உச்சம் பெற்ற தேஜ் புயல்.. தமிழ்நாட்டில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னை: அரபிக்கடலில் உருவாகி இருக்கும் தேஜ் புயல் தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி மக்கள் இடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.
அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் மிக தீவிர புயலாக வலுவடைந்து உள்ளது. இந்த புயலுக்கு சாதகமான சூழ்நிலை தற்போது தீவிரமாகிக்கொண்டு இருக்கிறது. தென்மேற்கு அரபிக் கடலில் தேஜ் புயல் மையம் கொண்டிருக்கிறது. அரபிக் கடல் தேஜ்புயல் இன்று அதிதீவிர புயலாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆழ்க்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அக்டோபர் 26ம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 25ம் தேதி அதிகாலை ஓமன்-ஏமன் இடையே புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாதிக்குமா ?: ஓமன், ஏமன் கடற்கரைகளுக்கு இடையே கரையை கடப்பதால், தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரபிக்கடலில் இருப்பதால் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூட மழை பெய்யாது. ஏனென்றால் புயல் எதிர் திசையில் செல்கிறது.
( அச்சறுத்தும் தேஜ் புயல்.. நடுக்கடலில் நடந்த 3 சம்பவங்கள்.. மொத்தமாக எல்லாம் மாறுதே.. வானிலையில் ஷாக்)
வானிலை மையம்: தமிழ்நாடு மழை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று 21 அக்டோபர் 2023 துவங்கியுள்ளது. 20-10-2023 காலை தென்மேற்கு மற்றும் அதனை வட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி 21-10-2023 காலை 0830 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது 22-10-2023 வாக்கில் மத்தியமேற்கு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை "தேஷ்" புயலாக வலுப்பெற்று தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த மூன்று நான்கு தினங்களில் மிக தீவிர புயலாக வலுப்பெற்று ஏமன் மற்றும் ஓமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும்

22.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிசு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23.10.2073 மற்றும் 24.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.10.2023 சமதல் 27.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும், என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications