ரொம்ப பெரிய சிக்கல்.. தமிழ்நாடு பெட்ரோல் பங்கில் ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படுமா? - வெளியான தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ. 2000 நோட்டுகள் வாங்கப்படுமா என்பது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் ரூபாய் நோட்டை மாற்றும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2016 பணமதிப்பிழப்பு நீக்கத்திற்கு பின் மீண்டும் இந்த முறை மக்கள் பணத்தை மாற்ற தீவிரமாக முயன்று வருகிறார்கள்.
2016ல் 500.,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த முறை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. வங்கிகளில் 2000 ரூபாய்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் எந்த வங்கியிலும் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அல்லது இன்று முதல் தங்கள் சொந்தக் கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.
2000 ரூபாயை மாற்றும் வசதி செப்டம்பர் 30, 2023 வரை இருக்கும் என்று ஆர்பிஐ தெரிவித்து உள்ளது . ரூ.2000 கரன்சி நோட்டுகள் செப்டம்பர் 30க்குப் பிறகும் சட்டப்பூர்வமான டெண்டராகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதன் அர்த்தம் இந்த பணம் செல்லுபடியாகாது என்பதல்ல. இந்த பணம் செல்லுபடியாகும். கையில் உள்ளவர்கள் பணத்தை கடைகள் எப்போதும் போல வாங்கிக்கொள்ள வேண்டும்.
அதை வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த நிலையில், தமிழ் நாட்டில் முக்கிய அரசு சேவைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுமா என்ற விவரம் வெளியாகி உள்ளது.
மக்கள் முயற்சி: இந்த நிலையில் மக்கள் பலரும் பெட்ரோல் பங்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்று வருகின்றனர். ஆனால் பல பெட்ரோல் பங்குகளில் 2 ரூபாய்களை ஊழியர்கள் வாங்கிக்கொள்வது இல்லை.
இதனால் மக்கள் பலரும் அவதிப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ. 2000 நோட்டுகள் வாங்கப்படுமா என்பது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க பெட்ரோலிய வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுக்கும் போது சிலர் வெறுமனே 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறார்கள். அப்படி செய்ய கூடாது.

கொஞ்சமாவது கூடுதலாக பெட்ரோல் போட வேண்டும். அப்போதுதான் எங்களுக்கும் சில்லறை பிரச்சனை வராது. பலர் இப்படி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதால் எங்களுக்கும் சில்லறை பிரச்சனை ஏற்பட்டு உள்ளது என்று பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
வங்கியில் மாற்றலாம்: திரும்ப பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை இன்றில் இருந்து வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்
2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் எந்த வங்கியிலும் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அல்லது இன்று முதல் தங்கள் சொந்தக் கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.
எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். 20 ஆயிரம் ரூபாய் வரை ஒரு நாளுக்கு மாற்ற அடையாள அட்டை தேவை கிடையாது.
அதற்கு மேல் ஒரு நாளில் மாற்ற வேண்டும் என்றால் அடையாள அட்டை தேவை. இந்த நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும். அதன்பின் இந்த பணம் மொத்தமாக புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications