சல்லி சல்லியா நொறுங்கும் பாஜக கணக்கு.. அன்புமணி சொல்றது "கேட்டுச்சா".. திமுக குஷி.. அப்ப "அது"தானா?

திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக - திமுக குறித்து முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளது, அரசியல் களத்தில் கவனத்தை பெற்று வருகிறது.

பாஜக கூட்டணியில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் இருந்தே பாமக ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து வருகிறது.. ஒருமுறை நடந்த எம்பி தேர்தல் பிரசாரத்தின்போது ராமதாஸ், பாஜகவுக்கு ஆதரவாக ஒரு மேடையில் கூட பிரசாரம் செய்யவே இல்லை..

இந்த விவகாரம் அப்போதே மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.. எனினும், பாஜக இதை பெரிதுபடுத்தவில்லை..

 தருமபுரி தொகுதி

தருமபுரி தொகுதி

இதற்கு பிறகுதான், தேசம் முழுவதும் வீசிய மோடி அலை தமிழகத்தில் வீசாமல் போனதாலும், சொந்த தர்மபுரி தொகுதியிலேயே அன்புமணி வெற்றி பெற்றதாலும் கூட்டணியில் பெருத்த விரிசல் உண்டானது. காரணம், பாஜகவுடன் கூட்டணி வைக்க டாக்டர் ராமதாசுக்கு அந்த சமயத்தில் விருப்பமில்லை என்றும், அன்புமணியின் வற்புறுத்தல் காரணமாகவே வேறு வழியின்றி கூட்டணியில் இணைந்ததாகவும் சலசலக்கப்பட்டது.. அதற்கேற்றபடி, தேர்தல்களின்போதும், தேர்தல் வெற்றிக்கு பிறகும் பாஜக தலைவர்களை சந்திப்பதை ராமதாஸ் தவிர்த்தே வந்தார்..

 பாஜகவுடன் நெருக்கம்

பாஜகவுடன் நெருக்கம்

இதற்கு நடுவில் எம்பி சீட் பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, நேரிலேயே டெல்லியில் அன்புமணி ராமதாஸ் முகாமிடும் சூழலும் ஏற்பட்டது... எனினும் கடந்த சில வருடங்களாகவே, பாஜகவுடன் நெருக்கம் இல்லாமலும், மோதல் போக்கு இல்லாமலும் பாமக கடைப்பிடித்து வருகிறது.. தமிழக நலனை பாதிக்கக்கூடிய இந்தி மொழி திணிப்பு உட்பட விஷயங்கள் எது நடந்தாலும், அதை கண்டித்து ராமதாசும் குரல் கொடுக்க தவறியதே இல்லை.

 தலைவர் அன்புமணி

தலைவர் அன்புமணி

இந்நிலையில், எம்பி தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதற்கு பாமக தன்னை தயார் படுத்தி வருகிறது.. வடமாவட்டங்களில் கூட சொந்த செல்வாக்கை இழந்து வரும் நிலையில், கட்சியை பலப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இதற்காக தற்போது அன்புமணி கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. அதேசமயம், இந்த நியமனத்துக்கு கட்சிக்குள்ளேயே அதிருப்திகளும் வெடித்து வருகின்றன.

 பாஜக - அதிமுக

பாஜக - அதிமுக

இப்படிப்பட்ட சூழலில்தான் பாஜக குறித்து அன்புமணி ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக அரசு இதுவரை என்ன செய்து கொண்டு இருக்கின்றது என்று தெரியவில்லை... கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்.. தமிழக அரசு சட்டம் ஒன்றை இயற்றி தடை செய்ய வேண்டும்.. போதை பொருட்களால் தமிழகத்தில் அதிக அளவில் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளது. காவல்துறை இரும்புகரம் கொண்டு தடுக்க வேண்டும்.

 சாதியால் நன்மை

சாதியால் நன்மை

ஜாதியால் அடக்குமுறை என்பது மட்டும் கூடாது.. மற்றபடி ஜாதியால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. ஜாதியால் பல்வேறு பழக்க வழக்கங்கள், திருமண முறைகள், உணவு முறைகள் ஆகியவற்றை கண்டறிய முடியும்.. சுதந்திர போராட்ட தியாகிகளை அவர்களது சமுதாயத்தை வைத்தே அடையாளம் காணமுடியும். உண்மையான எதிர்க்கட்சியாக பாமக மட்டுமே செயல்பட்டு வருகிறது. எங்களுடைய நோக்கம் 2026 இல் பாமகவின் ஆட்சி அமைப்பது மட்டுமே. அதற்காக பல்வேறு உத்திகளையும் திட்டங்களையும் பின்பற்றி வெற்றி பெறுவோம்.

மீடியாக்கள்

மீடியாக்கள்

பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை பற்றி விமர்சிப்பது தவறு... கடந்த சில நாட்களாக தமிழகத்தில் திமுகவிற்கு இணையான கட்சி பாஜக என்று சில மீடியாக்கள் சொல்லி வருகின்றன... ஆனால் உண்மையில் தமிழகத்தில் திமுக மட்டுமே பெரிய கட்சி... பாஜக என்பது சிறிய கட்சி... அதாவது, பாஜக வளர்ந்துவரும் கட்சி.. ஆனால் தேசிய அளவில் மிகப்பெரிய கட்சி.. தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை" என்றார்..

 பாஜக - திமுக

பாஜக - திமுக

பாஜகவை போட்டு தாக்கி அன்புமணி பேசியுள்ளது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. காரணம், திமுகவுக்கு மாற்று தாங்கள்தான் என்று கருதிகொண்டிருக்கும் பாஜகவின் கணக்கும் தவிடுபொடியாகி உள்ளது.. மேலும், அதிமுக - பாஜக நெருக்கமாக உள்ள நிலையில், வரப்போகும் தேர்தல்களில் பாமக பாஜகவுடன் கூட்டணி வைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.. அதேசமயம், சமீபகாலமாகவே திமுகவுடன் இணக்கம் காட்டி வரும் பாமக, அந்த கட்சியை மிகப்பெரிய கட்சி என்று பாராட்டியிருப்பதையும் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டி உள்ளது.. அதேநேரம், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் ஊழல் குறைந்துள்ளது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். திமுகவை குஷிப்படுத்தும் விஷயங்களை பேசிய அன்புமணி பாஜகவிற்கும் ஆதரவாக ஒரு கருத்தை தூவிவிட்டு சென்றுள்ளது குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பையும் அணுசரித்து செல்லும் அரசியலை கையில் எடுத்துக்கொண்டே திமுக பக்கம் அன்புமணி அதிமாக நெருங்குகிறாரோ என்ற கேள்விகளையும் தவிர்க்க முடியவில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம்.. போற போக்கை பார்த்தால், "அது"வும் நடக்கலாம்.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+