கோ பேக் மோடி போட்ட ஓவியா... திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமா? - என்னங்க சொல்றீங்க

நடிகை ஓவியா அரசியலில் குதிக்கப் போகிறாராம். அதுவும் திமுகவிற்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோ பேக் மோடி என்று ட்விட்டரில் பதிவிட்ட ஓவியாவை திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பேசியுள்ளதாம் ஐ பேக் நிறுவனம். அதற்கு சம்பளமாக ஒரு கோடி தரப்போகிறார்களாம். இதுதான் இப்போதைக்கு பரபரப்பான பேச்சாக உள்ளது.

சினிமா நடிகைகள் அரசியலுக்கு வருவது புதிய விசயமில்லை. நடிகையாக இருந்த ஜெயலலிதா முதல்வராக உயர்ந்தார் அவரைப்போல எத்தனையோ நடிகைகள் அரசியலில் நுழைந்து தேர்தல் பிரச்சாரம் செய்தாலும் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை. சமீப காலங்களில் பல நடிகைகள் பாஜகவில் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகின்றனர்.

திமுகவில் பெரிய அளவில் நடிகைகள் யாரும் இல்லாத நிலையில் நடிகை ஓவியா திமுகவிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஓவியா

நடிகை ஓவியா

களவாணி படத்தில் பள்ளிக்கூட சிறுமியாக அறிமுகமானவர் ஓவியா. அதற்கு அடுத்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. மூடர் கூடம், மதயானை கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெரிய அளவில் ஹிட் படங்களில் நடிக்கவில்லை ஓவியா.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. ஓவியாவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆர்மிகள் தொடங்கப்பட்டன. அந்த சீசனில் கலந்து கொண்ட நடிகர் ஆரவை காதலிப்பதாக கூறப்பட்டது ஆனாலும் ஆரவ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவே அந்த பரபரப்பும் நாளடைவில் அடங்கிப் போனது.

சினிமா வாய்ப்புகள்

சினிமா வாய்ப்புகள்

இதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் ஓவியா, சரியான படங்களை தேர்ந்தெடுக்காததால் மீண்டும் ஓரங்கட்டப்பட்டார். காஞ்சனா 3 படத்தில் நடித்தாலும் மூன்றில் ஒரு நாயகியாக மட்டுமே நடித்திருந்தார். சில வருடங்களாக பெரிய அளவில் சினிமா எதிலும் நடிக்காமல் இருந்தார் ஓவியா.

மோடிக்கு எதிர்ப்பு பதிவு

மோடிக்கு எதிர்ப்பு பதிவு

இந்த நிலையில்தான் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் #GoBackModi என்ற ஹேஷ்டாக் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ஓவியாவுக்கு எதிர்ப்பாக பாஜகவினர் பதிவிட்டனர். ஓவியாவிற்கு எதிராக காவல் நிலையத்திலும் பாஜகவினர் புகார் அளித்தனர். அதே நேரத்தில் பாஜக எதிர்ப்பாளர்கள் பலரும் ஓவியாவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

சம்பளம் இவ்வளவா?

சம்பளம் இவ்வளவா?

ஓவியாவின் அரசியல் பயணம் இதன் மூலம் ஆரம்பித்து விட்டதாகவே தெரிகிறது. சட்டசபைத் தேர்தலில் அவர் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாகக் கூறப்படுகிறது. திமுக பேச்சாளராக ஓவியாவை ஐ பேக் நிறுவனம் அமர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு சம்பளம் ஒரு கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

பாஜகவில் நடிகைகள்

பாஜகவில் நடிகைகள்

பாஜகவில் காயத்ரி ரகுராம், கௌதமி, குஷ்பு உள்ளிட்ட பல நடிகைகள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தயாராகி விட்டனர். அதிமுகவில் விந்தியா கடந்த பல ஆண்டு காலமாகவே பிரச்சாரம் செய்து வருகிறார். திமுகவில் பெண் பேச்சாளர்கள் அதிகளவில் இருக்கின்றனர். நடிகை ஓவியா திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரா பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+