ஆளுநரே.. "ராமராஜ்ஜியம்" ராஜ்பவனில் இருக்கட்டும்.. பாஜகவுக்கே ஷாக் தந்த "தனி ஒருவன்" யார் தெரியுமா?
ராமராஜ்ஜியம் குறித்து மதுரை எம்பி வெங்கடேசன் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: ராமராஜ்ஜியம் என்று ஆளுநர் ரவி சொன்ன அந்த வார்த்தைக்கு, தமிழக அரசியல் கட்சிகள் கொந்தளிப்பு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
இப்போது என்றில்லை, ஆளுநர் ரவி பொறுப்பேற்றதில் இருந்தே இப்படித்தான் அடிக்கடி ஏதாவது கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்.
இவரது மகளுக்கு கடந்த மாதம் ஊட்டியில் திருமணம் நடந்தது.. அதற்காக ராஜ்பவனையும் அலங்காரம் செய்திருந்தார்கள்...

பெயிண்ட்
ஊட்டியில் உள்ள இந்த ராஜ் பவன், 1876ம் ஆண்டு, டியூக் ஆஃப் பக்கிங்ஹாம் என்ற பிரிட்டிஷ் ஆளுநரால் உருவாக்கப்பட்டது... முன்பெல்லாம் இந்த மாளிகைக்கு "கவர்மன்ட் அவுஸ் என்று பெயர்.. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுதான், ராஜ்பவன் என்று அழைக்கப்பட்டு வருகிறது... இத்தனை வருட காலம், அதாவது பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே 145 வருடங்களாக, இந்த ராஜ்பவனின் வெளிப்பக்க கட்டிட சுவர் பச்சை கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது..

பச்சை கலர் பெயிண்ட்
ஆளுநர் மகள் திருமணத்திற்காக, ராஜ்பவனின் பாரம்பரிய நிறத்தை மாற்றி பளிச்சென்று தெரியும் வெள்ளை கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டது.. ஆளுநரின் உத்தரவுப்படியே ராஜ்பவனின் நிறம் மாற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.. இது ஒரு சர்ச்சை என்றால், நீட் தேர்வு விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.. இப்படி தமிழகத்துக்கு புறம்பான வகையில், தமிழகம் ஏற்க முடியாத கருத்தியல்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார் ஆளுநர் என்பதே பரவலான கருத்து.

ஒன்றிய வளர்ச்சி
இப்போது இன்னொரு சலசலசப்பை கிளப்பி விட்டுள்ளார்.. ராம ராஜ்ஜியம் என்ற வார்த்தையை அதிகம் உச்சரித்து வருவது உபியின் யோகிதான்.. இப்படி ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் உச்சரிக்கும் வார்த்தையை ஒரு மாநிலத்தின் ஆளுநர் உச்சரித்துள்ளார் என்றால், அது வியப்புக்குரியது.. அதிர்ச்சிக்குரியதும்கூட..

கொந்தளிப்பு
ஆளுநர் மாளிகை போட்டிருந்த டிவீட்டில், "மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்,திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் சென்னை, ஸ்ரீ ராம் சமாஜத்தில் ராம நவமி விழாவை தொடங்கி வைத்து இன்றைய மிக முக்கிய காலத்தில் நம் நாடு அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கி ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருவதை விளக்கினார் " என்று கூறப்பட்டிருந்தது.. இப்படி ஒரு ட்வீட்டை பார்த்ததுமே தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்.. எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

நெத்தியடி பதில்
அந்த வகையில், மதுரை எம்பி வெங்கடேசனும் தன் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.. அதில், "உங்கள் ராமராஜ்ஜியங்கள் ராஜ்பவனுக்குள்ளேயே இருக்கட்டும் ... அவை எப்போதும் ராஜ்பவனுக்கானவை மட்டுமே ... இந்தியர்களுக்கானது அரசியல் சாசனமே ... அந்தக் கனவே ஆளுநருக்கு தேவை" என்று நெத்தியடியாக பதிவிட்டுள்ளார்.. இப்படி பல தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், ஒரே ஒருவர் மட்டும் ஆளுநருக்கு முட்டுக் கொடுத்து சப்போர்ட் செய்துள்ளார்.. அது வேறு யாருமில்லை.. நம்ம செல்லூர் ராஜுதான்..!

செல்லூர் ராஜு
ஒரு படி மேலே போய் செய்தியாளர்களிடம் பேட்டியே தந்துவிட்டார்.. "கடந்த 10 வருடம் தமிழகத்தில் நடந்ததுதான் ராம ராஜ்ஜியம்... அதிமுக கொடுத்ததுதான் ராம ராஜ்ஜியம்... அந்த ஆட்சியில்தான் மக்கள் நன்றாக இருந்தனர்.. சுபிட்சமாக வாழ்ந்தார்கள்... அதுதான் உண்மையான ராம ராஜ்ஜியம்... இப்போது திமுக ஆட்சியில் மக்கள் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.. கூடிய சீக்கிரம் மறுபடியும் தமிழகத்தில் ராம ராஜ்ஜியம் மலரும்" என்று பேசி டெல்லிக்கே ஷாக் தந்துவிட்டார்..

அருணன்
ஆனாலும் விடுவார்களா நம்ம தலைவர்கள்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன் சரியான பதிலடியை செல்லூர் ராஜுக்கு தந்துள்ளார். "அதிமுக ராமராஜியத்தை கொடுக்கும்".. செல்லூர் ராஜு... ஆளுநருக்கு ஆமாம் போடும் அதிமுக! "அண்ணா திராவிட மு க" என்பதை "ஆளுநர் ஆரிய மு க" என மாற்றுக" என்று பதிவிட்டுள்ளார்.. இப்படி பல விமர்சனங்கள், கருத்துக்கள் எழுந்தாலும், ராமராஜ்ஜியம் என்ற பேச்சு கடைசியில் தமிழ்நாட்டிலும் உச்சரிக்க ஆரம்பித்துவிட்டதுதான் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயமாகும்..!












Click it and Unblock the Notifications