முஸ்லிம்கள் குறித்து அவதூறு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது ஆகிறாரா? போலீசில் இஸ்லாமிய அமைப்பு புகார்
சென்னை: சென்னை ராயபுரத்தில் அண்மையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் தி.மு.க. பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்லாமியர்களை அவதூறாக விமர்சித்திருந்தார். இந்தவிவகாரம் இஸ்லாமியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்பு புகார் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் அண்மையில் ரம்ஜான் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த இஃப்தார் விருந்தில் பங்கேற்ற நடிகர் விஜய், அனைவருடனும் சேர்ந்து தொழுகையும் நடத்தினார். பின்னர் அனைவருக்கும் இஃப்தார் விருந்து வழங்கினார். சுமார் 5 ஆயிரம் பேர் வரை இப்தார் விருந்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்யை திமுகவினர் பலர் அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து வந்தார்கள்.

இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளராக (இப்போது இல்லை) சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்யை அவதூறாக விமர்சித்து பேசினார். இஸ்லாமியர்கள் குறித்தும் இழிவான ஒரு சொல்லைப் பயன்படுத்தினார். இந்த இழிவான விமர்சனத்துடனான சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
அதேநேரம் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின. இந்த போராட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தந்தன. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைமைக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதையடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது அக்கட்சி தலைமை.
இதனிடையே சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தாம் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராயபுரம் மேற்கு பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கருணாநிதி, இஸ்லாமிய மக்களுக்கும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும் என்ன என்ன சாதனைகள், உதவிகளை செய்திருக்கிறார் என பட்டியலிட்டுப் பேசினேன். அப்போது முஸ்லிம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றி, முஸ்லிம்களால் எனக்கு ஆபத்து இருக்கிறது என பாதுகாப்பு கேட்ட நடிகர் விஜய் அவர்களை தோலுரித்து காட்டும் முகமாக நான் பேசும் போது, முஸ்லிம் மக்களை நான் ஏதோ இழிவுபடுத்திவிட்டதாக கருதிக் கொள்கின்றனர்.
அதை சில பேர் இட்டுக்கட்டி பரப்புரை செய்கின்றனர். நான் வாழ்கின்ற பகுதி முஸ்லிம்கள் நிறைந்த பகுதி. என் வீட்டில் அருகே இருப்பது மசூதி., எனக்கு ஓட்டுநராக, கண்காணிப்பாளர்களாக முஸ்லிம் மக்களே இருக்கின்றனர். முஸ்லிம் மக்கள் மீது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் இல்லை. நான் ஆதங்கத்தில்தான் பேசினேன்; அதில் வார்த்தை தடுமாறி இருந்தால் அதற்காக என் வருத்தத்தைப் பதிவு செய்கிறேன் என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
எனினும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய சர்ச்சை 'வீடியோ' சமூக வலைத்தளங்களில் இன்னும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று புகார் மனு அளித்தார்.
முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நடிகை குஷ்பு பற்றி அவதூறாக பேசியதற்காக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தி.மு.க.வில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.ஆனால் தற்போது நிரந்தரமாக திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பக்ரீத் பண்டிகை.. நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்.. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications