இந்தியாவிற்கு வரப்போகும் பெரிய கை.. தமிழ்நாடு முறையாக திட்டமிட்டால்.. திமிங்கலத்தை தட்டி தூக்கலாம்
சென்னை: டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் இந்த மாதம் இந்தியா வர உள்ள நிலையில், டெஸ்லா முதலீடு தமிழ்நாடு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெஸ்லா இவி வாகன உற்பத்தி தமிழ்நாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியா வரும் எலான் மஸ்க்கை சென்னைக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இவி வாகனங்கள் தொடர்பான அனைத்து விதமான முதலீடுகளையும் ஒரே விண்டோவின் மூலம் செய்து முடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஒரு இவி நிறுவனம் முதலீடு தொடங்கி கட்டுமானம் முடிந்து விற்பனை வரை அனைத்திற்குமான அனுமதியை ஒரே இடத்தில் இருந்து பெற முடியும்.
தமிழ்நாட்டில் இவி வாகன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த மாதம் ஒரு குழுவை இந்தியாவில் உள்ள இடங்களை ஆய்வு செய்ய அனுப்ப உள்ளது. 2-3 பில்லியன் டாலர் செலவில் அமைய உள்ள மின்சார கார் ஆலைக்கு இடம் கண்டுபிடிக்க இந்த குழுவை அனுப்ப அனுப்ப உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இந்த குழு சோதனை செய்யும்.
இதன் மூலம் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாக தொடங்கி உள்ளன.
இந்தியா மற்றும் பல்வேறு தெற்காசிய நாடுகளில் டெஸ்லா கார்களை விற்பனை செய்ய எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதற்காக ஆசியாவில் உற்பத்தி செய்ய அவர் திட்டமிட்டு வருகிறார். சீனாவின் உற்பத்தியை மேலும் பெருக்க அவர் விரும்பாத நிலையில் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. அதன்படி 2-3 மில்லியன் டாலருக்கு வாகனம், செமிகண்டக்டர் என்று பல்வேறு உற்பத்திகளை டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் செய்ய உள்ளது.
மின்சார வாகனங்கள்: உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.
அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இ வாகனங்களை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் அனைத்திற்கும் இலவச பர்மீட் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பேட்டரி மூலம் இயக்கப்படும் அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும், மெத்தனால் அல்லது எத்தனால் எரிபொருளில் இயக்கப்படும் பயணிகள் வாகனங்களுக்கும், போக்குவரத்து துறையின் பர்மீட் கட்டணமின்றி வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வரும் மின்சார சுற்றுலா வாகனங்களுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளது.
சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாய்ண்ட் இயங்கும்.வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலீடு: இந்த நிலையில்தான் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாக தொடங்கி உள்ளன. தமிழ்நாடு அரசு இ வாகனங்களுக்கான கொள்கைகளை சமீபத்தில் வெளியிட்டு அதற்கான சலுகைகளையும் உடனுக்குடன் அறிவித்து உள்ளது. இந்த சலுகைகள் வழியாக டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான தீவிரமான முயற்சிகளில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழிற்துறை அதிகாரிகள் தீவிரமான ஆலோசனைகளை செய்து வருவதாகவும் தொழிற்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா கார், பேட்டரி மூலம் இயங்க கூடிய கார்களில் உலகில் முதன்மையான காராக இருக்கிறது. அதேபோல் இதன் நிறுவனர் எலான் மஸ்க் உலகில் முக்கியமான தொழில் அதிபராக இருக்கிறார். இவர்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலோர மாநிலங்கள்: கடலோர மாநிலங்களை இதற்காக டெஸ்லா கவனித்து வருகிறதாம். பல்வேறு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக டெஸ்லாவின் கிகா தொழிற்சாலையை இந்தியாவின் எதாவது ஒரு கடலோர சிட்டியில் அமைக்க டெஸ்லா ஆலோசனை செய்து வருகிறது. இப்போதைக்கு சென்னை, குஜராத் ஆகியவை டெஸ்லாவின் லிஸ்டில் உள்ள பகுதிகள் ஆகும். இவற்றில் ஒன்றை டெஸ்லா டிக் செய்ய வாய்ப்புகள் உள்ளதாம்.












Click it and Unblock the Notifications