Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்தர் பல்டி.. 40 கிமீ வேகத்தை தாண்டினால் அபராதம் இல்லை! சென்னை போலீஸ் அறிவிப்பு! ‛டோன்ட் வொரி’

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பகல் நேரத்தில் 40 கிலோமீட்டர் வேகத்திலும், இரவில் 50 கிலோமீட்டர் வேகத்திலும் சென்றால் அபராதம் விதிக்கப்படும் எனவும், இதற்காக பிரத்யேகமான கருவிகள் 10 இடங்களில் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தான் தற்போது அதுபற்றி சென்னை போக்குவரத்து போலீஸ் புதிய விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகராக சென்னை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகளை தடுக்கும் வகையில் சென்னை மாநகர போலீசார் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது சென்னையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசார் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்பட்டது.

will-not-slap-fine-when-speed-limit-crossed-40-km-in-chennai-says-traffic-police

அதாவது சென்னையில் 10 இடங்களில் வாகனங்களில் வேகத்தை அளவீடும் தானியங்கி ஏஎன்பிஆர் கேமரா (Camera Of ANPR or Camera of Automatic number-plate recognition) பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாகனங்களின் வேகங்கள் கணக்கிடப்படும். அதில் அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு கேமராவில் பதிவாகும் பதிவெண்ணை அடிப்படையாக வைத்து அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னையில் பகலில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் ஓட்ட கூடாது. இரவில் 50 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் ஓட்டக்கூடாது. மீறி ஓட்டினால் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனம் இயக்கியதாக கூறி அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

அதாவது சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஒவ்வொருவரும் பணி நிமித்தமாக பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்களில் செல்ல வேண்டி உள்ளது. இத்தகைய சூழலில் பகலில் 40 கிலோமீட்டருக்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றால் நிறையபேருக்கு சிக்கல் ஏற்படும். இதனால் இந்த நடைமுறையை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தன. அதோடு இது மக்களிடம் இருந்து அபராதம் என்ற முறையில் பணம் வசூலிக்க சென்னை மாநகர போலீசார் போட்டுள்ள திட்டம் எனவும் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ய தொடங்கினர்.

இந்நிலையில் தான் நேற்று சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி சென்னையில் பகலில் 40 கிலோமீட்டர் வேகத்தை தாண்டினாலும், இரவில் 50 கிலோமீட்டர் வேகத்தை தாண்டினாலும் அபராதம் என்பது விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சென்னையில் ஏபிஎன்ஆர் கேமரா பொருத்தப்பட்டுள்ளதன் நோக்கம் பற்றியும் சென்னை மாநகர போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இதுபற்றி சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சமூக வலைதளங்களில் தற்போது பெரிய விமர்சனங்கள் சென்று கொண்டிருக்கிறது. இதனால் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அதாவது சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் சென்னை மாநகரில் வாகனங்களின் வேகத்தை கண்டறிந்து அபராதம் விதிக்கும் வகையில் ‛ஸ்பீட் டிஸ்பிளே' மற்றும் ஏஎன்பிஆர் வகை கேமராக்களை பொருத்தி உள்ளதாக செய்திகள் பரவுகின்றன.

உண்மை என்னவெனில் சென்னையில் 6 இடங்களில் ‛ஸ்பீட் டிஸ்பிளே' போர்டுகளை நிறுவப்பட்டுள்ளது. இந்த போர்டை கடக்கும்போது ஒவ்வொரு வாகனங்களின் வேகமும் கணக்கீட்டு காட்டப்படுவதோடு, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் தான் அந்த வாகனங்கள் செல்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியும். இதன்மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட வேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக செய்திகள் பரப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் இது அபராதம் விதிக்கும் நோக்கத்துக்காக பொருத்தப்படவில்லை. இது வாகன ஓட்டிகளையும் எச்சரிக்கவும், வாகனங்கள் செல்லும் வேகங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் தான் பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல் 10க்கும் மேற்பட்ட ஏஎன்பிஆர் வகை கேமராக்கள் சென்னை போக்குவரத்து போலீசாரால் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் என்பது வாகனங்கள் செல்லும் வேகங்களை கணக்கீட மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற வேகஅளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வேக அளவு என்பது இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் ஏஎன்பிஆர் வகை கேமராக்கள் மூலமும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படாது. இந்த கேமராக்கள் உள்ள பகுதியில் வாகனங்களின் வேகங்களை கண்டறிந்து சராசரி வேகம் கணக்கீட்டு வரும்காலத்தில் அங்கு வேகஅளவு நிர்ணயம் செய்யப்பட உள்ளது'' என விளக்கம் அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+