில கட்சி‌கள் ஏற்க‌ மறுக்கின்றன.. எனவேதான், 3வது அணிக்கு மம்தா பானர்ஜியை தலைமையேற்க முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போதைக்கு இல்லை என்று மம்தா திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியை தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கிவைத்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இணையாக புதிய அணியை உருவாக்கி அதன்மூலம், பாஜகவையும், பாசிஸ சக்திகளையும் எதிர்க்கவே மம்தா முயல்வதாக ஒரு பேச்சு உள்ளது.

 சரத்பவார்

சரத்பவார்

சுருக்கமாக சொல்ல போனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை யாரெல்லாம் விரும்பவில்லையோ அவர்களை குறி வைத்து மம்தாவின் அரசியல் நகர்ந்து கொண்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ், திமுக, பிஜு ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி போன்றவை உள்ளன.. இவைகளில் எத்தனை கட்சிகள் காங்கிரசுக்கும், மம்தாவுக்கும் தங்கள் ஆதரவை தெரிவிக்க போகின்றன என்பதும் எதிர்பார்ப்புதான்... தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் காங்கிரஸை சரத்பவாரும் காங்கிரசுக்கு எதிரான தன்னுடைய கருத்தை வெளிப்படையாகவே சொல்லி உள்ளார்.

 முக்கிய பொறுப்பு

முக்கிய பொறுப்பு

பாஜகவுக்கு எதிராக ஓரணியாக திரள வேண்டும் என்பதைதான் இடதுசாரி கட்சிகளும் விரும்புகின்றன.. எனினும், மம்தா பானர்ஜிக்கு எதிர்க்கட்சிகளின் தேசிய தலைமையில் முக்கிய பொறுப்பு அளிக்க, காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் முன் வருமா என்பது உறுதியாக தெரியவில்லை.. ஒருவேளை 3வது அணி உருவானால், அது கண்டிப்பாக பாஜகவுக்கே சாதகமாக முடியும் என்று பிரசாந்த் கிஷோர் பலமுறை சொல்லி உள்ளார்.. அப்படியிருக்க காங்கிரஸை விமர்சித்துக் கொண்டு மம்தாவுடன் சேர்ந்து 3வது அணி அமைப்பது சரியா? என்ற கேள்விகளும் எழாமல் இல்லை..

 எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

காங்கிரஸின் தற்போதைய நிலையை மோசமாக இருந்தாலும்கூட, அக்கட்சி இல்லாமல் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய முடியாது என்பதிலும் மம்தாவுக்கு மாற்று கருத்தில்லை.. அதனால்தான், மம்தா தற்போது செய்து கொண்டிருக்கும் அரசியல் அத்தனையும் காங்கிரஸை தன் வழிக்கு கொண்டு வந்து பணிய வைக்கத்தான் என்றும், காங்கிரஸை மிரள வைக்கவே அதிரடியை நாள்தோறும் நடத்தி கொண்டிருக்கிறார் என்றும் ஒருசாரார் சொல்கிறார்கள்.

மம்தா

மம்தா

காரணம், மம்தாவை பொறுத்தவரை அரசியல் ஆளுமை மிக்க பெண்.. இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்தான்.. அவருக்கு மேற்குவங்கம், அசாம், மேகாலயா, மிசோரம் போன்ற பகுதிகளில் ஆதரவு இருக்கத்தான் செய்கிறது.. ஆனால், உபியில் மம்தாவுக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இல்லை.. குறிப்பாக இந்தி பேசும் மக்கள், மம்தாவை ஏற்பார்களா என்பது சந்தேகம்தான்.. பொதுவாக, உபி அரசியலின் வெற்றிதான், இந்திய தேசிய அரசியலின் வெற்றியாக பார்க்கப்பட்ட வரும் நிலையில், மம்தாவைவிட காங்கிரசுக்குதான் உபியில் பலம் அதிகம்.

 மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

அதனால் முழுமையாக காங்கிரஸை மம்தாவால் பகைத்து கொள்ளவும் முடியாத நிலைமை உள்ளதாகவே தெரிகிறது.. இப்படி பல மாதங்களாகவே, இழுபறியாக நீடித்து வரும் இந்த பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று தெரியவில்லை.. இதற்கு 2 ஐடியாக்களை அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. ஒன்று, பாஜகவுக்கு எதிரான கூட்டணியை வலுவாக முதலில் அமைத்துவிட்டு, பிரதமர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனையை பிறகு பார்த்து கொள்ளலாம் அல்லது தலைமையில்லாத கூட்டணியும் உருவாகலாம் என்கிறார்கள்.

பாஜக

பாஜக

பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றால், 3வது அணி உருவாகிக்கூடாது, மனக்கசப்புகளை தலைவர்கள் அனைவரும் திரண்டு ஓரணியாக நிற்பதே சரியான முடிவாக இருக்கு முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர். ஒருவேளை முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் பிற்காலத்தில் பிரச்சனை எழும் சூழலில், ராகுல் காந்தி, மம்தா, பினராய் விஜயன் போன்றோர் லிஸ்ட்டில் ஸ்டாலினும் இடம்பெறுவாரா என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஸ்டாலின்

ஸ்டாலின்

கடந்த முறை ராகுலை பிரதமராக்குவோம் என்று முதன்முறையாக முன்மொழிந்தவரே ஸ்டாலின்தான் என்றாலும், இந்த முறை தேசிய அளவில் ஸ்டாலினின் மதிப்பு எகிறி வருகிறது.. மேலும் ஒருபக்கம் ராகுல்காந்தி மீதும் நம்பிக்கை வைத்துள்ளவர், இன்னொரு பக்கம் பிரசாந்த் கிஷோர் வியூகம் அமைத்து வரும் மம்தா மீதும் மதிப்பை வைத்துள்ளனர்.. அந்த வகையில் யாருக்கு ஆதரவு தருவார் என்று தெரியவில்லை.. ஆனால், எப்படி பார்த்தாலும் தேசிய அரசியல் ஸ்டாலினுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+