ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த அறிவிப்பு.. இன்னும் 2 வாரத்தில் வருகிறதா?
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள் .
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள் .
நடிகர் ரஜினிகாந்திற்கு இது மிகவும் சிறப்பான வருடம் என்றுதான் கூற வேண்டும். காலா, 2.0 உள்ளிட்ட படங்கள் தொடர்ச்சியாக வந்து ஹிட் அடித்து இருக்கிறது. இன்னும் பேட்ட வெளியாக காத்திருக்கிறது.
அதே சமயம் அரசியல்வாதி ரஜினிக்கு இது அத்தனை ஒன்றும் சிறப்பான வருடம் கிடையாது. பல ஏற்ற இறக்கங்களுடன்தான் இந்த வருடம் அவருக்கு சென்று இருக்கிறது.
[தமிழகத்தில் அரசியல் தலைவருக்கான வெற்றிடம் நிலவுகிறது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி!]

போன் வருடம் அறிவித்தார்
அப்படி, இப்படி என்று ஒரு வருடம் ஓடிவிட்டது. சென்ற வருடம் டிசம்பர் 31ம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மறுநாள் கொண்டாட வேண்டிய புது வருடத்தை அவரது ரசிகர்கள் அன்றே கொண்டாடினார்கள். ஆனால் அதன்பின் ரஜினி அரசியலில் பாட்ஷா மோடில் இருந்து மாணிக்கம் மோடிற்கு சென்று விட்டார்.

எப்படி போனது
தொடர்ச்சியாக சில அரசியல் பேட்டிகளை மட்டுமே அளித்து வந்தார். முக்கியமாக அவர் அளித்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு பேட்டி, யார் அந்த 7 பேர் பேட்டி, பாஜக குறித்த பேட்டி, தலையே சுத்திடுச்சு உள்ளிட்ட பேட்டிகள் எல்லாம் பெரிய பிரச்சனையை உருவாக்கியது. ரஜினியின் அரசியல் பயணம், இன்றைய நாள் வரை அத்தனை ஜோராக அமையவில்லை என்றுதான் கூறவேண்டும்.

இந்த வருடம் எதிர்பார்ப்பு
இது ரஜினி ரசிகர்ளுக்கும் கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அட அதிரடியாக இறங்கி அடிப்பார்ன்னு பார்த்தா, சந்திரனா இருக்க வேண்டியவர், இந்திரான பவ்யம் காட்டுகிறாரே என்று வருத்தத்தில் இருக்கிறார்கள். ரஜினியும் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு ஒருவருடம் ஆகிவிட்டது. இன்னும் கட்சி தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கிறார்.

செய்வாரா?
இந்த நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். டிசம்பர் 12ம் தேதி அவரது பிறந்த நாள் அன்று ரஜினி இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறுகிறார்கள். இதற்காக அவர் தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்டிங் நடக்க வாய்ப்புள்ளது
அதற்கு ஏற்றப்படி ரஜினிகாந்த் தற்போது சென்னையில் ஓய்வில்தான் இருக்கிறார். இதை முன்னிட்டு அவர் தனது ரசிகர்களுடன் சென்ற வருடம் நடத்தியது போல, சந்திப்பு கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு இந்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications