திமுகவை எதிர்க்க போய்.. அதிமுகவை தாக்கிய அண்ணாமலை.. அமித் ஷா சொன்னதுக்கு அப்படியே "ஆப்போசிட்".. ஏன்?
சென்னை: இன்று ஆளும் திமுக அரசை எதிர்க்க போய் அதிமுகவை மறைமுகமாக தாக்கி இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. அவரின் பேச்சு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும்.

எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன்.
கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை.
தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம். இதையடுத்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது.
பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவும். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.
சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட நிலையில்தான் தற்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.

அண்ணாமலை இதற்கு கொடுத்த விளக்கத்தில். அதில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் எங்கேயும் கூறவில்லை. அமித்ஷா கூறியதை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதாக என்பதற்கு ‛இருக்கிறது' என்று தான் அமித்ஷா கூறினார். நான் அமித் ஷாவுடன் இரண்டு மணி நேரம் பேசினேன்.
அதில் பல விஷயங்களை பேசினோம். அதை எல்லாம் இங்கே சொல்ல முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை. இதுதான் நடக்கும் என்று எதையும் உறுதியாக சொல்ல முடியாது. கூட்டணி விவகாரத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை என்பதை கூற இயலாது.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது. அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை. அரசியலில் தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று கூறினார்.
அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று அமித் ஷா கூறினார் - எடப்படியும் இதை உறுதி செய்துள்ளார். இந்த நிலையில்தான் இன்று திடீரென ஆளும் திமுக அரசை எதிர்க்க போய் அதிமுகவை மறைமுகமாக தாக்கி இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. அவரின் பேச்சு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பல விஷயங்களை பற்றி பேசிய அண்ணாமலை, தனது ரபேல் வாட்ச் சேரலாதன் ராமகிருஷ்னன் என்பவரிடம் இருந்து வாங்கியது என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதையடுத்து, அதிமுகவை தாக்கி பேசிய அண்ணாமலை, ஊழல் பட்டியலில் திமுகவிற்கு எதிராக பற்றி மட்டும் பேச மாட்டேன். ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையை அப்படியே எதிர்க்க வேண்டும். அடி ஆழத்தில் இருந்து எதிர்க்க வேண்டும். திமுக பைல்ஸ் என்பது இப்போது முடிய போவது இல்லை.
இது பார்ட் 1னுடன் முடியாது. தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அந்த கட்சி எல்லாம் பற்றி பேசுவோம். அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவோம்.
லோக்சபா தேர்தலுக்கு முன் இதை பற்றி எல்லாம் பேசுவோம். அவர்கள் செய்த ஊழல்களை பற்றி பேசுவோம். நீங்கள் நினைப்பீர்கள்.. அண்ணாமலை திமுக பற்றி மட்டும்தான் பேசுவார் என்று.
இல்லை அனைத்து ஊழல் பற்றியும் நாங்கள் பேசுவோம். 2024 தேர்தலுக்கு முன் எல்லோரையும் பற்றியும் பேசுவோம். ஊழல் பற்றி பேசுவோம் என்றால் எல்லாரையும் பற்றியும் பேசுவோம்.
ஒருவரை பற்றி மட்டும் பேசினால் நம்மை மக்கள் நம்ப மாட்டார்கள். உங்களை எதிர்க்க கூடாது என்றால் டெல்லி போய் அண்ணாமலையை பார்த்துவிட்டு வாருங்கள். அண்ணாமலை இருக்கும் வரை அனைவரின் ஊழலையும் பற்றி பேசுவேன்.
ஆட்சியில் இருந்த எல்லா கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவேன். அண்ணாமலை இருக்கும் வரை அதை தடுக்க முடியாது. இது ஊழலுக்கு எதிரான போராட்டம். திராணி இருப்பவர்.. தைரியம் இருப்பவர் போய் என்னை மாற்றுங்கள், என்று அதிமுகவிற்கு சவால் விடுக்கும் விதமாக பேசி உள்ளார்.
திமுகவை எதிர்க்கிறேன் என்று கூறிவிட்டு அண்ணாமலை அதிமுகவையும் இன்று எதிர்த்து இருப்பது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
Election Exclusive: வாயில் வாஸ்து சரியில்ல.. ஜெயிச்சாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிக்கல்! திமுக போடும் பலே ப்ளான்? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications