இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபான விற்பனை முறையில் பெரிய மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அண்டை மாநிலங்களில் இருப்பதைப் போல மதுபான விற்பனையை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்கும் வாய்ப்பு குறித்து அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மதுபான விற்பனை முழுமையாக டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்ந்தாலும், டாஸ்மாக் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

TASMAC Vijay Tamil Nadu

குறிப்பாக, மதுபான கொள்முதல் முதல் விற்பனை வரை பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மதுக் கொள்கையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

விஜய் அரசு

பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டதாகக் கூறப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டார். இதையடுத்து அந்த கடைகள் மூடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் நிர்வாகத்தில் மேலும் சீர்திருத்தங்களை கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது. தலைமைச் செயலக வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, தமிழகத்தில் மாதந்தோறும் சுமார் 50 லட்சம் பெட்டிகள் மதுபானங்களும், 35 லட்சம் பெட்டிகள் பீர் வகைகளும் விற்பனையாகின்றன.

தனியார்மயமாகும் டாஸ்மாக்

எந்த பிராண்ட் அதிகமாக விற்பனையாகிறதோ, அதனை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில நிறுவனங்கள் தங்களது பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு முறைகளை கையாள்வதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்கும் நோக்கில் மதுபான விற்பனை முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கருத்து அதிகாரிகள் தரப்பில் வலுத்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, தனியார் நிறுவனங்கள் மூலம் விற்பனையை மேற்கொண்டு, அரசின் கட்டுப்பாட்டை ஒழுங்குமுறை மற்றும் வருவாய் கண்காணிப்பில் மட்டுமே வைத்திருக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுக்கொள்கை

சமீபத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் டாஸ்மாக், உள்துறை, நிதித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தற்போதைய மதுபான விற்பனை அமைப்பில் உள்ள சவால்கள், வருவாய் வாய்ப்புகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுபான நிறுவனங்கள்

மேலும், தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் மதுபான உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைத்து, போட்டியை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மதுபானங்களை அதிக அளவில் சந்தைக்குள் கொண்டு வருவது, வரி கட்டமைப்பை மறுசீரமைப்பது, போலி மதுபான விற்பனையை கட்டுப்படுத்துவது போன்ற அம்சங்களும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுவிற்பனை

அதே நேரத்தில், டாஸ்மாக் விற்பனையை தனியார்மயமாக்குவது எளிதான முடிவாக இருக்காது என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர். மதுவிற்பனையை அரசு நேரடியாக நடத்துவதை நிறுத்தினால் அதற்கு அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் எழலாம். சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் விமர்சனங்களையும் அரசு எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம்.

முதல்வர் விஜய்

இதனால், தற்போது எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் விஜயுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே இறுதி கொள்கை முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+