கொஞ்சம் பிரேக் எடுக்கும்னு பார்த்தா.. புயலா! அந்தமான் அருகே ஏற்படும் "மாற்றம்"! நேரா இங்கதான் வருது?
சென்னை: அந்தமான் கடல் பகுதியில் ஏற்படும் மாற்றம் காரணமாக தமிழ்நாட்டிற்கு மீண்டும் ஒரு மழை எபிசோட் ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த மாத தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்தது.
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கை நிலப்பகுதிக்கு மிக அருகில் இருந்தது. இதனால் ஏற்பட்ட காற்று காரணமாக முதலில் சென்னையில் மழை பெய்தது.

மேகங்கள்
அதன்பின் மேகங்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி சென்றன. இதன் காரணமாக தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. ஆனால் இது இலங்கை நிலப்பரப்பிற்கு மிக அருகில் இருந்தது. இதன் காரணமாக இது புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ மாறவில்லை. அதன்பின் இன்னொரு தாழ்வு நிலை இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்டது. முன்னர் ஏற்பட்ட சுழற்சி காரணமாக உருவான காற்று, இந்த தாழ்வு நிலை இணைந்து தாழ்வு பகுதியாக உருவானது.

மழை
இது பின்னர் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக உருவானது. நேற்று வரை தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்ய இந்த தாழ்வு பகுதிதான் காரணமாக இருந்தது. ஆனால் இந்த தாழ்வு பகுதி கரையை கடந்துவிட்டது. இதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற முடியவில்லை. அந்த தாழ்வு பகுதி அப்படியே வலுவிழந்துவிட்டது. இந்த இரண்டுமே புயலாக மாறவில்லை. புயலாக மாறுவதற்கான போதுமான வெப்பநிலை நிலவியது.

ஆழ்ந்த தாழ்வு பகுதி
ஆனால் போதிய நேரம் இல்லை. அதேபோல் இவை நிலபரப்பிற்கு மிக அருகில் இருந்தது. இந்த நிலையில்தான் அந்தமான் கடல் பகுதியில் ஏற்படும் மாற்றம் காரணமாக தமிழ்நாட்டிற்கு மீண்டும் ஒரு மழை எபிசோட் ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி வரும் நவம்பர் 16 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. புதிய தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

போதிய நேரம் இல்லை
இந்த தாழ்வு பகுதி இலங்கையில் இருந்து தூரமாக அந்தமான் கடல் அருகே ஏற்பட உள்ளது. இதனால் அது புயலாக மாறும் வாய்ப்புகளும் உள்ளன. அதாவது இது புயலாக அல்லது வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இன்னும் இது உறுதி செய்யப்படவில்லை.ஆனால் பெரும்பாலும் இந்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கித்தான் வரும் என்று வானிலை மாடல்கள் தெரிவிக்கின்றன.

வெப்பநிலை
போதிய வெப்பநிலை இருக்கும் பட்சத்தில் இது புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது 26 டிகிரி செல்சியசுக்கு மேல் மேலடுக்கு சுழற்சியின் மையத்தில் வெப்பநிலை நிலவ வேண்டும். கடந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஏற்பட்ட மழை இன்றோடு முடிவிற்கு வரும். தென் மாவட்டங்களில் சிலவற்றில் நாளை ஒருநாள் கூடுதலாக மழை பெய்யலாம். மற்றபடி இன்னும் ஒரு வாரத்திற்கு மழை இருக்காது. 16ம் தேதி உருவாகும் தாழ்வு பகுதி காரணமாக 20-21ம் தேதிகளில் தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications