"இடிக்குதே".. திமுகவா?.. சர்வே முடிவில் எல்லாம் சரி.. "இது" நம்ப முடியலையே.. அவ்ளோ "வீக்"கா அவங்க!

திமுக வடமாவட்டங்களில் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் வடக்கில் திமுகவுக்கு மிக மிக அதிக தொகுதிகள் கிடைக்கும் என சொல்லியுள்ளனர். அதேசமயம், அதிமுக கூட்டணிக்கு குறைவாகவே கிடைக்கும் என்றும் சொல்லி உள்ளனர்.. இந்த விஷயம்தான் "இடிக்கிறது"...!

இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் எனர்ஜி தரக்கூடிய ஒரே கட்சி பாமகதான்.. பாமகவுக்கு எவ்வளவு வலிமை உள்ளதோ, அவ்வளவையும் பாஜக துடைத்தெறிந்துவிடும் என்பது வேறு விஷயம்.. ஆனால், பாமகவை சரிக்கட்ட அதிமுக எடுத்து கொண்ட சிரத்தையை இந்த தமிழ்நாடே கடந்த மாதம் கண்கூடாக பார்த்தது.

தமிழகத்தில் 20 மக்களவை தொகுதிகள் மற்றும் வடக்கு, மேற்கில் உள்ள சில தொகுதிகள் உள்ளிட்டவற்றில், வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கின்ற சமுதாயமாக வன்னியர்கள் எப்போதுமே இருக்கிறார்கள். ஆட்சியை நிர்ணயம் செய்யக்கூடிய அளவுக்கு வாக்கு வங்கி நிரம்பியவர்கள் இவர்கள்.

 கணிப்புகள்

கணிப்புகள்

அதனால்தான், வடமாவட்டங்களில் பாமகவில் செல்வாக்கு ஸ்திரமாக இருக்கிறது.. சமூக நீதியை முன் வைத்துதான் ஆரம்பத்தில் பாமக களம் இறங்கினாலும், அப்போது முதல் இப்போது வரை ஏற்ற இறக்கத்துடன் வாக்கு வங்கியை தக்க வைத்தும் வருகிறது. இதுபோதாதென்று, இடஒதுக்கீடு அரசியலை தூக்கி பிடித்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் டாக்டர் ராமதாஸ்.. இதனால் மற்ற சமுதாயத்தினரின் அதிருப்தியை அதிமுக தலைமை சம்பாதித்து வந்தாலும், வடமாவட்டங்களில் அனுகூலமாகவே இருந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

 வடக்கு மண்டலம்

வடக்கு மண்டலம்

இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்று புதிய தலைமுறை கருத்து கணிப்பை வெளியிட்டது.. வடமாவட்டங்களில் திமுகவுக்கு வெற்றி என்ற ரீதியில் கணிப்பு வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் வடக்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு 19-24 இடங்கள் கிடைக்கும், ஆனால் தமிழகத்தில் வடக்கு மண்டலத்தில் திமுகவுக்கு 54-59 இடங்கள் கிடைக்கும். இதுவரை இல்லாத அளவிற்கு வடக்கு மாவட்டங்களில் திமுக அதிக இடங்களை வெல்ல போவதாக கணிப்பு தெரிவித்துள்ளது.

 உண்மையா?

உண்மையா?


இது ஏற்கும்படியாக இல்லை.. நம்பும்படியாகவும் இல்லை.. திமுகவுக்கு வடமாவட்டங்களில் செல்வாக்கு இருப்பது உண்மையே.. மறுக்க முடியாது.. துரைமுருகன், ஜெகத்ரட்சகன், போன்ற வன்னிய சக்திகள் திமுகவுக்கு ஆதரவாக இருந்தாலும் பாமகவை மிஞ்ச முடியுமா என்பதும் கேள்விக்குறிதான்.. அல்லது வேல்முருகனை நம்பியே வடமாவட்டங்களில் இந்த வெற்றியை திமுக பெறுமா என்பதும் சந்தேகம்தான்..

 விஜயகாந்த்

விஜயகாந்த்

வேண்டுமானால், அந்த பகுதியில் உள்ள முதலியார், உடையார் போன்ற சமூகத்தினர் ஏற்கனவே அதிமுக மீது அதிருப்தியில் உள்ளதால், அந்த ஓட்டுக்கள் வேண்டுமானால் திமுக பக்கம் திரும்பக்கூடும்.. அல்லது விஜயகாந்த் இல்லாததால், அவரது ஓட்டுக்கள் வேண்டுமானால் திமுகவுக்கு சாதகமாக கூடும்.. அல்லது காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களை வேல்முருகன் திமுக பக்கம் திருப்பிவிடக்கூடும்.

 நிலவரம்

நிலவரம்

எப்படி பார்த்தாலும், இது ஓரிரு சதவீத அளவிலேயே மாற்றத்தையும், ஏற்றத்தையும் உண்டாக்குமே தவிர, அதிமுக கூட்டணியை காலி செய்யும் அளவுக்கு கிடையாது என்பதே நிஜ கள நிலவரம். அந்த வகையில் வடக்கில் திமுக அதிக இடங்களைப் பெறலாம்.. அதேசமயம், பாமகவை முற்றிலும் காலி செய்து விட்டுப் பெறுமா என்பது கேள்விக்குறிதான்.. பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+