சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஓ"ஹோ ராஜா.. நெருங்கும் கிளைமாக்ஸ்.. 3 அஸ்திரங்களும், "இலவு காத்த சசி"யும்.. என்ன ஆக போகுதோ?

எடப்பாடி பழனிசாமி, ஒற்றை தலைமையாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா மொத்தம் 3 விஷயங்களை பலமாக நம்பிக் கொண்டிருக்கிறாராம்.. இப்போதுவரை கட்சிக்குள் நடந்து கொண்டிருப்பது, அவருக்கு சாதகமாகவே அமைந்தும் வருகின்றன.

அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து மிகப்பெரிய அளவில் மோதல் வெடித்தது.. பொதுக்குழுவில் பெரிதும் அவமதிக்கப்பட்ட ஓபிஎஸ் மிகவும் இறுக்கமான முகத்துடன் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.

பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது..

தர்மயுத்தம் 2.0! அவரா வாங்குறத வாங்கிட்டு வரட்டும்! நேரம் பார்த்து அடித்த சசிகலா! பழசு ஞாபகம் வரும்ல தர்மயுத்தம் 2.0! அவரா வாங்குறத வாங்கிட்டு வரட்டும்! நேரம் பார்த்து அடித்த சசிகலா! பழசு ஞாபகம் வரும்ல

 அவமானங்கள்

அவமானங்கள்

பிறகு ஜுலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இப்படி அதிமுகவில் தினமும் நொடிக்கு நொடி பரபரப்புகள் எகிறி கொண்டிருக்கின்றன.. ஆனால், இதில் சசிகலா ரோல் என்ன என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.. ஓபிஎஸ்ஸுக்கு நடக்கும் அவமானங்கள், நிராகரிப்புகள், எதிர்ப்புகள் போன்றவைகள் அத்தனையும் சசிகலா காதுக்கு சென்று கொண்டேயிருக்கிறதாம்.. அவரும் இந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தபடியே இருக்கிறார்..

 பொதுக்குழு

பொதுக்குழு

குறிப்பாக, அதிமுக பொதுக்குழு கூட்டும்வரை, சசிகலா என்ன செய்ய போகிறார் என்ற டென்ஷன் நிலவி வருகிறது.. எனினும் தற்போதுவரை, ஒற்றை தலைமை பற்றி முடிவு எதுவும் எடுக்கப்படாத மகிழ்ச்சி சசிகலா தரப்புக்கு நிறையவே இருக்கிறதாம்... மற்றொருபக்கம், தன்னை பற்றின பேச்சை, ஓபிஎஸ் அவராகவே வெளியிடுவார் என்றும் சசிகலா நம்புகிறாராம்.. அதாவது, டெல்லியில் இருந்து, வீசப்படும் பந்தை, எடப்பாடி பழனிசாமி பக்கம் திருப்பும் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தால், கடைசியாக ஓபிஎஸ்ஸுக்கு மிச்சம் இருக்கும் நம்பிக்கை சசி மட்டுமே,.

 ஓ. ராஜா

ஓ. ராஜா

தேனியில் நடந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில், ஓ.ராஜா கலந்து கொண்டாராம்.. இவர் ஏன் அந்த கூட்டத்துக்கு போனார் என்று தெரியவில்லை.. ஆனால், முக்கிய நிர்வாகிகளிடம் மனம்விட்டு, நிறைய ஆலோசனைகளை மேற்கொண்டாராம்.. அந்த தகவல் எல்லாம் ஓபிஎஸ்ஸுக்கும் பாஸ் செய்யப்பட்டுள்ளது. இப்போது ஓபிஎஸ் - சசி பிரேமில், ஓ.ராஜா அடிக்கடி வந்து போவதாக கூறப்படுகிறது.. இதுவும் சசிகலாவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்து வருகிறது..

 ஒற்றை தலைமை

ஒற்றை தலைமை

அதுமட்டுமல்ல, ஒற்றைத் தலைமை கோஷம் அதிமுகவில் ஓங்கி ஒலிப்பதே சசிகலாவுக்கு பிடிக்கவில்லையாம். எடப்பாடி, ஓபிஎஸ் இவர்களில் யாரொருவர் அதிமுகவுக்கு ஒற்றை தலைமையாக வந்தாலும், அது தனக்கு சாதகமாக இருக்காது என்பதே சசியின் கணக்காக உள்ளதாக கூறப்படுகிறது.. அதாவது, இன்னும் சில காலம் இரட்டைத் தலைமையின் கீழ் அதிமுகவுக்குள் குடைச்சல் நீடித்தால்தான், அதிமுகவுக்குள் தன்னுடைய வரவு, சிறப்பாகவும், பயன் தரத்தக்க வகையிலும் அமையும் என்று சசிகலா திட்டமிடுகிறாராம்..

Recommended Video

    ADMK உருவான Flashback! DMK பொதுக்குழுவால் நீக்கப்பட்ட MGR! | *Politcs | OneIndia Tamil
     ஓ.ராஜா

    ஓ.ராஜா

    ஆக, ஓ.ராஜா ஒருபக்கம் காய் நகர்த்த, ஒற்றை தலைமை விவகாரத்தில் முடிவு எட்டப்படாததும், சசிகலாவுக்கு மற்றொரு சான்ஸ் ஆகவே கருதப்படுகிறது.. ஓபிஎஸ் இப்போது டெல்லி சென்றுள்ளார்.. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில், பாஜக நேடியாக தலையிடாது என்றாலும், எடப்பாடி மீதான வழக்குகள் குறித்து, அழுத்தம் தர சிபாரிசு செய்துவிட்டு வரலாம் என்கிறாரகள்.. ஒருவேளை இது நடந்தால், இதுவும் சசிகலாவுக்கு பிளஸ்தான்,.. இதுபோக, சசிகலா மேற்கொள்ளப்போகும் சுற்றுப்பயணம், இந்த முறை வேற லெவலில் இருக்கும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

    English summary
    will Sasikala capture aiadmk and what will edapadi palanisamy do the next எடப்பாடி பழனிசாமி, ஒற்றை தலைமையாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுகிறது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X