Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீசர்தான்.. இனி மெயின் பிக்சர்! ராஜகண்ணப்பன் இலாக்கா மாற்றம்! ஜெ ஸ்டைலில் முதல்வரின் அடுத்த ஆக்சன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாக்கா மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என்றும் அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழ தொடங்கி உள்ளன. அதோடு இலாக்கா மாற்றம் மட்டுமின்றி வேறு நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ராஜேந்திரன் முதுகுளத்தூர் ஒன்றிய நிர்வாகி ஒருவரை ஜாதி ரீதியாக திட்டியதாக எழுந்த புகாரை அடுத்து ராஜகண்ணப்பன் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ராஜகண்ணப்பன்

ராஜகண்ணப்பன்

ராஜகண்ணப்பன் இலாக்கா இப்போது மாற்றப்பட்டு இருந்தாலும் கூட முன்பே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வந்தன. விசிக தலைவர் எம்பி திருமாவளவனை அவமதித்ததாக எழுந்த புகாரின் போதே இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்விகள் எழுந்தன. போக்குவரத்துத்துறையின் துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டு, அங்கு கைப்பற்ற பணம் காரணமாகவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற கேள்விகள் எழுந்தன.

 அமைச்சரவை

அமைச்சரவை

ஆனால் அப்போது இந்த விஷயம் ஆறப்போடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணப்படுகிறார். அதன்பின் அவர் டெல்லிக்கு செல்வார். இந்த பயணம் முடிந்ததும் கண்டிப்பாக அமைச்சரவையில் நிறைய மாற்றங்கள் இருக்கும். ராஜகண்ணப்பன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அதற்கு முன்பாகவே அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரின் இலாக்கா மாற்றப்பட்டுள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

ஆனால் அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொடுக்கப்பட்டு இருந்தாலும், அதுவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. அவர் பிற்படுத்தப்பட்ட மக்களை சரியாக நடத்துவது இல்லை. ஆனால் அவருக்கு போய் அதே துறையை கொடுக்கிறார்களே என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதிலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுதான் சமூக நீதி அரசா.. இலாக்கா மாற்றம் என்பதுதான் உங்கள் நடவடிக்கையா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

கேள்வி மேல் கேள்வி

கேள்வி மேல் கேள்வி

இதே கேள்வியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் எழுப்பி உள்ளார். இன்று ராஜ கண்ணப்பன் அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி அரசு அறிவித்துள்ளது! சாமானிய மக்களுக்கும் இதே சட்டம் பொருந்துமா? வழக்குப் பதிவு செய்யாமல் துறை மாற்றுதல் எந்த மாதிரியான முடிவு? அமைச்சர் மேல் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, உண்மையான நியாயம் கிடைக்க வேண்டும் என்று இந்த அரசு விரும்பினால் ராஜ கண்ணப்பன் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும், என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தற்காலிகம்

தற்காலிகம்

இந்த நிலையில்தான் அமைச்சரவை இலாக்கா மாற்றம் என்பது தற்காலிக நடவடிக்கைதான். விரைவில் பெரிய நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மீது வழக்கு பதியப்படுமா என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு செல்கிறார். ஏப்ரல் 2ம் தேதி வரை அவர் பிசியாக இருப்பார். அவர் தமிழ்நாடு திரும்பி வந்த பின் இது தொடர்பான முடிவுகளை எடுப்பார். அவசர கோலத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

 டீசர்தான்

டீசர்தான்

இலாக்கா மாற்றம் என்பது டீசர்தான்.. ஜெ பாணியில் முதல்வர் ஸ்டாலின் திரும்பி வந்ததும் முக்கிய நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் தனக்கு கொடுக்கப்பட்ட இலாக்கா பிடிக்கவில்லை என்று அதிருப்தியில் இருக்கிறாராம். அவருக்கு பெரிய இலாக்காவை ஒதுக்கும் வகையிலும், சில இலாக்காக்களை மொத்தமாக மாற்றும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின் முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

உதயநிதி

உதயநிதி

எம்எல்ஏ உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று குரல்கள் கேட்ட வண்ணம் இருந்தன. ஆனால் அந்த குரல்கள் இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது. இருப்பினும் இந்த நேரத்தில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது சந்தேகம்தான் என்றும் கூறுகிறார்கள். அமைச்சரவை, எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி முதல்வர் ஸ்டாலின் முக்கியமான முடிவுகளை எடுப்பார். டெல்லி கூட்டத்திற்கு பின் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+