சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த "விக்கெட்" காலி.. சசியின் "ராஜதந்திரம்".. 2 பேர் ரெடி போலயே.. அட இவர்களா?.. கலங்கும் கட்சிகள்

எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க சசிகலா புது வியூகம் கையில் எடுக்கிறாராம்

Google Oneindia Tamil News

சென்னை: செம ஹேப்பி மூடில் இருக்கிறாராம் சசிகலா.. என்ன காரணம் தெரியுமா? கட்சி விரைவில் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு வந்துவிடக்கூடிய அளவுக்கு ஒரு மாஸ்டர் பிளானை போட்டுள்ளாராம்.

ஆரம்ப காலத்தில் இருந்து, சசிகலாவால் அரசியலில் வளர்க்கப்பட்டவர்... சசிகலா சமூகத்தை சேர்ந்தவர்.. டெல்டாவை சேர்ந்தவர்.. சிறைக்குச் செல்லும் வரை, அவரின் குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்..

 இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள்.. அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.. அமைச்சர் சிவசங்கர் அதிரடி இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள்.. அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.. அமைச்சர் சிவசங்கர் அதிரடி

ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழுவில் முக்கி தளபதியாக திகழ்ந்தவர்.. அதிமுகவின் 7 மாவட்டங்களுக்கான பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டவர்..

 வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

அதாவது ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அன்றைய டாப் 5 முக்கிய தலைவர்களில், தொடர்ந்து 3வது இடத்தில் இருந்தவர்தான் வைத்திலிங்கம்.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமியே, இவருக்கு அடுத்த இடத்தில்தான் அப்போது இடம்பெற்றிருந்தார்.. ஆனால், 2016 தேர்தலில் வைத்திலிங்கம் தோல்வி அடைந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டார்.

டெல்டா

டெல்டா

ஜெயலலிதா மறைவு, சசிகலா ஜெயில், ஓபிஎஸ் இரட்டை தலைமை விவகாரம் என அதிமுக பரபரத்தபோது, வைத்திலிங்கம் நிலைமை என்ன என்ற வருத்தம் டெல்டா அதிமுகவில் எழுந்தது.. ஆனால், ஓபிஎஸ் அவரை கைவிடவில்லை.. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்து, டெல்டா அதிமுகவை நிமிர வைத்தார்.. ஜெயிலிலிருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டபோது, சிவி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் எதிராக காட்டமான கருத்துகளை தெரிவித்துவந்தனர். ஆனால், வைத்திலிங்கம் மட்டும் சைலண்ட்டாகவே இருந்தார்..

 அப்செட் எடப்பாடி

அப்செட் எடப்பாடி

எடப்பாடி ஆட்சியில் எப்படியும் எம்பி பதவி கிடைக்கும் என்று கனவு கண்டார்.. ஆனால், ஓபிஎஸ் மகனுக்கு அந்த வாய்ப்பு சென்றுவிடவும் அப்செட் ஆகிவிட்டார்.. மேலும் தென் மண்டலத்தைவிட, கொங்கு மண்டலத்தை எடப்பாடி தூக்கி வளர்த்தது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.. எனவே, வைத்திலிங்கம் எப்போது வேண்டுமானாலும் சசிகலா பக்கம் தாவக்கூடும் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

 டெல்டாவாசிகள்

டெல்டாவாசிகள்

இப்படிப்பட்ட சூழலில்தான் அந்த விஷயம் கசிந்துள்ளது.. தஞ்சை மண்டலத்தில் உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்தது இல்லையா.. அதில், வைத்திலிங்கம் அபார வெற்றி பெற்றுள்ளார்.. வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளது சசிகலாவே வெற்றி பெற்றது போல என்கிறார்கள் டெல்டாவாசிகள்.. அதுமட்டுமல்ல, எடப்பாடி ஆட்சி காலத்தில் கொங்குவில் ஓங்கியிருந்தது எஸ்பி வேலுமணியின் கை.. ஆனால், தற்போது ரெய்டுக்கு பிறகு மொத்தமாகவே ஆப் ஆகி கிடக்கிறாராம்.. சட்டசபையில்கூட பெரிதாக எதை பற்றியும் பேசுவதில்லை..

 வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

ஆனால், அதுவே ஓபிஎஸ்ஸோ சட்டசபையில் செம பிஸியாக செயல்பட்டு வருகிறார்.. அதாவது கொங்கு மண்டலத்தின் வாய்ஸ் குறைந்து தெற்கு மண்டலத்தின் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.. மாறாக தென்மண்டலத்தின் குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கிவிட்டன.. அதிலும் ஓபிஎஸ், வைத்திலிங்கம், இந்த 2 மெகா புள்ளிகளையும் வைத்தே, அதிமுகவை கைப்பற்றிவிடலாம் என்று சசிகலா கணக்கு போடுகிறாராம்.. எப்படியும் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடிக்கு செக் வைக்க நேர்ந்தால், நிலைமை இன்னும் சாதகமாகும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்..

பாஜக

பாஜக

அதுமட்டுமல்ல, சசிகலா தலையெடுப்பதை பாஜக விரும்பவில்லை என்றும் சொல்லப்பட்டது.. காரணம், சசிகலாவுக்கு தென்மண்டலங்களில் மட்டுமே ஆதரவு இருப்பதால், அவருக்கு சப்போர்ட் செய்வதிலும் பாஜக ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டது.. இப்போது தன்னுடைய மைனஸையே சசிகலா தரப்பு பிளஸ் ஆக மாற்றும் முயற்சியாகவே இந்த அதிரடி மூவ் பார்க்கப்படுகிறது.. ஆக மொத்தம் சசிகலாவின் ராஜதந்திரம் ஒர்க் அவுட் ஆகிறதா என்று பார்ப்போம்..!

English summary
Will senior leader vaithyalingam join with vk sasikala and what will edapadi palanisamy do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X