இனிமே பணம் எடுக்க ஓடிபி தேவையா? எஸ்பிஐ விதியை பின்பற்ற போகும் மற்ற வங்கிகள்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான விதிகளை எஸ்பிஐ கடந்த 2020ல் மாற்றியது. எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து மேலும் சில வங்கிகள் இதே விதியை பின்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதெல்லாம் வங்கி கணக்கில் இருந்து நூதன முறைகளில் மோசடிகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் போன் செய்து.. உங்கள் ஏடிஎம் கார்ட் காலாவதியாகிவிட்டது கார்ட் மேலே இருக்கும் 16 நம்பர் சொல்லுங்கள் என்று கூறி மோசடி செய்தனர்.

வங்கி மேனேஜர் பேசுவதாக கூறி இப்படி மோசடியாளர்கள் பேசுவதை நம்பி பலர் ஓடிபியை பகிர்ந்து ஏமாந்த கதைகள் உண்டு. இதை தடுக்க பல்வேறு விதிகள் ஆர்பிஐ மூலமும், பல்வேறு வங்கிகள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.

எஸ்பிஐ

எஸ்பிஐ

முக்கியமாக எஸ்பிஐ வங்கி 2020 ஜனவரி 1ம் தேதி கொண்டு வந்த விதிப்படி, அந்த வங்கியின் ஏடிஎம்மில் 10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க ஒவ்வொரு முறையும் ஏடிஎம்மில் ஓடிபி கொடுக்க வேண்டும். அதாவது நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்து இருக்கிறீர்கள். அவர்களின் ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும் என்றால் உங்களின் பதிவு செய்யப்பட்ட போன் எண்ணுக்கு ஓடிபி வரும். இந்த ஓடிபி கொடுத்தால் மட்டுமே பணம் வரும்.

ஏடிஎம்

ஏடிஎம்

அதாவது ஏடிஎம் பின் இல்லாமல் இந்த ஓடிபியும் கொடுக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் ஏடிஎம் கார்டை யாராவ திருடினால் கூட அவர்களால் ஓடிபி இல்லாமல் பணம் எடுக்க முடியாது. இந்த ஓடிபி 4 டிஜிட் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு முறை கார்ட் மூலம் பணம் எடுக்கவும் இந்த ஓடிபி தேவை. இந்த திட்டம் 2 வருடமாக எஸ்பிஐ வங்கியில் அமலில் இருக்கிறது.

அமலுக்கு வரும்

அமலுக்கு வரும்

இது திட்டம் மற்ற வங்கிகளுக்கும் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மற்ற வங்கிகளும் புதிய முறைப்படி ஏடிஎம்மில் ஓடிபி மூலம் பணம் எடுக்கும் முறையை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நீங்கள் வங்கிக்கு பணம் எடுக்க செல்கிறீர்கள் என்றால், உங்களுடன் பதிவு செய்யப்பட்ட போனை ஏடிஎம்மிற்கு எடுத்த செல்ல நேரிடும். 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கிறீர்கள் அதற்கு ஓடிபி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனால் இன்னும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. வரும் நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று வங்கி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏடிஎம் மூலம் பணம் திருடப்படுவதை, பாஸ்வேர்ட் தெரிந்தவர்கள் மற்றவர்களின் வங்கிகளில் பணம் எடுப்பதை தவிர்க்கும் விதமாக இந்த ரூல்ஸ் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. எஸ்பிஐயின் இந்த விதியை வரும் நாட்களில் ஒவ்வொரு வங்கியாக பின்பற்ற போவதாக கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+