ஆன்லைன் ரம்மி தற்கொலைகள் அதிகரிப்பு.. ஆளுநர் செல்லும் இடங்களில் கருப்புக்கொடி காட்டுவோம்.. முத்தரசன்
ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டப்படும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்டப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதாவை 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
அதேபோல் மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில சட்டப்பேரவை சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்று பதில் அளித்துள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியதால், ஆளுநர் ஆர்.என்.ரவியை பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் அமமுக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் விமர்சித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

சிபிஐ ஆர்ப்பாட்டம்
அதுமட்டுமல்லாமல் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார்.

ஆர்எஸ்எஸ் தூதுவர்
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கூறியதாவது: 44 பேர்களின் உயிரை பலி வாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தமிழ்நாடு ஆளுநரை திருப்பி அனுப்பும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் அவர், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தூதுவராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

கருப்புக் கொடி காட்டுவோம்
ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனை தடுக்க வேண்டிய ஆளுநர், சூதாட்ட நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தற்கொலையை தூண்டும் விதமாக செயல்படுகிறார். உடனடியாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லை என்றால் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புகொடி காட்டுவோம் என்று தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications